சில நண்பர்கள்

நான் இப்பொழுது ஒரு course படித்துவருகின்றேன்,அங்கு எனக்கு ஒரு புதிய நண்பி கிடைத்திருக்கிறார்.அதில் எனக்கு சந்தோசம்தான்,ஆனால் அவர் நான் தன்னோடு மட்டும்தான் பேசவேண்டும் அடுத்தவர்க்ளுடன் நான் பழகினால் அவளுக்கு பிடிக்கவில்லை,இது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை,
ஏன் தோழிகளே பொதுவாக நாங்கள் இந்த உலகத்தில் பலருடன் பழகுகின்றோம்,சிலர் ஏதோ ஒரு வகையில் நமக்கு தாயாக சகோதரியகா சில இன்ப துன்பங்களை பகிர்ந்துகொள்ளும்போது நல்ல நண்பர்களாக மாறிவிடுகின்றோம்,அதற்காக ஒரு வகுப்பில் படிக்கும் மற்றவர்களுடன் பழகவேண்டாம் என்று கூறுவது சுயநலமில்லையா?
இவரை நண்பியாக நான் எப்படி ஏற்றுக்கொள்வது,எப்படி தவிர்ப்பது என்பது எனக்கு தெரியவில்லை,
உங்களுக்கும் இப்படிப்பட்ட அனுபவம் இருக்கின்றதா தோழிகளே அதனையும் பகிர்ந்து இதற்கான பதிலையும் உங்களிடம் எதிர்பார்க்கின்றேன்..................................

எனக்கும் அப்படி சில தோழிகளும் தோழர்களும் உண்டு.

இது சிலருக்கு ஏற்படும் ஒரு பொஸசிவ்நெஸ் தான். இதற்காக நீங்கள் உங்கள் தோழியை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பதிலாக நீங்க எத்தனை பேருடன் பேசினாலும் உங்கள் தோழிக்கு இருக்கும் முக்கியத்துவம் மற்றவர்களுக்கு கிடையாது என்பதை உங்கள் தோழிக்கு புரியவையுங்கள். நான் என்னுடன் கல்லூரியில் படித்த தோழி ஒருத்தியிடம் அப்படி தான் புரியவைத்தேன். அன்று முதல் இன்று வரை அவள் என்னை மற்றவரிடம் பேசவேண்டாம் என்று கூறுவதே இல்லை. பதிலாக அவளுக்கு பிடிக்கவில்லை என்பதை மட்டும் தெரிவிப்பாள். நீங்கள் உங்கள் தோழியிடம் பேசுங்கள். புரியவையுங்கள். புரியவில்லை என்றால் அதற்காக நீங்கள் மற்றவரிடம் பேசுவதையோ பழகுவதையோ எக்காரணம் கொண்டும் தவிர்க்க வேண்டாம். ஒரு வகுப்பில் படிக்கும் போது ஒருவரிடம் மட்டும் பேச வேண்டும் என்பதெல்லாம் நடக்க முடியாத ஒன்று. இதை நினைத்து நீங்கள் குழம்ப வேண்டும். உங்களை உங்கள் தோழி புரிந்து கொள்வார்கள்.

அன்புடன்
பவித்ரா

சுபா, உங்களுக்கு கிடைத்த தோழியை போல தான் எனக்கும் ஒரு தோழி இருந்தார். ஆனால் அவருக்கு 25 வயதிருக்கும். ஆனால் சிறுபிள்ளை போல நடந்து கொள்வார். என்னுடன் மற்ற தோழிகள் பேச கூடாது. பழக கூடாது. தான் மட்டுமே பேசி பழக வேண்டும் என்று நினைப்பார். அவர் சொல்லும் கதைகளை மட்டுமே நாம் கேட்க வேண்டும். நம் கதைகள் குறித்து அவருக்கு எந்த விருப்பமும் இருந்ததில்லை. நான் இதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஏன் என்றால் அந்த பெண்ணுக்கு அப்பா கிடையாது. அம்மாவும், பள்ளி படித்து கொண்டிருந்த தங்கையும் தான். பேங்கில் இருந்த பணத்தில் வரும் வட்டியில் இருந்து குடும்பத்தை ஓட்டி வந்தனர். தவிர அவளுடைய தாய்மாமாவும் உதவி செய்து வந்தார். அதனாலேயே இவள் வேலைக்கு செல்லும் கட்டாயம் வந்தது.

