தாய்ப்பால் பெருக வழி சொல்லுங்கள் தோழிகளே....

என் அண்ணிக்கு மார்பகம் மிக மிருதுவாக சிறியதாக இருப்பதாகவும் தாய்ப்பால் குறைந்தது போல தெறிவதாகவும் கூறினார்கள். குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆகிற்து. தாய்ப்பால் பெருக வழி சொல்லுங்கள் தோழிகளே..

இப்போ எத்தனை மாசம் ஆகுது குழந்தைக்கு?
1.நல்லா தண்ணி குடிக்க சொல்லுங்க,
2.பூண்டு நிறைய சேர்த்துக்க சொல்லுங்க..பூண்ட நல்லா வேக வைத்து ஒரு கரண்டி பால் சேர்த்து விழுதா அரைச்சு நம்ம தீபாவளி மருந்து பொடியோட கலந்து சாப்பிட்டா பால் நல்லா சுரக்கும்,மேலும் நம்ம சாப்பிடற சாப்பாட்டுல உள்ள காஸ்,மற்றும் செரிக்காத விஷயங்கள் எல்லாம் செரிக்க ஏதுவாக இருக்கும்.
3.பாதாம் பருப்பை இரண்டு பருப்பு மட்டும் இரவில் தோலோடு ஊறவைத்து காலையில் வெறும் வயத்தில் அந்த தண்ணியுடன் அரைத்தும் இல்லை அப்படியே சாப்பிடலாம்.இது கொஞ்சம் மாசம் ஆனதுக்கு அப்புறம் பால் கெட்டியானப்பின் செய்தால் நல்லது.

இதுவும் கடந்துப் போகும்.

THX ASWINI. 9 MONTHS

KEEP SMILING ALWAYS :-)

அதிகமாக சூப் வகைகள் குடிக்க சொல்லுங்க,மட்டன் சூப், சிக்கன் சூப், வெஜ் சூப், மீன் சூப் கீரை சூப் தக்காளி சூப் இது போல் செய்து கொடுங்க.
காரப்பொடி மீன் அதிகம் சாப்பிட சொல்லுங்கள்
பால் கொடுக்கும் முன் ஓவ்வொரு தடவையும் சூடாக ஹார்லிக்ஸ்(அ) பால் (அ) சூப் (அ) வெண்ணீர் குடித்து கொண்டு கொடுக்க சொல்லுங்கள்.

Jaleelakamal

அஸ்வினி சொன்னதை பின்பற்றச் சொல்லுங்கள். நல்ல மாற்றம் தெரியலாம்.

பூண்டு விசயத்தில் சிறிது கவனம் தேவை. தாய்ப்பால் அதிகரிக்க நானும் பூண்டு சேர்க்க ஆரம்பித்தேன். என் மகள் பால் அருந்துவதையே நிறுத்திவிட்டாள். பூண்டின் வாசனை அவளுக்குப் பிடிக்கவில்லை. பூண்டு சாப்பிடுவதை நிறுத்தியபின் எப்போதும்போல் குடிக்க ஆரம்பித்தாள். சில குழந்தைகளுக்கு அந்த வாசனை பிடிப்பதில்லை.

அன்புடன்,
இஷானி

மீன் நெறைய சாப்பிட சொல்லுங்க அதும் சங்கரா மீன் நெறைய பால் சுரக்கும்.அப்புறம் பால் சுறா என்று ஒரு மீன் வகைல உள்ள கருவாடு கிடைக்கும் அதை குழம்பு வெச்சி சாப்பிட சொல்லுங்க.

வெள்ளை பூண்டை உடைத்து தோலுடன் வாணலில் நன்றாக வேகும் அளவிற்கு வறுத்து சூடுடனே சாப்பிட சொல்லுங்க..சூடான பால் நெறைய குடிக்கலாம்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஜலீலா, இஷானி, குமாரியின் பதிவிற்கு மிக்க நன்றி :) பின்பற்ற சொல்கிறேன்.

KEEP SMILING ALWAYS :-)

mother's Horlicks, Milk,

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

மார்பக அளவிற்கும் தாய்ப்பால் சுரப்பிற்கும் எந்த அளவுக்கு தொடர்பு உள்ளது என்று தெரியவில்லை.

