கலாட்டா கிச்சன் சீசன் 2 பகுதி 3

இது கிச்சன் கலாட்டா சீசன் 2 - பகுதி 3

ஹாய் அறுசுவை தோழிகளே கலாட்டா கிச்சன் சீசன் 2 ஆரம்பித்து நல்ல முறையில் நடந்து 2 பகுதிகளை கடந்துவிட்டது அதை அப்படியே நாம தொடர்ந்து இன்னும் நல்ல முறையில் தொடர வேண்டும் அதற்கு உங்கள் எல்லோருடைய ஆதரவையும் எதிர்பார்த்து தான் ஆரம்பம் செய்கிறோம் நிச்சயம் வந்து கலந்துக் கொள்வீர்கள் தானே.
இந்த வாரம் நாம் சமைக்க போகும் குறிப்புகள்
குமாரி (67) மற்றும் விஜி (140) அவர்களின் குறிப்புகள் தான்.

முடிந்தால் நீங்கள் செய்யும் குறிப்புகளை ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுத்து அறுசுவைஅட்மின் @ ஜிமெயில்.காம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். தங்கள் குறிப்பு விளக்கப்படங்களுடன் வரும் நம்ம அறுசுவையில்.
இந்த வாரம் ஆரம்பிக்க கொஞ்சம் தாமதமாகிவிட்டது எல்லோரும் இங்கு வந்து பார்த்து அதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடு செய்துக் கொண்டு இந்த வார கலாட்டா கிச்சன் சீசன் 2 பகுதி மூன்றை சிறப்பாக நடத்தி தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

வாங்க வாங்க எல்லாரும் சேர்ந்து சமைத்து அசத்தலாம், புது புது குறிப்புகள் கற்றுக் கொண்ட மாதிரியும் இருக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கு எப்போ பார்த்தாலும் ஒரே போல சமைத்து அழுத்து போகாமல் புதுமையான வித்தியாசமான குறிப்புகளை செய்து கொடுத்து பாராட்டுக்களை தட்டி செல்லுங்க. முடிந்த அளவு செய்து சொல்லலாம் அது ஒரு குறிப்பாக இருந்தாலும் இரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.
ரெடி ஸ்டெடி ஜூட்

யாழினி என்னுடைய கணக்கு குமாரியின் உளுத்தம் பருப்பு சட்னி, மாங்காய் சாம்பார், அவரைக்காய் பொரியல். விஜியின் குறிப்பிலிருந்து உக்கரை, கீரை அவியல்.

Kumariyin..mangai sambar...2.vengaya chatny

Kumariyin..mangai sambar...2.vengaya chatny

மூன்று நாட்களாக நான் செய்தது
விஜி - அவியல், பச்சரிசி கார கொழுக்கட்டை, உன்னி அப்பம், தேங்காய் பொடி, காய்கறி சூப்
குமாரி - ஈஸி தால், வெஜிடபுள் தோசை, சின்ன வெங்காய சட்னி

ஹாய்டா யாழி,என்னோட கணக்கில் நோட் பண்ணிக்கடா.

குமாரி - சர்க்கரை பொங்கல்

விஜி - பப்பாளி ஜூஸ்

பைடா யாழி.

அன்புடன்
நித்திலா

யாழினி,

நேற்று நான் சமைத்தவை,
குமாரியின் வெங்காயக்குழம்பு மற்றும் விஜியின் தேங்காய் பொடி.

இன்று சமைத்தவை,
குமாரியின் காளான் பிரியாணி.
என் கணக்கில் சேர்த்துக்கோங்க.

Naan samaiththathu ,kumariyin kuripil irunthu,1.idly sambar.2.idly podi...irendume nandraha irunthathu

VANITHA
குமாரி - கோபி 65, சின்னவெங்காய சட்னி, முட்டை ஆம்லெட், கடலைபருப்பு சட்னி, மாங்காய் சாம்பார், அவரைக்காய் பொரியல், உருளை கிழங்கு மசாலா

LAVANYA:
விஜி - தக்காளி ரவ தோசை, பாகற்காய் தீயல், தேங்காய் சம்மந்தி
குமாரி - உளுத்தம்பருப்பு சட்னி, உருளை மசாலா

VINOJA:
குமாரி - பூண்டு துவையல், நீர் உருண்டை, உளுத்தம் பருப்பு சட்னி, மாங்காய் சாம்பார், அவரைக்காய் பொரியல்
விஜி - உக்கரை, கீரை அவியல்

NITHILA:
குமாரி - ரவா தோசை, முட்டை தோசை, சர்க்கரை பொங்கல்
விஜி - புதினா தொக்கு, கொத்தமல்லி தொக்கு, பப்பாளி ஜூஸ்

ANBARASI BALAJI:
குமாரி - கோதுமை கஞ்சி, சாத்துக்குடி ஜூஸ், நெய் சாதம், மாங்காய்(முருங்கை) சாம்பார், கோதுமை கஞ்சி(குழந்தைக்கு), முருங்கை உருளைகிழங்கு புளிகுழம்பு, ரசப்பொடி, வெங்காயக்குழம்பு, காளான் பிரியாணி
விஜி - தேங்காய் பொடி

JAANU:
விஜி - கத்திரிக்காய் காரகுழம்பு
குமாரி - கீரை துவட்டல், ஈஸி தால், பொங்கல், மாங்காய் சாம்பார், வெங்காய சட்னி, இட்லி சாம்பார், இட்லி பொடி

