நலம் நலமறிய ஆவல்.....

நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்..

என்ன ஆச்சு நம்ம அரட்டைக்கு?எல்லாரும் எல்லோருடனும் எல்லா சமாசாரங்களையும் பேசிக்கிட்டு டீ,காபி,பரோட்டா எல்லாம் சாப்பிட்டுக்கிட்டு நல்லாதானே நடத்திக்கிட்டு இருந்தோம்!!இப்போ ஆளே இல்லாம ஈஈஈஈஈஈஈஈஈஈ ஓட்டுது!வாங்க வாங்க எல்லாரும் வந்து பேசி பழகலாம்.அப்புறம் நான் அழுதுடுவேன் சொல்லிட்டேன்.நம்ம மக்கள் கூட எல்லாம் ஜாலியா பேசி எவ்வளவு நாள் ஆச்சு?

வனி,ரேவதி,சுவர்ணா,தேவி,பசரி,சங்கீ,சஜன்,வித்யா,ஜெயா,ராஜீ,கல்ப்ஸ்,யாழினி,ரேணுகா,சபீனா,மெர்சானா மற்றும் பலர்...எல்லாரும் வாங்கப்பா.நான் முதன் முதலில் இழை ஆரம்பிச்சு இருக்கேன்,கொஞ்சம் எல்லாரும் வந்து இழையை சிறப்பா நடத்திக்கொடுங்க பார்ப்போம்!

இதுவும் கடந்துப் போகும்.

அஸ்வினி, எப்படி இருக்கீங்க? இத்தனை பேரை கூப்பிடிருக்கீங்க. பாவம் உங்களுக்கு மூச்சு வாங்கும். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க. இந்த இழை மருத்துவ இழையா அஸ்சு? தலைப்பு அப்படி இருக்கே.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நல்லாயிருக்கீங்களா?. முதல் இழை ஆரம்பித்துள்ளதற்க்கு வாழ்த்துக்கள்...

அன்புடன்
THAVAM

வாங்கப்பா..நீங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி.எல்லாரையும் பார்த்து ரொம்ப நாள் ஆச்சுப்ப்பா,அதான் அன்பா ஒரு மடல் வரைஞ்சேன்.

இதுவும் கடந்துப் போகும்.

வனி,ரேவதி,சுவர்ணா,தேவி,பசரி,சங்கீ,சஜன்,வித்யா,ஜெயா,ராஜீ,கல்ப்ஸ்,யாழினி,ரேணுகா,சபீனா,மெர்சானா........etc

நான் கர்பிணிப்பெண்கள் பகுதியில் ஒரு சந்தேகம் கேட்டு இருக்கிறேன். யாராவது அந்த அனுபவம் உள்ளவர்கள் பதில் சொல்லுங்கப்பா?

ராஜி

ராஜி, இந்த சமயத்தில் இது சகஜமான ஒன்று தான். பயம் வேண்டாம். தரையில் உட்காரும் போது கூட கால்களை சமநிலையில் வைக்காமல் தலையணை போன்ற உயரமானவற்றை கால்களுக்கு வைக்கவும். சிறுகீரை,அரைகீரை இந்த சமயத்தில் அதிகம் உண்பது நல்லது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எல்லோரும் நலமே/ நலம் விசாரித்தலுக்கு நன்றி அஸ்வின். மெர்ஜானாக்கு இன்னேரம் குழந்தை பிறந்திருக்கும் . நலமுடன் திரும்பிவர இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.எல்லாருடய கவனமும் பேய் படம் பாக்க போயாச்சு அதான் ஒருத்தரும் காணோம் பயம் தெளிஞ்சு வரட்டும்

நலம் அறிந்ததில் சந்தோஷம்.ஓ!! நல்ல விஷயம்,மெர்சானாவுக்கு என்னுடைய பிரார்த்தனையும் சேரட்டும்.காஞ்சனாவைவிட இங்க அறுசுவையில திகில் படம் ரொம்ப சூப்பரா போகுதுபோல,இருக்கட்டும்,கொஞ்சம் எல்லாரையும் இந்த பக்கம் வரவைங்கப்பா!ரொம்ப நாள் ஆச்சு அரட்டை அடிச்சு.

இதுவும் கடந்துப் போகும்.

அதெல்லாம் இல்லை அவங்க ஒரே முடிவோடதான் இருக்காங்க. .அருசுவைமெம்பர்களை தூங்க விடக்கூடாதுன்ன்னு. எனக்கு தெரிஞ்சு போச்சு. இனி அருசுவை இருக்கும் காலம்முட்டும் திகில் தொடரும் இருக்கும். இதுக்கு முடிவு கிடையாது. வேர நல்ல டாபிக் ஒன்னு ஆரம்பிங்கப்பா

ஹாய் அனைவருக்கும் இந்த புன்னகை ன் அன்பு வணக்கங்கள்.. எல்லோரும் நலமா?

வாழ்த்துக்கள் அஸ்வினி ..

நானும் வந்தாச்சு..

எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை

மேலும் சில பதிவுகள்