துணிபையில் பேட்ச் ஒர்க் செய்வது எப்படி?

தேதி: July 30, 2011

5
Average: 4.3 (12 votes)

 

துணி பை
ப்ளெயின் காட்டன் துணி (விரும்பியநிறத்தில்)
தையல் மிஷின்
ஊசி
நூல்
காட்டன்
பழைய பனியன் துணி

 

இலைகளுக்கு பச்சைநிற ப்ளெயின் காட்டன் துணி எடுத்துக் கொள்ளவும். அல்லது பச்சைநிற பனியன் இருந்தால் அதன் காலர் பகுதியை மட்டும் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். விரும்பிய ப்ளெயின் துணியில் 30 செ.மீ நீளம், 6 செ.மீ அகலம் என்ற அளவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
துணி சிறியதாக இருந்தால் இரண்டு துணியாக எடுத்து ஒரங்களை ஒன்றாக இணைத்து தையல் போட்டுக் கொள்ளவும்.
அகலமான பக்கத்தின் இரு ஓரங்களையும் ஒன்றாக இணைத்து தையல் போட்டுக் கொள்ளவும்.
படத்தில் உள்ளது போல் அரை இன்ச் அளவு மடித்து, மடித்து தைக்க வேண்டும். ஒரு பக்கத்தில் மட்டும் தையல் போட்டுக் கொள்ளவும்.
உங்களுக்கு எந்த அளவுக்கு பூ வேண்டுமோ அந்த அளவிற்கு துணியை வட்டமாக கொண்டு வந்து ஓரங்களை இணைத்து தையல் போட்டுக் கொள்ளவும். இதுப்போல் மூன்று பூக்கள் செய்யவும்.
ஒரு வட்டமான துணியில் தேவையான அளவு காட்டனை வைத்து சிறு மூட்டை போல் நூலால் கட்டிக் வைக்கவும்.
செய்திருக்கும் பூவின் நடுவில் உள்ள துளையில் இதனை வைக்கவும். நடுவில் வைத்த இந்த மூட்டை சரியான அளவில் பொருந்தும் விகிதத்தில் வைத்தப்பின், முன் பக்கத்தில் காட்டன் பகுதியை தட்டையாக இருக்கும்படி அழுத்தி விடவும்.
பூவை பின்பக்கம் திருப்பி ஊசியில் நூலை இரண்டையாக கோர்த்துக் கொண்டு பூவின் முதல் துணியை விட்டுட்டு அடித்துணியும், மஞ்சள்நிற துணியும் சேர்த்து ஊசியில் இரண்டு முறை நூலை சுற்றி சிறிய முடிச்சுப்போட்டுக் கொள்ளவும். அந்த பூவை சுற்றி இடைவெளிவிட்டு இந்த தையலை போட்டுக் கொள்ளவும். (போடப்படும் தையல் முன்பக்கத்தில் தெரிய கூடாது).
படத்தில் உள்ள இலைகளை போல் பச்சைநிற துணியில் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
பையின் முன்பக்கத்தில் எங்கு இலைவைத்து தைக்க வேண்டுமோ அந்த இடத்தை சாக்பீஸால் குறித்துக் கொள்ளவும். அந்த இடத்தில் ஒரு இலை வைத்து அந்த இலையின் நிறத்துக்கேற்ற நூலினால் பின் பக்கமாக தைக்கவும். ப்ளவுஸில் ஹெம்மிங் தைப்பது போல் இலையின் நடுவில் தையல் இருக்க வேண்டும். (மேல் பக்கம் சிறிய புள்ளி போன்று இருக்கும் தையல்.)
அடுத்த இலையும், மூன்று பூவையும் இதுப்போல் தைத்துக் கொள்ளவும். இந்த பூவின் இடைவெளியில் இலைக்கொத்து வருவது போல் தைக்க வேண்டும்.
முதலில் வைத்த இரட்டை இலையை ஒட்டி மற்றொரு இரட்டை இலையை வைக்கவும். இலையின் வடிவத்திலேயே மேலே சொல்லிய முறைப்படி தையல் போட்டுக் கொள்ளவும். அடுத்து ஒரு தனி இலையை வைத்து தைத்து விடவும். வலதுப்பக்கத்தில் உள்ள பூவின் இடைவெளியிலும் இதுப்போல் இலைகளை வைத்து தைக்கவும்.
துணியில் சங்குப்பூ போல் செய்வதற்கு அரை அடி நீளமுள்ள இரண்டு வெவ்வேறு நிறத்தில் துணியை எடுத்துக் கொள்ளவும். முதலில் துணிகளை பிரட்டி வைத்து ப்ளெயின் துணி மேலே, டிசைன் செய்யப்பட்ட துணி அடியில் வைத்து ஓரத்தில் தையல் போடவும். இதனை நல்ல பக்கத்திற்கு மாற்றி முதலில் தையல் போட்ட பகுதிலேயே வைத்து தைக்கவும்.
தைத்த துணியை இரண்டாக மடித்து, மடித்த முனையிலிருந்து குறுக்கே ஒரு தையல் போட்டு முடிக்கவும். மீதி துணியை நறுக்கி விடவும்.
இந்த துணியின் தையல் இணையாத அடிப்பக்கத்தை தலைக்கீழாக திருப்பி விட்டால் படத்தில் உள்ள பூப்போல் இருக்கும்.
மூன்று பூவின் மேலே உள்ள இரண்டு இலைகளுக்கு நடுவில் இந்த சிறிய பூவை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து தைத்துக் கொள்ளவும். ஒவ்வொரு பூவிலும் இரண்டு இரண்டு தையல் போட்டுக் கொள்ளவும்.
துணிபையில் செய்யப்பட்ட பேட்ச் ஒர்க் டிசைன் ரெடி. இதில் பயன்படுத்திருக்கும் துணி சுடிதார், பேண்ட் தைக்கும்போது வீணாகும் துணியில் செய்தது. நீங்கள் சுடிதார் தைக்கும் உங்கள் தையல்காரரிடம் வீணாகும் துணியை வாங்கி இதுப்போல் செய்யலாம். இதுக்காக புதுத்துணி எடுத்து செய்ய வேண்டிய அவசியமில்லை.
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் பையில் செய்யக்கூடிய பேட்ச் ஒர்க் செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹையா! முதலாவதா வந்தாச்சு இமா. ;)

