சம்கி டிசைன்

தேதி: August 2, 2011

4
Average: 4 (9 votes)

 

ohp ஷீட்
சம்கி - க்ரீன், ரெட், கோல்டு மற்றும் ப்ளூ நிறங்கள்
பெவிக்கால்
கிலிட்டர்ஸ்
ஸ்டோன்

 

அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு A4 ஷீட் பேப்பரில் படத்தில் உள்ள டிசைனை வரைந்துக் கொள்ளவும்.
ஒரு அட்டையின் மீது டிசைன் வரைந்த பேப்பரை வைத்து அதன் மேல் ohp ஷீட்டை வைக்கவும். அட்டையிலிருந்து பேப்பர் நழுவி வராமல் இருப்பதற்கு அதன் நான்கு முனையையும் செல்லோ டேப்பால் ஒட்டிவிடவும்.
மயில் தோகைக்கு க்ரீன் கலர் கிலிட்டர்ஸால் அவுட்லைன் கொடுக்கவும்.
அதன் உடல் பகுதிக்கு ப்ளூநிற கிலிட்டர்ஸால் அவுட்லைன் கொடுக்கவும்.
இப்போது மயில் தோகைக்கு க்ரீன் கலர் சம்கியை ஒட்டவும். அதன் உள்ளே வரைந்திருக்கும் சிறிய வளைவுகளில் கோல்டு மற்றும் சிவப்புநிற சம்கியை ஒட்டி முடிக்கவும். மயிலின் இறக்கை பகுதியை தவிர உடல் முழுவதும் ப்ளூ நிற சம்கியை ஒட்டவும்.
இறக்கைப்பகுதியில் வளைவுகளில் கோல்டுநிற கிலிட்டர்ஸால் அவுட்லைன் கொடுத்து முடித்து அதன் உள்ளே கோல்டுநிற சம்கியை ஒட்டவும். இதேப்போல் கீழே வரைந்திருக்கும் தொட்டியிலும் கோல்டுநிற சம்கியை ஒட்டிக் கொள்ளவும்.
வரைந்திருக்கும் பூக்கள் எல்லாவற்றிற்கும் கோல்டுநிற கிலிட்டர்ஸால் அவுட்லைன் கொடுக்கவும். பூக்களின் உள்ளே விரும்பியநிற சம்கியை ஒட்டிக் கொள்ளவும். இலைகளுக்கும் க்ரீன் கலர் கிலிட்டாஸால் அவுட் லைன் கொடுத்து க்ரீன் கலர் சம்கியை ஒட்டவும்.
பட்டர்ஃப்ளைக்கும் கோல்டுநிற கிலிட்டர்ஸ் கொடுக்கவும். உள்ளே கோல்டுநிற சம்கியை ஒட்டவும். பூக்களுக்கு இடையில் உள்ள டிசைனின் ஓரத்தில் ப்ளு நிற கிலிட்டர்ஸால் அவுட்லைன் கொடுத்து நடுவில் பிங்க்நிற ஸ்டோனை ஒட்டவும்.
மயிலின் இருப்பக்கத்திலும் உள்ள சின்ன சின்ன பூக்களுக்கு படத்தில் உள்ளது போல் ஸ்டோன் மற்றும் சம்கியை ஒட்டவும்.
சம்கியில் செய்யக்கூடிய ஒரு அழகிய மயில் டிசைன் ரெடி. பின் பக்கத்தில் வெள்ளைநிற சார்ட், அல்லது ஷைனிங் பேப்பரை வைத்து ப்ரேம் செய்துக் கொள்ளவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சம்கி வொர்க் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு.பேப்பரில் வரைந்திருக்கும் டிசைன் ரொம்ப அழகா இருக்கு.அதற்கு உங்க சம்கி வொர்க் இன்னும் அழகு கூட்டுது.வாழ்த்துக்கள்.

வாவ்! கலக்குறீங்க. அழகு, சூப்பர். வேற என்ன சொல்ல??

அழகோ அழகு. @}->--

ஹும்!! ;)) ஹர்ஷா முந்திட்டீங்களா?? ;)

‍- இமா க்றிஸ்

சூப்பர். ரொம்ப பொறுமை வேணும் போலிருக்கு. நமக்கு இம்ம்புட்டு பொறுமை கிடையாது. அதனால் ரசிப்போம்.

//ஹர்ஷா முந்திட்டீங்களா?? ;)// இமா ஹ ஹ ஹ ஹா......

கலக்குரீங்க போங்க...... இந்த டிசைன் நீங்கலே வரஞ்சதா சொந்த கற்பனையா.... எனக்கு இந்த வேலை ரோம்ப பிடிக்கும் ஆனா டிசைன் வரைய தெறியாது..... உங்க மயில் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

சம கலர்... வழக்கம் போல கைத்தட்டல்!!! அழகான டிசைன், அழகான கலர்ஸ்... நல்ல வொர்க். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா