தேதி: June 15, 2006
பரிமாறும் அளவு: ஐந்து நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
க. மாவு - கால் கிலோ
மைதா - ஐம்பது கிராம்
அரிசி மாவு - நூறு கிராம்
பெ. வெங்காயம் - அரை கிலோ
சமையல் சோடா - கால் டீ ஸ்பூன்
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்
எண்ணை - அரை லிட்டர்
மிளகாய் தூள் - ஒரு டீ ஸ்பூன்
அரஞ்சு கலர் பவுடர் - கால் டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - நான்கு கொத்து
முதலில் வெங்காயத்தை மெல்லிய நீள நீளமான துண்டுகளாக நறுக்கவும்.
க. மாவு, அரிசி மாவு, மைதா மூன்றையும் கலந்து கலர் பவுடர், மிளகாய் தூள், உப்பு, சோடா சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பிசறவும்.
புட்டு பதத்திற்கு நன்கு பிசறி, வெட்டி வைத்த வெங்காயத்தையும் சேர்த்து பிசறவும்.
கலவை பிசு பிசுப்பில்லாமல் உதிர் உதிராக இருக்க வேண்டும்.
எண்ணையை சூடாக்கி கலவையை அதில் பிசறி விடவும்.
மொறு மொறுப்பாக வெந்ததும் எடுக்கவும்.
எல்லாவற்றையும் பொரித்து முடித்து கடைசியாக கறிவேப்பிலையையும் பொரித்து தூள் பஜ்ஜியுடன் சேர்த்து கலக்கவும்.
இந்த பஜ்ஜி தேங்காய் சட்னியுடன் மிக சுவையாக இருக்கும்.
Comments
bajji.
dear chithra,
இதில் உள்ள அளவுகள் (கடலமாவு,அரிசி மாவு,மைதா )இவற்றை மட்டும் கப் அளவுகளில்
தருவீர்கலாplz . எனக்கு செய்து பார்க்க சுலபமக இருக்கும்.
sajuna
bajji.
thank u
sajuna