தேதி: July 31, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வெண்பூசணி- 1/2 கிலோ
பால்- 1/2 லிட்டர்
நெய்- 50 கிராம்
ஏலக்காய் தூள்- சிறிதளவு
ஆரஞ்சு கலர்- ஒரு பிஞ்ச்
சீனி- 100 கிராம்
முந்திரி- 10
கிஸ்மிஸ்-5
வெண்பூசணி தோலை நீக்கி சதைபகுதியை மட்டும் தூருவிக்கொள்ளவும்.
பின் இட்லி சட்டியில் வைத்து அவித்துக்கொள்ளவும்
ஆறியதும் சுத்தமான வெள்ளை துணியில் அதன் ஈரத்தை முழுவதும் வடிகட்டவும்.
கடாயில் பாலை கொதிக்க விடவும்.
பின் பூசணிதுருவல், சீனி, ஏலத்தூள், கலர்பொடி சேர்க்கவும்.
அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும்
இடையிடையே 1 ஸ்பூன் வீதம் நெய் கலந்துக்கொண்டு வரவும்.
அல்வா பதம் வந்ததும் நெய்யில் வறுத்த கிஸ்மிஸ்,முந்திரியை சேர்த்து கிளறி பின் இறக்கவும்.
கலர் பொடி விருப்பத்திற்காக மட்டுமே. பூசணியில் உள்ள ஈரத்தை முழுவதும் முடிந்த அளவுக்கு எடுத்துவிட வேண்டும். அப்போது தான் பச்சைவாசனை வராமல் இருக்கும். ரசம் செய்யும் போது அந்த நீரை பயன்படுத்தலாம்