சூப்பர், சூப்பர், சூப்பர், சூ...ப்பர் செண்பகா. பாராட்டுக்கள். @}->--

‍- இமா க்றிஸ்

அண்ணி ரொம்ப சூப்பர இருக்கு ;) நான் கண்டிப்பா செய்து பார்ப்பேன். வாழ்த்துக்கள் ;)

உன்னை போல பிறரையும் நேசி.

சம சூப்பரா இருக்கு... வழக்கம் போல பூக்கள் கலர் அட்டகாசம். மொத்தத்தில் பேக் ரொம்ப சூப்பரா இருக்குங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அழகா இருக்கு.
சுடிக்கு மேட்ச்சா கைப்பையில் பூ இருந்தால் அவர் அறுசுவை அன்பர் என அடையாளம் கண்டு கொள்ளலாம் இனிமேல்.

வீட்டுக்காரர்கிட்ட பச்சை Tshirt இல்லையே என்ன பண்ணலாம்.. எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா?

சூப்பர் செண்பகா......ஒரு சாதாரண பையை டிசைனர் பையாக மாத்திட்டீங்க.....

மெஷின் தான் இல்லை...இருந்தால் என்ன....கையில் தைத்து கொடுக்கிறேன் என் பொண்ணுக்கு....வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ithil kuripida pattirukum kurippugal ananithum neradiyaga ennudaya email id ku valanga paduma atharkana seyalmuraigal enna i want this tips are in my email id

ரொம்ப அழகான கூடைகள் எளிமையா இருக்கு வாழ்த்துக்கள்..."'