எனக்கு நிறைய வருடங்கள் பழக்கம் இல்லை. நான் வேலை பார்த்த அதே காம்பவுண்டில் தான் அவளும் வேலை பார்த்து வந்தாள். என் வீடும் அவள் வீடும் ஒரே ஏரியாவில் இருந்தது என்று சொல்வதை விட அடுத்தடுத்த ஸ்டாபிங் என்று சொல்லலாம். அதனாலேயே வலிய வந்து நட்பை வளர்த்துக் கொண்டாள். வீட்டில் இவள் தான் பெரிய பெண். பல விஷயங்களில் மெச்சூரிட்டி இல்லாதது போல் நடந்து கொள்வாள். ஆனால் பண விஷயத்தில் பக்கா உஷார்... நயா பைசாவை தவறி கூட பிச்சை காரருக்கு போட மாட்டாள். தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால் அசிங்கம் பாராமல் உதவி நாடுவாள். காலையில் ஆபிஸ் வரும் போது பஸ்ஸில் எனக்காக இடம் பிடித்து காத்திருப்பாள். அந்த இடத்தில் வேறு யாராவது வந்து கேட்டாலும் தர மாட்டாள். பஸ் கிளம்பினாலும் தர மாட்டாள். ஒரு முறை நிறை மாத கர்ப்பிணியான ஒரு தோழி, அவர் இவளுக்கும் தோழி தான் உட்கார இடம் கேட்டால் முடியவே முடியாது இது கல்பனா இடம் என்று கூறி மறுத்து விட்டாள். மறுநாள் சம்பந்தப்பட்ட தோழி என்னிடம் சொல்லி வருந்தினார். இதை வைத்து பார்த்தால் உங்களுக்கே என்ன தோணுகிறது அந்த தோழியை பற்றி. அவளுடைய இந்த குணத்திற்காகவே அவளிடம் யாரும் பேச மாட்டார்கள். யாருக்கும் அவளை பிடிக்காது. அவளுடைய இந்த ஒரு குணத்திற்காகவும், அவள் குடும்ப சூழ்நிலைக்காகவும் மட்டுமே அவளை பொறுத்துக் கொண்டேன். இவள் தோழியாக இருக்கும் இதே நேரத்தில் இன்னொரு தோழியும் எனக்கு பழக்கமானார். மூவரும் ஒரே நேரத்தில் ஒரே பஸ்ஸில் தான் வேலைக்கு செல்வோம். முன்னாடி பழக்கமான தோழியிடம் இருக்கும் கெட்ட பழக்கம் ஜன்னலோர சீட்டை யாருக்கும் தர மாட்டாள். அவளுக்கு பக்கத்தில் உட்கார்ந்தால் கூட்டம் அதிகமாக அதிகமாக அத்தனை பேரும் நம் மேல் தான் விழுவார்கள். அதனால் நான் அப்படி உட்கார்வதை தவிர்த்து விடுவேன். ஆனால் இரண்டாவதாக வந்த தோழி நான் என்ன சொன்னாலும், கேட்டாலும் தட்ட மாட்டார். அதற்கு காரணம் என்னை விட அவர் பெரியவர். அடுத்து, அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும். அதனாலேயே ஜன்னலோர சீட்டை எனக்கு தந்து விடுவார். நாங்கள் இரண்டு பேரும் பேசுவோம்.. பேசுவோம் ஸ்டாப்பிங் வரும்வரை பேசிக் கொண்டே வருவோம்.

