குந்தன் ஜூவல் மாடல்ஸ் - 2

தேதி: August 9, 2011

5
Average: 4.8 (13 votes)

 

குந்தன் நெக்லஸ்:
நான்கு துளையுடைய குந்தன் ஸ்டோன் - விரும்பிய நிறத்தில்
க்ளாஸ் டியூப் மணிகள் - கோல்டுநிறம்
கோல்டு மணிகள்
ரோப்
வளையங்கள்
குங்குரு - வெள்ளை மற்றும் சிவப்புநிறம்

குந்தன் தோடுகள்:
தோடுக்கான வளையங்கள்
தோடு ஹூக்
பேப்பரிக் க்ளூ
கோல்டுநிற குங்குரு
குந்தன் ஸ்டோன்
கிரிஸ்டல் மணிகள்
கோல்டுநிற வளையம்

 

டபுள் ஸ்டோன் போன்று இரண்டு முத்துக்கள் பதித்த மணிகள் 20 எடுத்துக் கொள்ளவும். எப்போதும் போல் முன்கழுத்திற்கு தேவையான கியர் ஒயர் எடுத்து கியர் லாக் போட்டுக் கொள்ளவும். முதலில் ஒரு கோல்டு மணி, ஒரு முத்து ஸ்டோன், ஒரு கோல்டு மணி அடுத்து ஒரு க்ளாஸ் டியூப் என்று வரிசையாக 20 மணிகள் கோர்த்து முடித்து ரோப்பை ஜாயிண்ட் செய்துவிடவும். தோடுக்கு இரண்டு மணிகள் எடுத்து கீழே மட்டும் முத்து குங்குருவை கோர்த்து கொள்ளவும்.
மேலே செய்த மணியில் முத்துக்கள் கோர்த்தது போலவே நான்கு துளையுள்ள, 21 வெள்ளைநிற குந்தன் ஸ்டோனை கோர்த்துக் கொள்ளவும். இரண்டு பக்கமும் 10,10 ஸ்டோனை விட்டுவிட்டு நடுவில் உள்ள ஸ்டோனில் கீழ் ஒரு வளையம், ஒரு ஸ்டோன் என்று மாறி மாறி நான்கு ஸ்டோன் கோர்க்கவும். வலது, இடது பக்கம் ஒவ்வொன்று குறைவது போல் 3,2,1 என்று கோர்த்துக் கொள்ளவும். நடுநடுவே ஒவ்வொரு ஸ்டோனையும் இணைக்க வளையத்தை பயன்படுத்தவும். தோடுக்கு நீளமாக ஐந்து ஸ்டோனை கோர்த்து காது கொக்கியை மாட்டி விடவும்.
வெள்ளைநிற ஸ்டோனில் செய்த நெக்லஸ் போலவே சிவப்புநிற குந்தன் ஸ்டோனில் செய்தது. இதில் நடுவில் ஸ்டோனை இணைக்க வளையத்தை பயன்படுத்தவில்லை. இது செயின் செயினாக தொங்குவது போன்ற மாடல்.
சிவப்புநிற நெக்லஸ்க்கு தோடு செய்வதற்கு ஒரு வளையத்தில் மூன்று சிவப்புநிற ஓவல்வடிவ மணியை கோர்த்துக் கொள்ளவும். நடு ஸ்டோனில் வளையத்தை கோர்த்து அதில் நான்கு துளையுள்ள ஒரு சிவப்பு ஸ்டோனை கோர்த்து வளையத்தை நெருக்கி விடவும். அதன் கீழ் டபுள் ஸ்டோன் உள்ள சிவப்புநிற ஸ்டோனை கோர்த்து விட்டு காதுக் கொக்கியை மாட்டி முடிக்கவும்.
நான்கு துளையுள்ள குந்தன் ஸ்டோனில் செய்யக்கூடிய எளிமையான மாடல்கள்.
இது சிம்பிள் நெக்லஸ். இதில் டாலர் செய்வதற்கு ஒரு வளையத்தில் மூன்று ஓவல் வடிவ குந்தன் ஸ்டோனை கோர்க்கவும். நடுவில் உள்ள குந்தன் ஸ்டோன் அடியில் ஒரு வளையத்தில் 3 குங்குரு, ஓவல் வடிவ ஸ்டோன் கோர்க்கவும். அதன் கீழ் ஒரு வளையத்தில் 3 குங்குருவை கோர்த்து வளையத்தை நெருக்கிவிடவும்.
