விடுகதைக்கு விளக்கம் தா....- பாகம் 2

விடுகதைக்கு விளக்கம் தா... பகுதி - 1, 200 பதிவுகள் தாண்டிவிட்டது. ஆகையால் தோழிகள் அனைவரும் தங்கள் விடுகதையையும் அதற்கான விடைகளையும் இங்கு கொடுக்கலாம்....

1. சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது. அது என்ன?
முதல் விடுகதை பதில் சொல்வோருக்கு ஜுஸ் தரப்படும்......

சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது. அது என்ன? --------
அது வேற ஒன்னும் இல்லைங்க்க்கா, "வர மிளகாய் (காய்ந்த சிவப்பு மிளகாய்)".
சரியா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி சரிதான்ப்பா.........ஜூஸ்ன உடனே வந்துட்டாப்ல இருக்கு என்ன ஜூஸ்னு சொல்ல மறந்துட்டேன்........காங்கோ ஜூஸ்ப்பா..... எத்தனை டம்லர் வேணும் உங்க எம்.டிக்கு கொடுக்கலாமா......?
அடுத்த விடுகதை யார் போடப்போற?நானேவா? அல்லது வேறு யாரேனும் வரீங்களா?

ரேணு, நீங்களே போடுங்க.

2. பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. அது என்ன?
அடுத்த விடுகதை பதில் கொடுங்க....

காளிபிளவர், ரேணு, பதில் சரியா?

பச்சை பச்சை டக் டக் பால் பால் டக் டக் குந்துமணி டக் டக் குத்ரைவால் டக் டக் அது என்ன விடு கதை

ரபி, வெண்டைக்காய் பதில் சரியா?

காளிபிளவர் தவறான விடை,
இன்னும் முயற்சி செய்யுங்கள்.......

நட்சத்திரமா ரேணு அல்லது முட்டை கோஸ்
இல்லை ஜீவிஷ்

மேலும் சில பதிவுகள்