Saudi Arabia பற்றி தெரிய வேண்டும்

என் கணவருக்கு Saudi Arabia(Riyath) வில் வேலை கிடைத்து இருக்கிறது. எனக்கு Saudi Arabia வில் வாழ்க்கை, குழந்தைகள் படிப்பு(3 வயது), பொழுது போக்கு, செலவு விவரம் (வீட்டு வாடகை, இதர செலவுகள்) பற்றி யரேனும் கூறுங்கள்.

நித்யா நான் சவுதில தான் இருக்கேன் நல்ல ஊர் தான் அடுத்த பதிவில் வந்து விவரமா சவுதி பற்றி சொல்கிறேன். நான் தமாமில் இருக்கேன் தமாம் விட ரியாத் மிகவும் அருமையாக இருக்கும் நான் போயிருக்கேன் கவலை படாமல் வாங்க

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. அடுத்த விவரமான உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

நித்யா... நான் கோபார் - ல் இருக்கேன்... சவூதி அரேபியா நல்லாத்தான் இருக்கும்... நிறைய இந்தியர்கள் இருக்காங்க... குழந்தைகளுக்கு இந்தியன் ஸ்கூல் இருக்கு... வீட்டு வாடகை நீங்க இருக்கும் இடம் பொறுத்து... உங்க கணவருக்கு கம்பெனில housing allowance தராங்கனா இன்னும் சவுகரியம்... இல்லைனாலும் பரவால்ல... ஓரளவுக்கு கம்மியாவே கிடைக்கும்... அவரோட சம்பளம் பொறுத்து நீங்க வீடு எடுத்துக்கலாம்... மத்தபடி நல்லாதான் இருக்கும்.. வெளில போகும்போது லேடீஸ் கண்டிப்பா பர்தா அணியணும்... நம்ம ஊர்ல கிடைக்கற எல்லா மளிகை மற்றும் காய்கறியும் கிடைக்கும்... சில கீரைகள் தவிர...வேற ஏதாவது இருந்தா கேளுங்க...

வித்யா பிரவீன்குமார்... :)

தங்கள் பதிலுக்கு நன்றி. மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

சவுதி (Riyadh) இல் மாதம் எவ்வளவு சம்பளம் வாங்கினால்
சரியாக இருக்கும்? வெளியில் செல்லும் பெண்கள் படுதா அணிய வேண்டுமா? வெளியில் செல்லும் போது ஆண்களுடன் தான் செல்ல வேண்டுமா? வேறு என்ன என்ன நிபந்தனைகள் வழக்கதில் உண்டு? அங்கு குழந்தைகள் படிக்க இந்தியன் பள்ளிகள் உள்ளனவா?

ஹாய் நித்யா நலமா சவுதி அரேபியா ரொம்பவும் அருமையான நாடு நான் அங்கு ரஹிமாவில் சில காலம் இருந்தேன் அங்கு இருந்த அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது இந்தியப் பள்ளி இருக்கிறது பர்தா அணியவேண்டும் ஏன் என்றால் மற்ற ஆண்களின் கள்ள பார்வையிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக நல்ல விஷயம் தானே அப்புறம் மற்ற எல்லாமே அங்கு கிடைக்கும் தாய் தந்தையை தவிர கவலைப் படாமல் செல்லுங்கள் கணவருடன் தனி வாழ்க்கையை சுகமாக அனுபவியுங்கள் வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்