மீண்டும் அழகாக உதவுங்களேன் தோழிகளே...

எனக்கு திருமணம் முடித்து 4 வருடத்தின் பின் குழந்தை கிடைத்து குழந்தைக்கு 1 வயசு ஆகுதுங்க.பால் கொடுப்பதை நிருத்திவிட்டேன்.இப்ப எனக்கு 25 வயது.குழந்தை கிடைக்க முன் அழகாய் மெலிவாய் இருந்தேன்.என் கணவரும் என்னயே சுற்றி சுற்றி வந்தார்.இப்ப கொழுத்து தொப்பை போட்டு மார்பு தொங்கிய நிலையில் வயிற்றை தொட்டு கொண்டு மிகவும் அசிங்கமாய் இருக்கு.தொப்பை குறைய பயிற்சி தொடங்கிடேன்.ஆனால் மார்புக்கு என்ன செய்ற்து என்று தெரியல.அது மீண்டும் பழைய மாதிரி வராதா?அதுக்கு ஏதும் பயிற்சி இருக்கா?தயவு செய்து உதவுங்க.யாரிடமும் கேட்க வெட்கமாய் இருக்கு.வெட்கத்தில் என் கணவர் கிட்ட கூட நான் நெருங்குவதில்லை.

ஒரு அடி தள்ளி நின்று இரு உள்ளங்கைகளையும் சுவரில் வைத்து ,கையை அசைக்காமல் சுவர் பக்கம் வரவும். மீண்டும் கையை அசைக்காமல் தள்ளி நிற்கவும். இப்படி 30 முறை செய்யவும்.

மேலும் சில பதிவுகள்