தோழிகளே எனக்கு ஒரு சந்தேகம் ...
வளைகாப்பு முடிந்ததும் அம்மா வீட்டுக்கு போறபோ ஏன் husbend a பாக்க கூடாது ....எனக்கு பதில் தாருங்கள் தோழிகளே...
தோழிகளே எனக்கு ஒரு சந்தேகம் ...
வளைகாப்பு முடிந்ததும் அம்மா வீட்டுக்கு போறபோ ஏன் husbend a பாக்க கூடாது ....எனக்கு பதில் தாருங்கள் தோழிகளே...
ரேகா
ரேகா, நீங்கள் சொல்லும் இந்த சம்பிரதாயத்தை இப்போது தான் கேள்விபடுகிறேன். எனக்கு தெரிந்து அது போல எந்த formalities-உம் இருப்பதாக தெரியவில்லை. அப்படியிருந்தால் நானும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
Reka Pandian
அப்படி எல்லாம் கிடையாதுங்க இப்போ தான் இப்படி கேள்வி படுறேன் ந பார்த்தவரை கணவன் கூடவே தான் இருப்பாங்க அதானே சந்தோசமும் கூட by Elaya.G
அப்ப வெளினாட்டில் வெளிஊரில்
அப்ப வெளினாட்டில் வெளிஊரில் இருக்குர கணவன் மனைவி என்ன செய்வாங்களாம் அதெல்லாம் சும்மா தேவை இல்லாதது
வளைகாப்பு
ரேகா சொல்வது போலதான் எனக்கும் நடந்தது...வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கும் போது என் கணவர் என் கூடத்தான் இருந்தாங்க....எல்லாம் முடிந்து நான் எங்க அம்மா வீட்டுக்கு கிளம்பும்போது அவுங்கள என் கண்ணுலேயே காட்டல...பின்வாசலுக்கு போக சொல்லிட்டாங்க....எனக்கும் இதற்கு காரணம் தெரியல....இன்னும் ஒன்று திருமணம் முடிந்த புதிதில் தாலி பிரித்து கோர்ப்பதுன்னு ஒரு நிகழ்ச்சி (தாலியை மஞ்சள் கயிறிலிருந்து கழற்றி செயினில் போடுவது) அதுவும் என் நாத்தனார் தான் செய்தாங்க...அப்பவும் என் கணவரை வீட்டில் இருக்க கூடாதுன்னு சொல்லி வெளில அனுப்பிட்டாங்க....இதெல்லாம் எதற்கு என்று இன்னும் எனக்கு தெரியாது....
ரேகா
என் மாமியார் வீட்டிலேயும் இப்படி ஒரு சம்ப்ரதாயம் இருக்கு......அது எதனால் என்று நான் கேட்ட போது அவர்கள் சொன்னார்கள்....அப்படி பார்ப்பதால் இன்னமும் ஏக்கம் தான் அதிகமாகுமாம்.....அதனால் பிரிவு இன்னமும் துயரமாக இருக்குமாம்...அதனால் தான்....
ஒரு வேலை இதற்க்கு வேறு ஒரு அர்த்தம் கூட இருக்கலாம்....பார்க்கலாம் வேறு யாரவது வந்து என்ன சொல்றாங்கன்னு....
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
sumathi
என்னப்பா புதுசு புதுசா சொல்ரீங்க...... எனக்கு தாலி பிருச்சு மாத்ரப்ப என்னவர் என் பக்கத்துல தா இருந்தாரு ரெண்டு பேரயும் ஒன்ன தா உக்கார வச்சாங்க...... நீங்க சொல்லிதா இப்படி ஒன்னு இருக்குனே தெறியுது.......
நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........
hai
Dear all this is ramya from sharjah i am new to this site i want to know how to change to tamil whatever i am typing it is coming in english and also i want to know how to send own comments not reply pls help me
Regards
Ramya
http://www.arusuvai.com/tamil
http://www.arusuvai.com/tamil_help.html try this
Until you try,doesn't know what you do.
ALL IS WELL
வளைகாப்பு
எனக்கும் வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கும் போது என் கணவர் என் கூடத்தான் இருந்தாங்க....எல்லாம் முடிந்து நான் எங்க அம்மா வீட்டுக்கு கிளம்பும்போது அவுங்கள காட்டல...எனக்கும் இந்த சம்பிரதாயத்தை பற்றி தெரியல ....பெரியவங்க கிட்ட கேட்டாலும் சரியா பதில் சொல்லல .....லாவண்யா நீங்க சொன்ன மாதிரி தா எனக்கு சொன்னாங்க...அறுசுவை தோழிகளிடம் கேட்டு தெரிஞ்சுக்கலாம் னு யாரிடமும் வற்புறுத்தி கேட்கல ...பாக்கலாம் வேற தோழிகள் என்ன என்ன பதில் தராங்க னு .....
Hope is necessary in every condition:)
எனக்கும் வலைகாப்பு நடந்தபோது
எனக்கும் வலைகாப்பு நடந்தபோது என் கனவர் கூடதான் இருந்தார். அவரும் எனக்கு நானங்கு வைத்தார். நான் என் அம்மா வீட்டுக்கு போகும்போது அவரும் என்னுடன் வந்தார். Delivery வரை என்னுடன் தான் இருந்தார்.