YAZHINI:
விஜி - அவியல், பச்சரிசி கார கொழுக்கட்டை, உன்னி அப்பம், தேங்காய் பொடி, காய்கறி சூப்
குமாரி - ஈஸி தால், வெஜிடபுள் தோசை, சின்ன வெங்காய சட்னி

முதலில் என்னை மன்னித்து விடுங்கள் லேட்டாக முடிவு சொல்வதற்கு,

கலாட்டா கிச்சன் சீசன் 2ன் பகுதி - 3 நல்லப்படியாக நிறைவடைந்தது. இந்த பகுதியின் முடிவினை அறிவிக்கும் நேரம் வந்து விட்டது,
கடந்த ஒரு வாரமாக குமாரி மற்றும் விஜி டிவிம் ஆகிய இருவரது குறிப்புகளையும் செய்து பார்த்து கணக்கு சொல்லிக் கொண்டிருந்தோம். குமாரி - 72, விஜிடிவிம் - 140 இருவரதும் சேர்த்து 212 குறிப்புகளின் யார் அதிக எண்ணிக்கையில் செய்து பார்த்திருக்கிறார்களோ அவர்களையே இந்த வாரத்தின் வெற்றியாளராக அறிவிக்கப் போகிறோம். கடந்த வாரத்தின் மொத்த குறிப்புகள் - 212, குமாரி குறிப்புகளிலிருந்து 35 குறிப்புகளும், விஜி குறிப்புகளிலிருந்து 15 குறிப்புகளும் மொத்தம் 50 குறிப்புகள் செய்துப் பார்க்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு நல்ல சுவையான, ஆரோக்கியமான, எளிதில் செய்யக் கூடிய குறிப்புகளை நமக்கு அளித்த திருமதி. குமாரி மற்றும் திருமதி. விஜி டிவிம் இருவருக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கலாட்டா கிச்சன் சீசன் 2ன் பகுதி - 3 முடிவுகள் பின்வருமாறு,

9 குறிப்புகள் செய்து கலாட்டா கிச்சன் சீசன் 2 பகுதி - 3ன் அசத்தல் ராணி பட்டத்தை வெல்பவர் திருமதி. ஹர்ஷா அவர்கள்.
************************************************
அசத்தல் ராணி திருமதி. ஹர்ஷா அவர்கள்
************************************************

8 குறிப்புகள் செய்து கலாட்டா கிச்சன் சீசன் 2 பகுதி -3ன் அசத்தல் இளவரசிகளாக இந்த முறை இருவர் பட்டத்தை வெல்கின்றனர் செல்வி. ஜானு மற்றும் செல்வி. யாழினி அவர்கள்
************************************************
அசத்தல் இளவரசி செல்வி. ஜானு அவர்கள்
************************************************
**************************************************************
அசத்தல் இளவரசி செல்வி. யாழினி அவர்கள்
**************************************************************

7 குறிப்புகள் செய்து கலாட்டா கிச்சன் சீசன் 2 பகுதி - 3ன் அசத்தல் இளவரசிகளாக இந்த முறை இருவர் பட்டத்தை வெல்கின்றனர்

திருமதி. வனிதா மற்றும் செல்வி. வினோஜா அவர்கள்
************************************************
அசத்தல் இளவரசி திருமதி. வனிதா அவர்கள்
************************************************
************************************************
அசத்தல் இளவரசி செல்வி. வினோஜா அவர்கள்
************************************************

திருமதி. குமாரி அவர்களின் மாங்காய் சாம்பார் குறிப்பு நமது தோழிகளால் 4 முறைகள் செய்து பார்க்கப்பட்டு இந்த வாரத்தின் சிறந்த குறிப்பிற்கான முதல் இடத்தை பிடிக்கிறது.

திருமதி. குமாரி அவர்களின் சின்னவெங்காய சட்னி, உளுத்தம்பருப்பு சட்னி, உருளை கிழங்கு மசாலா, ஈஸி தால், அவரைக்காய் பொரியல் மற்றும் திருமதி. விஜி அவர்களின் தேங்காய் பொடி ஆகிய குறிப்புகள் அனைத்தும் இரண்டு முறை செய்து பார்க்கப்பட்டு இந்த வாரத்தின் சிறந்த குறிப்பிற்கான இரண்டாவது இடத்தை பிடிக்கிறது.

பட்டம் வென்ற ஐவருக்கும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். இந்தாங்க அழகிய ரோஜாக்கள் நிறைந்த பூங்கொத்து பெற்றுங்கோங்க.

இந்த சீசன் 2 பகுதி 3ல் கலந்துக் கொண்டு இந்த பகுதியை நல்ல முறையில் இயங்க செய்த தோழிகள் அனைவருக்கும் கலாட்டா கிச்சன் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வெற்றியோ தோல்வியோ கலந்துக் கொள்ள வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இதில் பங்கு பெற்ற தோழிகள் வனிதா, வினோஜா, நித்திலா, ஹர்ஷா, லாவண்யா, ஜானு, யாழினி அடுத்த முறை இந்த பகுதியை இன்னும் சிறப்பாக நடத்த நீங்கள் எல்லோரும் கலந்துக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் நன்றி. கணக்கபிள்ளை தவறேதும் செய்திருந்தால் மன்னித்து விடுங்கள் இரகசியமா வந்து கொட்டுங்க அதோட வலிக்காமல் கொட்டுங்கப்பா ப்ளீஸ்.

யாருமே கலாட்டா கிச்சன் முடிவ வந்து பார்க்கலையா?

மேலும் சில பதிவுகள்