கியர் ஒயர் இல்லாமல் வெறும் வளையத்தை மட்டும் கொண்டு செய்தவை. இதில் ரோப்க்கு பதில் ஆரம், கையின் போன்றவற்றிற்கு பயன்படுத்தும் செயினை மாட்டிக் கொள்ளலாம்.
குந்தன் தோடு செய்ய மேற்சொன்ன அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
இது சிறிய தோட்டிற்கான வளையம். மேற்புறத்தில் உள்ள சிறிய பூப்போன்ற டிசைனில் பேப்பரிக் க்ளூவை தடவவும். அந்த டிசைனின் வடிவத்திற்கேற்ப குந்தன் ஸ்டோனை தேர்ந்தெடுத்து பதிக்கவும்.
மூன்று வளையத்தில் ஒவ்வொன்றிலும் நான்கு கோல்டுநிற குங்குருவை கோர்த்து, கீழே உள்ள ஜிக்ஜாக் வளையத்தில் கோர்த்து விடவும்.
மற்றொரு வளையத்திலும் செய்து தோட்டுக்கான ஹூக்கை மாட்டி விடவும்.
இது பெரிய தோட்டிற்கான வளையம் ப்ளெயின் கம்பியாக இல்லாமல் டிசைன் செய்யப்பட்டு பேன்சிஸ்டோர் கடையில் கிடைக்கிறது. கிரிஸ்டல் மேலே அதே நிறத்தில் வளையம் இணைத்தது போல் மணிகள் உள்ளது. ஒரு வளையத்தில் ஒரு கிரிஸ்டல் மணி என்று கோர்த்து வைக்கவும்.
ஒன்பது ஓட்டையில் கிரிஸ்டல் மணியை கோர்த்து விடவும். தோட்டின் நடுவில் உள்ள துளையிலும் ஒரு கிரிஸ்டலை கோர்க்கவும். தோட்டுக்கான ஹூக்கை மாட்டிவிட்டால் அதிகம் பாரமில்லாத மிகவும் லைட் வெயிட்டான தோடு ரெடி.
கிரிஸ்டல் மணிக்கு மேல் உள்ள இடைவெளியில் விருப்பமிருந்தால் பேப்பரிக் க்ளு வைத்து குந்தன் ஸ்டோனை பதித்துக் கொள்ளலாம். இதே தோட்டில் இன்னும் டிசைன் வேண்டுமெனில் குந்தன் கற்களை சுற்றி ஜர்தோஸியை தேவையான அளவு நறுக்கி வட்டமாக ஒட்டவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாவ் !!!!!!! அணைத்து மாடல்களும் அழகாக அருமையாக இருக்கிறது .......

ஹாய் உங்க குந்தன் நகைகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு அதிலும் கியர் ஒயர் இல்லாம செஞ்ச அந்த necklace வெரி cute

சம சூப்பரா இருக்கு எல்லா மாடலும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லாமே சூப்பர் இதுக்கு தேவையான பொருள் எங்க கிடைக்கும் சொல்லுங்க ple im in kunrathur so enaku pakathula enga kidaikum n adoda peyar elam sona easya irukum

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எல்லா மாடல்ஸுமே அழகா இருக்கு டீம். கடைசி தோடு சூப்பர்.

எல்லாம் டிச்சென் சூப்பர் .
வேற டிசியன் இரூந்தா சொல்லுங்க ப்ளீஸ்

roamba nallrukku.......................pls innum neraiya modela solli thanga