முன்னாள் தோழிக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். அதை கண்டு கொள்ள மாட்டேன். இந்த காரணத்திற்காகவே மற்ற தோழிகள் அவளை சீண்டி பார்ப்பார்கள். பின்பு, சிறுபிள்ளை போல நடந்தால் அப்படி தானே செய்வார்கள். தான் வேலை செய்யும் இடத்தில் தனக்கு வேலையில் எதாவது சந்தேகம் இருந்தால் கூட அது குறித்து வேறு யாரிடமும் போய் கேட்க மாட்டாள். ஈகோ பிராப்ளம். அவர்களே வந்து சொல்லி தரட்டும் என்று காத்திருப்பாள். அதே போல அவளுடைய ஆபிசில் அடிக்கடி பேங்க் செல்ல வேண்டிய வேலை இருக்கும். அதற்கும் போக மாட்டாள். ஆனால் அவளுடன் வேலை செய்யும் இன்னொரு பெண் எல்லா வேலைகளையும் சுட்டியாக செய்வாள். வெளி வேலையையும் பார்த்துக் கொள்வாள். அவளை பார்த்து இவள் நன்றாக பொறாமைபடுவாள். இந்த காரணத்திற்காகவே இவளை வேலையிலுருந்து எடுத்துவிட்டனர். வரும் போது அவளுடைய பாஸையே சபித்து விட்டு வந்தாள். இனி இந்த ஆபிசே விளங்க கூடாது என்று :) அப்போதும் இவளுடைய தப்பு இவளுக்கு புரியவில்லை. நான் பலமுறை எடுத்து சொல்லி பார்த்தேன். அப்புறம் விட்டு விட்டேன்.

ஒருவழியாக கல்யாணம் முடிந்தது. அந்த கல்யாணத்திற்கு ஏதோ காரணத்தால் நான் போக முடியவில்லை. ஒருநாள் போனில் அழைத்து வாழ்த்து சொன்னேன். அதற்கு அவள், ஏன் கல்யாணத்திற்கு வரவில்லை? என் கணவருக்கு நிறைய பேர் வந்திருந்தார்கள். அனைவரும் பரிசு பொருட்களை வாங்கி வந்தார்கள். என் சார்பாக யாரும் வரவில்லை. அதனால் எனக்கு ஒரு பரிசு கூட வரவில்லை என்றாள். இவள் போன்றவர்கள் என்னென்பது? அதற்கு பிறகு எனக்கும் அவளுக்கும் காண்டாக்ட் விட்டு போனது. இப்போது எங்கிருக்கிறாள்? எப்படி இருக்கிறாள் என்பது கூட தெரியாது.

என் கருத்தை சொல்கிறேன். இவர் போன்ற தோழிகளிடம் இருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது. ஏனென்றால் இவர்கள் வைத்திருக்கும் பொசசிவ்னஸ் காரணமாக நமக்கு வரவேண்டிய நல்ல வாய்ப்புகளை,நல்ல நட்பை கூட எதாவது சொல்லி தட்டிகழித்து விடுவார்கள். தேவையா இது?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

i search you in form but i can't catch you sorry for the delayed reply.thank you so much for your advice.i use system only after 11pm.so i catch u later.your my first friend in this arusuvai. i'm very happy.
*********ADVANCE HAPPY FRIENDSHIP DAY***********.

பவி உங்களது அநுபவத்தையும் கருத்தினையும் பகிர்ந்தமைக்கு நன்றி.நீங்கள் கூறுவது மிகவும் சரியானதுதான்,சில தோழிகள் புரிந்துகொள்வார்கள்.சில தோழிகள் தங்களது கொள்கையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள்.

கல்ப்ஸ் அதெப்படி எனக்கு இருக்கும் தோழி போலவே உங்களுக்கும் ஒரு தோழி இருந்தாள்.உங்களுக்கு யாரோ எனது புதிய தோழியைப்பற்றிய தகவல் தந்துவிட்டார்கள். (joke)
ஆமாம் கல்பனா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையே.இவளும் அப்படியேதான்,அவளின் தனிப்பட்ட வாழ்க்கையை கூறும்போது ஒரு சில விடயங்கள் என்னைப் பாதித்தது,அதனால்தான் நான் நினைத்தேன் ஒரு சிறந்த தோழியாகவும் என்னால் முடிந்தளவிலான சிறிய உதவிகளையும் பண்ணலாம்,
ஆனால் அவளின் இந்த நடவடிக்கை எனக்கும் மிகவும் வெருப்பாக இருப்பதால் frindship ஐ கட்பண்ணத்தான் தோன்றுகின்றது.

