தயவு செய்து எனக்கு உதவுங்கள்

வணக்கம் தோழிகளே தயவு செய்து எனக்கு உதவுங்கள் நான் நிறைமாதம் கர்ப்பமாக இருகேன் எனக்கு நேற்று தான் டெலிவெரி டேட்( 31.7.2011) ஆனால் இன்னும் ஒரு அறிகுறியும் தெரியவில்லை.எனக்கு 2 நாட்களாக அடிவயிறுடன் இடுப்பு எல்லாம் இழுத்து பிடிக்ர மாதிரி இருக்கு இது நோர்மலா*? இப்படி யாருக்கும் இருந்ததா? வலி வராவிட்டால் எனக்கு ஊசி போட வேண்டும் என்று சொல்லி விட்டர்கள். எனக்கு ஊசி போட்டு வலி வர விருப்பம் இல்ல எனக்கு நோர்மலா வலி வர நான் என்ன செய்ய வேண்டும் PLS பதில் தாருஙள்

நன்றியுடன் உங்கள் பதிலை எதிர் பார்க்கும் தோழி
துஷி தருன்

தோழி துஷி, நீங்கள் சீக்கிரமே சுகபிரசவத்தில் அழகான குழந்தை பெற்றெடுக்க என் மனம்நிறைந்த வாழ்த்துக்கள். பிரசவமாகும் நேரத்திலும் குழப்பத்தோடு இருக்காதீர்கள் தோழியே. நடக்க வேண்டிய நேரத்தில் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். என்ன ஒன்று டாக்டர் குறித்த நேரத்திற்கு ஒருநாள் முன்போ அல்லது பின்போ கூட வலி வரலாம். அப்படி வராது போனால் அவர்களுக்கு ஊசி போட்டு வலி வரவைப்பதை தவிர வேறு வழியில்லை. ஒரு சில நேரங்களில் இயற்கைக்கு மாறாக செயல்பட வேண்டி வரும். அது தான் புத்திசாலிதனமும் கூட. உங்கள் மருத்துவர் சொல்லும் ஆலோசனைபடியே கேட்டு செயல்படுங்கள் தோழியே. இந்த உலகத்திற்கு வரும் ஒரு அழகான பூக்குவியலை எப்படி வரவேற்க போகிறீர்கள் என்பதில் மனதை செலுத்துங்கள். இதுபோன்ற தேவையற்ற குழப்பத்தை விடுங்கள். நல்லதே நடக்கும். எனக்கு சிசேரியனில் குழந்தை பிறந்ததால் என்னால் மேற்படி நீங்கள் கேட்ட சந்தேகத்தை தீர்க்க முடியவில்லை. இருந்த போதிலும் உங்கள் மனகுழப்பத்தை தீர்க்க வேண்டிய இந்த பதிவை தந்தேன்.

உங்களின் தலைப்பை மாற்றி போட்டால் தோழிகள் வந்து ஆலோசனை சொல்ல முடியும். இங்கே வரும் அனைத்து தோழிகளும் இது போலவே தலைப்பிடுவதால் உங்கள் அவசரத்தின் அவசியம் புரியாமலே போகும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

முதலில் நல்ல முறையில் குழந்தை பெற்று எடுக்க என்னுடைய வாழ்த்துக்களும்,பிரார்த்தனையும்.குழந்தை பிறந்ததும் வந்து சொல்லுங்கப்பா என்ன குழந்தைன்னு.

இந்த பதிவை பார்த்ததும் பதில் போடாமல் போக மனசு வரலை.

சொன்ன டேட்கு பிறகும் சில பேருக்கு வழி வந்து குழந்தை பிறந்திருக்கு அதனால் நீங்கள் பயப்பட வேண்டாம் தைரியமாக இருங்க இந்த நேரத்தில் கண்டதையும் யோசிச்சி மனதை குழப்பாதீங்க சரியா.

கொஞ்சம் பொருக்கும் அளவு சூட்டில் வெந்நீர் இடுப்பில் ஊற்றலாம்.
வாய்வு கஞ்சி போட்டு குடிக்கலாம்.
ப்ளெயின் டீயில் பட்டர் சால்ட் இல்லாதது போட்டு குடிக்க வலி வரும்.

பன்னீர் சோடா கிடைத்தால் அதில் ஆறின பாலை ஊற்றி குடிக்கலாம்.

நல்ல நடக்கலாம்.

பப்பாளி காய் கிடைத்தால் சமைத்து சாப்பிடலாம்.

இது எல்லாம் எனக்கு குழந்தை பிறக்கும் சமயம் செய்து வழி வர உதவியது அதனால் முடிந்தால் இதை ட்ரை செய்து பாருங்கள் உங்களுக்கு இது உதவினால் எனக்கு சந்தோஷம்.

இரண்டாவது குழந்தைக்கு எனக்கும் வழி தொடர்ந்து வராமல் ரெம்பவும் கஷ்டப்பட்டேன்.

எனக்கு நல்ல முறையில் வழி வந்து அழகிய பெண்குழந்தையை பெற்று எடுத்தேன்.

