கலாட்டா கிச்சன் சீசன் 2 பகுதி 3

இது கிச்சன் கலாட்டா சீசன் 2 - பகுதி 3

ஹாய் அறுசுவை தோழிகளே கலாட்டா கிச்சன் சீசன் 2 ஆரம்பித்து நல்ல முறையில் நடந்து 2 பகுதிகளை கடந்துவிட்டது அதை அப்படியே நாம தொடர்ந்து இன்னும் நல்ல முறையில் தொடர வேண்டும் அதற்கு உங்கள் எல்லோருடைய ஆதரவையும் எதிர்பார்த்து தான் ஆரம்பம் செய்கிறோம் நிச்சயம் வந்து கலந்துக் கொள்வீர்கள் தானே.
இந்த வாரம் நாம் சமைக்க போகும் குறிப்புகள்
குமாரி (67) மற்றும் விஜி (140) அவர்களின் குறிப்புகள் தான்.

முடிந்தால் நீங்கள் செய்யும் குறிப்புகளை ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுத்து அறுசுவைஅட்மின் @ ஜிமெயில்.காம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். தங்கள் குறிப்பு விளக்கப்படங்களுடன் வரும் நம்ம அறுசுவையில்.
இந்த வாரம் ஆரம்பிக்க கொஞ்சம் தாமதமாகிவிட்டது எல்லோரும் இங்கு வந்து பார்த்து அதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடு செய்துக் கொண்டு இந்த வார கலாட்டா கிச்சன் சீசன் 2 பகுதி மூன்றை சிறப்பாக நடத்தி தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

வாங்க வாங்க எல்லாரும் சேர்ந்து சமைத்து அசத்தலாம், புது புது குறிப்புகள் கற்றுக் கொண்ட மாதிரியும் இருக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கு எப்போ பார்த்தாலும் ஒரே போல சமைத்து அழுத்து போகாமல் புதுமையான வித்தியாசமான குறிப்புகளை செய்து கொடுத்து பாராட்டுக்களை தட்டி செல்லுங்க. முடிந்த அளவு செய்து சொல்லலாம் அது ஒரு குறிப்பாக இருந்தாலும் இரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.
ரெடி ஸ்டெடி ஜூட்

வந்துட்டோம்ல... இருங்க என் லிஸ்ட்ட எடுக்க கணக்கு எங்க???

நான் தான் முதல்ல வந்தேன்.

இன்று குமாரி குறிப்பில் இருந்து:

கோபி 65

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய்டா யாழி,கலாட்டா கிச்சன் தொடங்கியாச்சா? இந்தப் பகுதி சிறப்பாகச் செல்ல

என்னுடைய வாழ்த்துக்கள்மா.கணக்கு பிள்ளைக்கும்,அசத்தவிருக்கும்

தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்.கணக்கு பிள்ளை,நாளைக்கு வரேன்.பைடா யாழி.

அன்புடன்
நித்திலா

தோழியர் அனைவருக்கும் என் வணக்கம் நான் புதியவள். எனக்கு புதுசா இழை எப்படி தொடங்கனும் தெரியல அதான் இதுல கேட்குரேன். என் பொன்னுக்கு 1 வயது 8 மாதம் ஆகுது.அன்டர் வெய்ட்டா இர்கா எது சாப்ட குடுத்தாலும் கொமட்டரா.வெய்ட் கூட பால் தேன் கலந்து குடுக்கலாமா. குடுக்கலாம்னா எப்டி குடுக்கனும்னு சொல்லுங்க ப்லீஸ்.

இன்றிரவு டின்னருக்கு விஜியின் தக்காளி ரவ தோசை மற்றும் குமாரியின் உளுத்தம்பருப்பு சட்னி

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வனித்தா முதல் ஆளா வந்துட்டீங்களா ரொம்ப சந்தோஷம் கணக்கும் சொல்லிட்டீங்களா சமைத்து அசத்த ஆரம்பிச்சுட்டீங்க. ஓகே நானும் கணக்கு எடுக்க ஆரம்பிச்சுட்டேன். வெற்றி பெற வாழ்த்துக்கள்

நித்திமா ஓ ஓ நீயும் வந்துட்டியா எப்போ சமைக்க ஆரம்பிக்க போற? வாழ்த்துக்கு நன்றிடா. வெற்றி பெற வாழ்த்துக்கள்

லாவண்யா அசத்த ஆரம்பிச்சுட்டீங்களா இதோ நானும் கணக்கு எடுக்க ஆரம்பிச்சுட்டேன். வெற்றி பெற வாழ்த்துக்கள். இன்னும் எங்கே மற்றவர்களை காணும். சீக்கிரம் எல்லோரும் அசத்த வாங்க

ஹாய் யாழினி இன்னைக்கு நான் செய்த குறிப்பு குமாரியின் பூண்டு துவையல், நீர் உருண்டை.

இன்று என் கணக்கு:

குமாரியின்:

சின்னவெங்காய சட்னி
முட்டை ஆம்லெட்

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய்டா யாழி,என்னோட கணக்கை ஓபன் பண்ணிடுடா.

குமாரி - ரவா தோசை

விஜி - புதினா தொக்கு

பைடா யாழி.

அன்புடன்
நித்திலா

யாழினி,
நேற்று நான் செய்தவை,
குமாரியின் கோதுமை கஞ்சி மற்றும் சாத்துக்குடி ஜூஸ்.
இரண்டுமே நல்லா இருந்தது.

தோழி ராஜி, மன்றத்தில் சென்று உங்களுக்கு வேண்டிய பிரிவுக்கு சென்று புதிய கேள்வி சேர்க்க என்ற பகுதிக்கு போய் புதிய இழையை ஓபன் பண்ணலாம். குழந்தைக்கு சளி தொந்தரவு இருந்தாலும் சரியாக சாப்பிட மாட்டார்கள். தண்ணீர் தந்தாலும் வாந்தி எடுப்பார்கள். அப்படி எதாவது தொந்தரவு இருப்பின் அதற்குரிய மருந்தை கொடுத்து குணப்படுத்துங்கள். சத்துமாவு கஞ்சி, கேழ்வரகு + புழுங்கல் அரிசி கலந்த கஞ்சி, உருளை,முட்டை,மீன்,மட்டன் சூப், பழங்கள், கீரைகள் இப்படி சேர்த்து கொடுங்கள். ஒருமுறை குழந்தைகள் நல மருத்துவரையும் அணுகி காரணத்தை தெரிந்து கொள்ளுங்க. குழந்தைகளுக்கு ஒரே மாதியான உணவை தந்தாலும் அவர்கள் சாப்பிட மாட்டார்கள். மாற்றி மாற்றி தந்து பாருங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்