தாய்லாந்து சைவ தேங்காய்ப்பால் சூப் (Hed Tom Kha)

தேதி: June 14, 2006

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

மஷ்ரூம் - 10
காலங்கால்(தாய்லாந்து இஞ்சி) - ஒரு பெரிய துண்டு அல்லது இஞ்சி - ஒரு பெரிய துண்டு
லெமன் கிராஸ் - 2
எலுமிச்சை இலைகள் - 6
சீலரி - ஒன்று
பச்சை மிளகாய் - 3 (இரண்டாக கீறியது)
பொடித்த காய்ந்த மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்
திக்கான தேங்காய்ப்பால் - 2 கப்
எலுமிச்சையின் சாறு - 1/2 பழத்தின் சாறு
உப்பு - ஒரு ஸ்பூன்
சீனி - 2 ஸ்பூன்
சோயா சாஸ் - 1/2 ஸ்பூன்
வெங்காய தழைகள் - 5
கொத்தமல்லி - ஒரு பிடி
தண்ணீர் - ஒரு கப்


 

மஷ்ரூமை சுத்தம் செய்து சிறுத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
லெமன் கிராஸ்(வெள்ளை நிற உட்பகுதி), செலரி, வெங்காய தாள்களை சிறியதாக அரிந்துக் கொள்ளவும்.
இஞ்சியை பெரிய துண்டுகளாக(வட்ட வடிவில்) நறுக்கவும்.
ஒரு பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மஷ்ரூம், லெமன் கிராஸ், இலைகள், உப்பு, சீனி,காலங்கால்(இஞ்சி), சீலரி, பொடித்த மிளகாய்த்தூள், பச்சை மிளகாய் போட்டு 7 நிமிடம் கொதிக்க விடவும்.
தேங்காய்ப்பால் சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் எரிய விடவும். தேங்காய்ப்பாலை அதிக தீயில் கொதிக்க விட்டால் திரிந்து விடும்.
2 நிமிடம் கழித்து சோயாசாஸ் ஊற்றவும்.
கொத்தமல்லி, வெங்காயத்தாள்களை தூவி இறக்கவும். எலுமிச்சை சாறை சேர்க்கவும். எப்போதும் எலுமிச்சை சாறை இறக்கிய பின்தான் ஊற்ற வேண்டும். இல்லாவிடில் டேஸ்ட் மாறிவிடும்.


இது தாய்லாந்தில் செய்யப்படும் சைவ சூப். இதே சூப்பை சிக்கனிலும் செய்யலாம்.
இந்த சூப்பை சிக்கன், இறால் உபயோகப்படுத்தியும் செய்யலாம். சோயாசாஸ்க்கு பதிலாக ஃபிஷ் சாஸ் உபயோகப்படுத்தவும். என்னுடைய முந்தைய சீஃபுட் சூப்பில்(டாம் யாம் தாலே) லெமன் கிராஸ், காலங்கால், ஃபிஷ் சாஸ் பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். இந்த சூப் ஜலதோஷத்திற்கு மிகவும் நல்லது. தேங்காய்ப்பால், இஞ்சி இரண்டுமே ஜலதோஷத்திற்கு நல்லது. லெமன் கிராஸ் கிடைக்காவிடில் எலுமிச்சை இலைகளை(10) அதிகம் சேர்க்கவும். Sankara Sir நீங்கள் கேட்ட சைவ சூப்பை எழுதி விட்டேன். o.k. வான்னு சொல்லுங்க.

மேலும் சில குறிப்புகள்


Comments

its good

வாழ்த்துக்கள்,
கார்த்திக்
வாழ்க்கை வாழ்வதற்கே ;) !!!
(நான் உபயோகிப்பது close-up அல்ல) :)