அவசரத்தில் பதிவிடுகிறேன் மணி 1.30 வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்க்கவும் நாளை பதில் போடுகிறேன்

அன்புடன் கதீஜா.

கொடுத்த தேதியில் வலி வரனும்னு இல்லை... 1 வாரம் கூட காத்திருக்கலாம்னு டாக்டர்ஸ் சொல்லுவாங்க. ஆனா உங்களுக்கு இருப்பது காண்ட்ராக்‌ஷனான்னு தான் எனக்கு சந்தேகம். அதனால் டாக்டரை பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க, அவங்க தொட்டு பார்த்தா காண்ட்ராக்‌ஷன் இருக்கா இல்லையான்னு கண்டு பிடிச்சுடுவாங்க. காண்ட்ராக்‌ஷன் இருந்து வலி இல்லன்னா உசி போடலாம் இல்லன்னா சிசேரியன் பண்ணலாம்... ஆனா நிச்சயம் நாமா வீட்டில் வலி வர வைக்க முயற்சி செய்வது சரின்னு நான் சொல்ல மாட்டேன். உள்ளிருக்க குழந்தையை ஆபத்தின்றி வெளியே கொண்டு வர டாக்டர் சொல்வதை கேளுங்க தோழி... நாம் எதாவது செய்து தப்பாகிட கூடாது. நான் சொல்றதுல தப்பிருந்தா மன்னியுங்கள். வலி எடுக்க வீட்டில் வழி செய்வதெல்லாம் நான் இதுவரை கேட்டிராத ஒன்று. நமக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதை விட நம் குழந்தை ஆரோக்கியமா பிறக்கனும் என்பதே முக்கியம். அதனால் உடனே டாக்டரை பார்த்து உங்களுக்கு இழுத்து பிடிப்பது போல் இருப்பதை சொல்லுங்க. நலமாக பிள்ளை பெற்றெடுத்து வந்து எங்களோடு உங்க மகிழ்ச்சியை பகிர்ந்துக்கங்க. உங்களூக்காக எங்கள் பிராத்தனைகள். கவலையும் குழப்பமும் இல்லாம இருங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//நிச்சயம் நாமா வீட்டில் வலி வர வைக்க முயற்சி செய்வது சரின்னு நான் சொல்ல மாட்டேன்.// நானும் வனி சொல்றது போலதான் நானும் சொல்லுவேன். பப்பாளி... அது இது அவிச்சுக் குடிக்கிறது எல்லாம் இப்ப வேணாம். அசௌகரியமாக இருந்தா ஒரு தடவை காட்டி விடுவது நல்லது. டாக்டர்கூட போன்லயாச்சும் பேசிருங்க. இனி பெய்ன் தன்னால வரட்டும், அதிகமாகட்டும் என்று இருக்க வேணாம்.

பிரசவம் நல்லபடி ஆக என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

‍- இமா க்றிஸ்

தாயாக போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

குறித்த நாளில் கண்டிப்பாக ஓரிருவர் தவிர மற்றவர்களுக்கு முன்னே பின்னே தான் வரும். சிலருக்கு முன்னமே வந்திடும். சிலருக்கு ஒரு வாரம் பத்து நாள் கூட தள்ளி போகலாம். எனக்கும் அப்படி தான் ஆனது. நான் என் மருத்துவரை முழுவதுமாக நம்பினேன். உங்களின் மருத்துவருக்கு கண்டிப்பாக தெரியும். அதனால் அவர்கள் சொல்வதை நம்புங்கள். சில நேரங்களில் குழந்தை பெரியதாக இருந்தால் கூட வலி வராது. அப்பொழுது கண்டிப்பாக வலி வர வைக்க ஊசி போடுவார்கள். கண்டிப்பாக மருத்துவருக்கு தெரியும்...அவர்களும் கூடியமான வரையில் நார்மலுக்கு தான் ட்ரை பண்ணுவார்கள். நீங்கள் இதை பற்றி ஏற்க்கனவே உங்களின் மருத்துவரிடம் ஆலோசித்திருப்பீர்கள் அல்லவா?

