தாயா? அல்லது தாரமா?

அன்பு தோழிகளுக்கு வணக்கம்,

தாயா? தாரமா? ( நம்ம தல (அஜித்) சிட்டிசன் படத்தில் சொல்வார்கள் ஒரு தாரத்தில் தாயை காணலாம், ஒரு தாயில் தாரத்தை காண முடியாது என்று நான் தல சொன்னதை தான் சொன்னேன், அதற்காக தவறாக எண்ண வேண்டாம்.) இந்த கூற்று சரியா? அல்லது தவறா?தோழிகள் தங்கள் அருமையான கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளவும்.

ஹய்யா..என்ன மல்லிகா இப்படி எல்லாம் தலைப்பை தேர்ந்தெடுத்து இருக்கீங்க...ஏதும் உள்நோக்கமா?இது பட்டிமன்றம்தானே..சரி சரி..நீங்க சொல்றது என் காதுல விழுது..மல்லிகா அக்கா கூப்பிட்டதே கேட்ட போது நீங்க சொல்றது விழாம இருக்குமா?
இருந்தாலும் இப்போ நடைமுறையில் உள்ள ஒரு பிரச்சனையைதான் தலைப்பா எடுத்துருக்கீங்க..வாழ்த்துக்கள்...ஆனால் முன்னுரையிலேயே முடிவுரையும் சேர்த்து எழுதின மாதிரி இருக்கு..நல்ல வாதங்களுடன் வருகிறேன்..

இதுவும் கடந்துப் போகும்.

அஸ்வினி நான் சினிமா படத்தில் வந்ததை தான் நான் சொன்னேன்.ஏன் அஸ்வினி, எம்ஜியார் அவர்கள் தாயிக்கு பின் தாரம் என்று சொல்லவில்லையா?
இது முடிவுரை இல்லை, தொடக்கம் தான். எந்த உள்நோக்கமும் இல்லை.சரியா. முதன் முதலில் உங்கள் பதிப்பை போட்டதற்கு நன்றி

சாரிப்பா,நான் சும்மாதான் சொன்னேன்..கோவிச்சுக்காதீங்க என்ன..நான் வாதங்களுடன் வருகிறேன்..

இதுவும் கடந்துப் போகும்.

பட்டி இப்ப தானே முடிந்தது... அதுக்குள்ள அடுத்த பட்டி??? அதுவும் தலைப்பு பட்டி தலைப்புகள் பகுதியில் இல்லாதது!!! தோழி பட்டிமன்றம் என துவங்குவதென்றால் அறுசுவையில் சில வழக்கங்கள் உண்டு. நீங்க புதிது என்பதால் தெரியாது என்றே நினைக்கிறேன். அதனால் இந்த தலைப்பை “பட்டிமன்றம்” என்று இல்லாமல் மாற்றுங்கள். பட்டி அடுத்த வாரம் திங்கள் துவங்கும், அதன் நடுவர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இதை பொதுவான இழையாக மாற்றும்படி அன்போடு கேட்டுக்கறேன். :)

உங்களூக்கு இத்தலைப்பு பட்டியில் வாதிடப்பட வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் “பட்டிமன்ற தலைப்புகள்’ என்ற இழையில் இதை பதிவு செய்யுங்கள்.

நடுவராக வர விருப்பம் இருந்தால் இதற்கு முன் பட்டிமன்றத்தில் கலந்து கொண்டிருந்தால் பட்டிமன்ற சிறப்பு இழையில் உங்கள் விருப்பத்தை பதிவு செய்யுங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தாய்க்கு பின் தாரம்!!!!!!!!!!

மேலும் சில பதிவுகள்