தயிர் குழம்பு

தேதி: August 10, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

தயிர் - 1 கப்
காரட் துருவல் - 2 tbsp
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1/4 tsp
மிளகு - 1/4 tsp
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - 3
கருவேப்பிலை - 2
எண்ணெய் - 1 tsp

இதில் காரட்டுக்கு பதிலாக பீட்ரூட் கூட சேர்த்து செய்யலாம்.


 

எண்ணெய் சூடாக்கி தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து காரட் சேர்த்து வதக்கவும்.
மூன்று நிமிடத்தில் இறக்கி உப்பு சேர்த்து கட்டியில்லாமல் அடித்துள்ள தயிரில் கொட்டவும்.
சீரகம், மிளகு, பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலையை ஒன்னும் பாதியுமாக இடித்து வைத்துக் கொள்ளவும்.
இந்த கலவையை தயிரில் கலக்கவும்.
சுவையான தயிர் குழம்பு தயார்.


இதில் காரட்டுக்கு பதிலாக பீட்ரூட் கூட சேர்த்து செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

லாவண்யா, உங்களுடைய தயிர் குழம்பு செய்தேன்... நன்றாக இருந்தது... என் மகளுக்கு மிகவும் பிடித்து இருந்தது...
என்னுடைய அம்மா தயிர் வைத்து கொஞ்சம் வேறு விதமாக மோர் குழம்பு ஒன்று செய்வார்கள்... இதுவும் அதே போல் சுவையாக இருப்பதாக என் மகள் சொன்னாள்...

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)