அடிவய்று வலித்தால் அது பிரசவ வலி என்றில்லை. பிரசவ வலி என்றால் என்ன செய்தாலும் நிக்கவே நிக்காது. அந்த வலி வரும் போது நடக்க முயன்றாலும் கூட முடியாது. உங்களுக்கு அப்படி இருக்கிறதா? பிரசவத்திற்கு வெறும் வலி மட்டுமே அறிகுறி இல்லை. பனிக்குடம் உடையும், சிறிதளவு சளியுடன் கூடிய இரத்தகசிவு ஏற்ப்படும், முதலில் செர்விக்ஸ் மெலிதாகும் பிறகு திறக்கும்.....இப்படியா நிரைய் இருக்கிறது. இதெல்லாம் உங்களின் மருத்துவர் உங்களுக்கு முன்னமே சொல்லியிருக்க வேண்டும். அப்படியில்லை என்றாலும் பரவாயில்லை நீங்கள் அவர்கள் சொல்வதை கேளுங்கள். ஊசி போட்டு வலி தானே வர வைக்க போகிறார்கள்....வேற ஒன்றும் இல்லை அல்லவா....அதற்க்கெதுக்கு வேண்டாம் என்று சொல்றீங்க நு எனக்கு புரியலை. இந்த ஊசியால் எந்த பின விளைவும் இருக்கிற மாதிரி எனக்கு தெரியலை. அப்படி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் உங்களின் மருத்துவரிடமே அதை பற்றி பேசவும். அவர்கள் உங்களுக்கு எதனால் அதை செய்கிறார்கள் என்று புரியவைப்பார்கள். அதை செய்யவில்லைஎன்றால் என்னாகும் என்றும் எடுத்து சொல்லுவாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Walking will surely induce normal Delivery. Bottom part of the body will move, which will lead to normal delivery.

your future is created by what you do today, not tomorrow &
you must be the change you want to see in the world

தோழி உங்கள மாதிரிதான் என் அக்காவுக்கும் அக்டோபர் 1 தேதி கொடுத்தார்கள். ஆனால் என் அக்காவுக்கு 4 ஆம் தேதி குழந்தை பிற்ந்தது. ஆனால் அவங்க 1 தேதி வலி வரவில்லை என்றதும் ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆயிட்டாங்க. ஏன்ன ஆஸ்பிட்டலில் அடிக்கடி பாப்பாவின் இதய துடிப்பை கண்காணிப்பார்கள், அப்புறம் ஸ்கேன் எடுத்து பார்ப்பார்கள். வலி வ்ர குளுகோஸ் ஏற்றுவார்கள். அதனால் நீங்கள் ஆஸ்பிட்டலில் அட்மீட் ஆகுவது தான் சரியானது.

ஹாய் துஷி, எனக்கு கூட உங்களை மாதிரி தா.ன். என் பொண்ணு டியூ டே முடிஞ்சு 5 நாள் கழித்து தான் பிறந்தாள். நார்மல் டெலிவரி தான். பயப்படாதீங்க. நான் முதல் நாள் வரை ஒரு பெயி.னும் இல்லாம ஆபீஸ் போய் வந்தேன். ஆபீஸ் நடந்து போற தூரம் தான்.
அப்புறம் உங்களுக்கு குழ்ந்தையின் அசைவு இருக்கும் வரை ஒரு பயமும் இல்லை. அசைவு குறைந்தால் உட.னடியாக டாக்டரை பார்க்கவும். வலி இல்லைன்னாலும், ஊசி அல்லது மாத்திரை உள்ளே வைப்பார்கள். அது வலியை உண்டு பண்ணும். நார்மல் டெலிவரி ஆகும். ஒரு பயமும் வேண்டாம்.
நான் ஹாஸ்பிட்டல் போயும் அந்த வராந்தாவில் வேகமாக நடந்து கொண்டே இருந்தேன். முதல் நாள் மாலை வலி ஆரம்பித்து மறு நாள் விடியற்காலை 4 மணிக்கு எ.ன் பெண் பிறந்தாள். மறு நாளே வீட்டிற்கு வந்து விட்டேன். இது தான் என் கதை. ஆகவே பயம் வேண்டாம். நன்றாக வாக்கிங் போகவும். நிறைய தண்ணீர் குடிக்கவும். ஸ்கேன் பார்த்து குழந்தை வாட்டர் லெவல் குறைந்தாலும் அட்மிட் செய்வார்கள். பார்த்து கொள்ளுங்கள்.
ராதா சுவாமினாதன்

நீங்கள் கவலை படவேண்டாம் எனக்கும் இப்படித்தான் ஆனது 17ம்தேதி டெலிவரி டேட் கொடுத்தார்கள் எனக்கு 23ம் தேதி என் பையன் பிறந்தான் நார்மல் டெலிவரிதான் எல்லோரும் நான் குடுத்த டேட் தப்பாயிருக்கும் என்றார்கள் ஆனால் நான் சரியான் தேதிதான் சொன்னேன் இருந்தாலும் எனக்கு லேட் டெலிவரிதான் ஆச்சி இதனால் கவலை பட ஒன்றும் இல்லை தோழி வீட்ல அம்மாவ கஷாயம் போட்டு தர சொல்லுங்க பா நல்லா நடக்கனும் நீங்க கண்டிப்பா உங்களுக்கு நார்மல் டெலிவரி ஆக நான் கடவுளை பிராதிக்கிறேன்

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

தோழி துஷி, நீங்கள் சீக்கிரமே சுகபிரசவத்தில் அழகான குழந்தை பெற்றெடுக்க என் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.நீங்கள் தேனும் மிளகு தூளும் கலந்து சாப்பிடுங்கள்...பிரசவ வலியாக இருந்தால் அடுத்துஅடுத்து வலி வரும் .... வாழ்த்துக்கள்
--

Hope is necessary in every condition:)

மேலும் சில பதிவுகள்