falls positivena என்ன?

ஹெலோ தோழிகளே!எனக்குpcod இருக்கு,treatment பார்த்துட்டு இருக்கேன்.போன மாதம் 35நாள்ல urine test பண்ணினோம் positivenu வந்தது.38வது நாள் period வந்திடுச்சு.doctorகிட்ட கேட்டா falls positivenu சொன்னாங்க,'falls positive' naஎன்ன யாராவது தெரிஞ்சா சொல்லுங்க

false +ve காட்ட காரணம் பல உண்டு:

1. நீங்க உபயோகித்த டெஸ்ட் கிட் பிழையானதா இருக்கலாம். அல்லது எக்ஸ்பைர் ஆனதாக இருக்கலாம்.

2. யூரின் விட்டு இத்தனை நிமிடத்தில் டெஸ்ட் ரிஸல்ட் பார்க்கலாம்னு கிட்டில் போட்டிருப்பாங்க... நீங்க அத்தனை நிமிடத்தை தாண்டி வெகு நேரம் கழித்து பார்த்திருக்கலாம்.

3. நீங்கள் எடுத்து கொள்ளும் மருந்து எதாவது கூட காரணமாக இருக்கலாம்.

4. உங்களுக்கு hCG injection கொடுத்திருந்தாலும் +ve என காட்டலாம்.

இதே போல் தான்... நீங்கள் 15 நாட்களுக்கு முன்பாகவே டெஸ்ட் செய்தால் false -ve காட்டும். புரிந்ததா??

கவலை வேண்டாம்.. விரைவில் தாய்மை அடைய வாழ்த்துக்களூம், பிராத்தனைகளும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி வனிதா

உங்கள் கேள்வியை இப்போது தான் பார்த்தேன் ,
உங்களுக்கு திருமணமாகி எவ்வளவு நாள் ஆகின்றது? ..
எதற்கும் கவலை படாதீர்கள் தோழி .
நமக்கு விரைவிலே இறைவன் குழந்தை செல்வம் அருள்வார் ..
நீங்க எங்க ட்ரீட்மென்ட் எடுக்குறீங்க ?

நான் செட்டிநாடு மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் மூன்று மாதம் எடுத்தேன் ,
அங்கே பணம் நிறைய போனதே அன்றி ஒரு முன்னேற்றமும் இல்லை ...
நீங்கள் மாதவிலக்கான மூன்றாவது நாள்,வெறும் வயிற்றில் மூன்று மாதம் வரை ,
மலை வேம்பு சாறு குடித்து பாருங்கள் தோழி ..நல்லது நடக்கும் என்று தோன்றுகிறது ..

நான் இந்த மாதம் குடித்து இருக்கிறேன் ..நமக்கெலாம் விரைவிலே கடவுள் கருணை காட்டுவார் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

இப்போது தான் உங்க ப்ரொஃபைல் பார்த்தேன்... வந்தவாசி... ஆரணி வந்தவாசி??? செட்டிநாடு ஹாஸ்பிடல்னா.... கேளம்பாக்கம் செட்டிநாடா??? அங்கே யார் பார்த்தது??? விரும்பினால் சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆரணி வந்தவாசி தான் ,திருவண்ணாமலை மாவட்டம் .

வனி கேளம்பாக்கம் செட்டிநாடு ஹாஸ்பிடல் தான்,

பெண் மருத்துவர் ராதா பாண்டியன் ,கொஞ்சம் வயசானவங்க..

எவ்ளோ இன்ஜெக்ஷன்ஸ் போட்டாங்க ,மூணு மாசத்துல ,கிட்ட தட்ட முப்பது ஆயிரம் செலவாயிடிச்சு ..

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

நானும் உங்க ஊர் தான்... வந்தவாசி பக்கம் ஏந்தல் மடம். :) உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

நீங்க சொல்ற வயசான லேடி.. ஒல்லியா முடி கலரா இருக்குமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒல்லியா இல்ல ,குண்டாவும் இல்ல ,மீடியமா இருப்பாங்க ,கண்ணாடி போட்டிருப்பாங்க ..

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

ஓ... ஓகே ஒக்கே... எனக்கு அங்க தான் பையன் பிறந்தான். கவிதா பார்த்தாங்க. சரி நீங்க அரட்டை பக்கம் வாங்க.. இங்க இதுக்கு மேல பேசினா ஒதைப்பாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்