இது முன்பே இங்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். இருப்பினும் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

பூண்டு சிறிது அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அசைவம் சாப்பிடுபவர் என்றால் மீன் அதிகம் சாப்பிடலாம். கீரை சாப்பிடலாம். பால் குடிக்கலாம். இதற்கான பால் கிடைக்கிறது. Anmum 2 மற்றும் Mothers' Horlicks குடிக்கலாம். பூண்டை சிறிது வறுத்து தோல் நீக்கி பாலில் ஊறவைத்து சாப்பிடலாம். நிறைய தண்ணீர் குடித்தால் நல்லது.

எல்லாவற்றையும் விட மிக முக்கியம் தன்னப்பிக்கையும் நல்ல மகிழ்ச்சியான மனநிலையும் தான்.

எதை வைத்து பால் குறைவாக இருக்கிறது எனக் கண்டறிந்தார்? ஒரு குழந்தை ஒரு நாளில் 8 முறை சிறுநீர் கழிக்கிறது என்றாலே அதற்கு பால் போதும். பால் கொடுக்க கொடுக்கத்தான் அதிகம் சுரக்கும். எனவே உங்கள் அண்ணியை தன்னம்பிக்கையுடன் தொடரச் சொல்லுங்கள். மனந்தளர்ந்து பாட்டில் பாலை உடனே அறிமுகப் படுத்த முயல வேண்டாம்.
நன்றி. நாகா ராம்.

மார்பக அளவுக்கும் மிருதுவுக்கும் தாய்ப்பாலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. குழந்ஹ்டைகள் குடிக்க குடிக்க தான் பால் சுரக்கும். சிலருக்கு மிருதுவாக தான் இருக்கும். பால் போதவில்லை என்றால் குழந்தை கையில் காலில் நிக்காமல் அழும். குழந்தை நன்றாக தூங்குகிறதா? ஒரு நாளைக்கு ஆறு முதல் பத்து முறை சிறுநீர் கழிக்கிறதா? பால் குடித்து முடித்து விட்டு அழுகிறதா? பால் குடித்து விட்டு அழுதுக் கொண்டே இருந்தால் தான் அதற்க்கு பசி அடங்கவில்லை என்று அர்த்தம். நீங்கள் குழந்தைக்கு எத்தனை மாதம் என்று சொல்லவே இல்லை. சிலருக்கு முதல் இரண்டு மாதம் இருந்த மாதிரி மார்பகம் இருக்காது. அது ஏன் என்றால் முதல் இரண்டு மாதம் உடல் குழந்தைக்கு தேவையை அறியாமல் பாலை சுரக்கும். அதன் பிறகு உடல் பழகி குழந்தைக்கு தேவையான அளவு பாலை சுரக்கும். குழந்தையும் சிறிது குடிக்க பழகி விடும் அதனால் சீக்கிரமே குடித்தும் விடும்.

இரும்பு மற்றும் நீர் சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். பால் குடித்தால் தான் நமக்கு பால் சுரக்கும் என்றெல்லாம். இல்லை. அதனால் பால் அதிகம் குடிக்க வேண்டாம். அப்படி அதிகப்படியான பால் குடித்தால் தாய்க்கு தான் அதிகம் கொழுப்பு ஏறும். அதே சமயம் அதிகம் அளவில் தண்ணீரும் குடிக்க கூடாது. ஒரு நாளைக்கு 10 முதல்12 க்ளாஸ் தண்ணீர் தான் குடிக்க வேண்டும் (அதுவும் சாப்பிட்டு முடித்த பின்னர் அருந்தும் தண்ணீரையும் சேர்த்து). சைவம் என்றால் பூண்டு, சீரகம், வெந்தயம், சுரக்காய், கத்திரிக்காய், பருப்பு, நெய், காலிபிளவர், கீரை வகைகளை அதிகம் சேர்ப்பதால் பால் அதிகளவில் சுரக்கும். அசைவைத்திருக்கு மற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அறுசுவையில் தைமார்களுக்கென்று நிறைய குறிப்புகள் இருக்கிறது. ஜலீலா, செல்வி அவர்களின் குறிப்பில் அதிகம் இருப்பதை பார்த்திருக்கிறேன். சீதலக்ஷ்மியும் இப்போ சமீபத்தில் ஒரு குறிப்பையும் விளக்ப்படதுடன் கொடுத்திருந்தார். மன்றத்தில் உள்ள பழைய இழையில் கூட இதை பற்றி அதிகம் பேசியிருக்கிறோம்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

raji, therese, lavanyaவின் பதிலுக்கு நன்றி :)

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்