கலாட்டா கிச்சன் சீசன் 2 பகுதி 3

இது கிச்சன் கலாட்டா சீசன் 2 - பகுதி 3

ஹாய் அறுசுவை தோழிகளே கலாட்டா கிச்சன் சீசன் 2 ஆரம்பித்து நல்ல முறையில் நடந்து 2 பகுதிகளை கடந்துவிட்டது அதை அப்படியே நாம தொடர்ந்து இன்னும் நல்ல முறையில் தொடர வேண்டும் அதற்கு உங்கள் எல்லோருடைய ஆதரவையும் எதிர்பார்த்து தான் ஆரம்பம் செய்கிறோம் நிச்சயம் வந்து கலந்துக் கொள்வீர்கள் தானே.
இந்த வாரம் நாம் சமைக்க போகும் குறிப்புகள்
குமாரி (67) மற்றும் விஜி (140) அவர்களின் குறிப்புகள் தான்.

முடிந்தால் நீங்கள் செய்யும் குறிப்புகளை ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுத்து அறுசுவைஅட்மின் @ ஜிமெயில்.காம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். தங்கள் குறிப்பு விளக்கப்படங்களுடன் வரும் நம்ம அறுசுவையில்.
இந்த வாரம் ஆரம்பிக்க கொஞ்சம் தாமதமாகிவிட்டது எல்லோரும் இங்கு வந்து பார்த்து அதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடு செய்துக் கொண்டு இந்த வார கலாட்டா கிச்சன் சீசன் 2 பகுதி மூன்றை சிறப்பாக நடத்தி தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

வாங்க வாங்க எல்லாரும் சேர்ந்து சமைத்து அசத்தலாம், புது புது குறிப்புகள் கற்றுக் கொண்ட மாதிரியும் இருக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கு எப்போ பார்த்தாலும் ஒரே போல சமைத்து அழுத்து போகாமல் புதுமையான வித்தியாசமான குறிப்புகளை செய்து கொடுத்து பாராட்டுக்களை தட்டி செல்லுங்க. முடிந்த அளவு செய்து சொல்லலாம் அது ஒரு குறிப்பாக இருந்தாலும் இரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.
ரெடி ஸ்டெடி ஜூட்

கலாட்டா கிச்சனில் பங்கு பெற்று வெற்றி பெற்ற தோழிகளுக்கு பாராட்டுக்கள்... ;-)

கலாட்டா கிச்சனை அரும்பாடு பட்டு வெற்றிகரமாக கணக்கில் பிழையில்லாமல் நடத்திய நமது கணக்குப்பிள்ளை யாழினிக்கு ஸ்பெசல் பாராட்டு;-)

Don't Worry Be Happy.

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.சிறப்பாக முடித்துகொடுத்த யாழினிக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மேலும் சில பதிவுகள்