இவளும் உங்கள் தோழிபோலவே எனக்காக வகுப்பில் chair பிடித்து வைப்பதும் அடுத்தவகுப்பு மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் என்னை தனது சிறந்த நண்பி எனக் கூறுவதும் இதெல்லாம் தேவையில்லாத வேலை என எனக்கு தோன்றுகின்றது.இருந்தாலும் என்னால் எதுவும் எதிர்த்து பேசமுடிவதில்லை.

நாங்கள் படிக்கபோவது இன்னொரு மொழியை கற்பதற்கு, அங்கு தமிழ் மொழி பேசுபவர்கள் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வருவார்கள்.அவர்களுடன் பேசும்போதுமட்டுமே எங்களுடைய பேச்சுத்திறனுக்கான தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ளமுடியும்.ஆனால் இவர் மற்றைய நாட்டவரினருடன் கூட நான் பேசுவதை விரும்புவதில்லை.

ஒரு நாள் எங்களுடன் படிக்கும் ஒரு பெண்மணி நாங்கள் கன்ரினூக்கு யூஸ் வாங்கப்போகும்போது தானும் வருவதாக கூறினாள்,ஆனால் இவளோ அவர் எங்களுடன் வரவேண்டாம்,நீ கூறு நாங்கள் கன்ரினுக்கு போகவில்லை வேறு எங்கேயோ போகிறோம் என,எனக்கு பெரிய சங்கடமாக போய்விட்டது,மறுநாள் அந்த பெண்மணிக்கு அவளைப் புரிந்துவிட்டது,நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்,அவள் it's o.k இது உன்னுடைய தவறல்ல எனக்கூறினாள் .

இப்படியானவர்கள் எப்போதுதான் தங்களை உணரப்போகிறார்களோ தெரியவில்லை,இந்த இழை எனக்கு மட்டுமில்லை ஒவ்வொருவரும் தங்களது நட்பு எவ்வளவு உண்மையானதும் சிறந்ததும் எனப் புரிந்து நல்ல நட்பாக மிளிரவேண்டும் என்பதே எனது விருப்பம்.
உங்களது அனுபவத்தினையும் கருத்தினையும் அழகாக பதித்த கல்பனாவிற்கு எனது நன்றிகள்.

நாந்தான் கோமு. மறந்திருக்கமாட்டீங்க. ரொம்ப நாள் கழிச்சு எட்டி பாக்கிரேன்.
நிறைய புது ஆட்கள் சேர்ந்திருக்காங்க. இனிமேல தான் ஒவ்வொருவரையும் தெரிஞ்சுக்கணும்,.

இந்த இழையில் இந்த கருத்தினை பதிவிடுவது சிறந்தது என நினைக்கின்றேன், இந்த அறுசுவையில் பாராட்டபடவேண்டிய பல தோழிகளில் கல்பனாவும் ஒருவரே,ஒவ்வொரு தோழிகளும் முகம் தெரியாத மற்றைய தோழிகளுக்காக எவ்வளவு அக்கறையுடனும் அன்போடும் பதில் கூறும்போது நானும் இந்த அறுசுவையில் ஒருவராக இருக்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது.
கல்பனா நீங்கள் எழுதும் ஒவ்வொரு வரிகளும் அட்வைஸும் மிகவும் மனதிற்கு ஆறுதலானவை.உங்களது இந்த பணி என்றென்றும் தொடர வேண்டும் என்பதே எனது ஆசையும் எல்லோரது விருப்பமாகவும் இருக்குமெனவும் நான் நம்புகின்றேன்........................,,,,,,,,,,,

மேலும் சில பதிவுகள்