38வது வாரம் விலா எலும்பில் வலி:

ஹாய் தோழிகளே,
எனக்கு ஆகஸ்ட் 20 டெலிவரி டேட் சொல்லி இருக்கிறார்கள்,எனக்கு மதியத்திலிருந்து முதுகு மேலே விலா எலும்பிலும் ,சில நேரம் மார்பகதுக்கு கீழே உள்ள எலும்பிலும் தாங்க கூடிய அளவு வலி இருந்து கொண்டே இருக்கிறது,ஆனால் வலி அதிகரிக்கவில்லை.ஒரே அளவாக வலித்து கொண்டு இருக்கிறது.

38வது வாரத்தில் இப்படிதான் வலி இருக்குமா?இது எதனால் ஏற்படுகிறது?டாக்டர் எனக்கு புதன் கிழமைதான் அப்பாயிண்ட்மெண்ட் குடுத்து உள்ளார்,இதற்கு வீட்டு வைத்தியம் ஏதாவது கூறுங்கள் தோழிகளே,
பின்குறிப்பு:
இது கேஸ்டிரபுள் பிராப்ளம் இல்லை(Gas Trouble)

1 ஸ்பூன் சீரகத்தை 1 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய பின் குடிக்கவும். வலி நின்றுவிட்டால் சூடு வலிதான் ஒன்றும் பிரச்சினை இல்லை.வலி குறைய வில்லை என்றால் உடனே மருத்துவரை சந்திக்கவும்.

KEEP SMILING ALWAYS :-)

டியர் மஞ்சு பயப்பட வேணாம் ...இது நார்மல் தான் ..நீங்க volini gel ல அந்த இடத்தில் தடவுங்க ...எனக்கும் இப்படிதான் இருந்தது ...gel apply பண்ணதும் சரி ஆச்சு...நீங்க ஏதும் கவலை படாமல் இருங்க ...நல்லா ஆரோகியமான குழந்தை ய பெற்று எடுக்க வாழ்த்துக்கள் ....குழந்தை பிறந்ததும் மறக்காமல் எனக்கு சொல்லணும் ...ok a...

Hope is necessary in every condition:)

அன்பு நாகா,ரேகா,
ரொம்ப நன்றி தோழிகளே,எனக்கு குழந்தை பிறந்ததும் கண்டிப்பாக உங்களுக்கு தான் தெரியபடுத்துவேன்,என்னை மாதிரி வெளிநாட்டில் தனியாக வசிப்பவர்களுக்கு அறுசுவை தோழிகள் தான் உறவுகள்,அதனால கண்டிப்பாக இங்க வந்து சொல்லுகிறேன்,தேங்க்யூ ரேகா.

மேலும் சில பதிவுகள்