கரு நிற்க help me PLE

நான் ஒரு மாதம் முன்பு கூறியிருந்தேன் திருமணமாகி 8 மாதம் ஆகியும் கரு நிற்கவில்லை என்று அப்ப ரெங்கலெஷ்மி அக்கா ஆறுதல் சொன்னார் ஆனால் போன மாதம் 10 நாள் நின்று விளக்கானேன் அதன் முன்பு கடுமையான வயிற்று வலியும் இருந்தது அதனால் நான் என்ன செய்தால் கரு நிற்கும் எனக்கு உதவுங்கள்

ரேணுகா, உடல் சூடு இருந்தாலும் கரு தங்காது. அதே போல் வீக்னஸ் இருந்தாலும், ரத்தசோகை இருந்தாலும் இப்படி ஆகும். ஒவ்வொருத்தர் உடல்வாகு ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்த விஷயத்தில் மற்றவர் அனுபவத்திற்காகவோ, ஆலோசனைக்காகவோ காத்திருப்பதை விட ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகி இதற்கான காரணத்தை தெரிந்து அதற்குரிய மருத்துவம் செய்துக்கொள்வதே சிறந்த வழி. நான் மேலே சொன்னவை பொதுவான காரணங்கள் தான். நீங்கள் வயதில் சிறியவர் தானே. அதனால் இப்போதே அதைபற்றி கவலையும், குழப்பமும் வைத்துக் கொள்ளாதீர்கள். நல்லா சத்தான ஆகாரங்களை உண்டு மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் பிரியமான கடவுளை வேண்டி கொள்ளுங்கள். சீக்கிரமே நல்ல செய்தியோடு வருவீர்கள். அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

thanks akka

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

கல்பனா சொல்வது மிகச்சரி. டாக்டர கன்சல்ட் பண்ணுங்க. சந்தோஷமான மனநிலை வேணும்.கஷ்டமான விஷயங்கள அறுசுவை தோழிகள்ட பகிர்ந்துகோங்க. சீக்கிரமா நல்ல செய்தி சொல்லுங்க. வாழ்த்துக்கள் :)

KEEP SMILING ALWAYS :-)

THANKS akka unga varthai palikatum akka

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

renuga nenga neraiya fruits sappitunga.etha pathi feel pannathinga.ungalukku marriage aagi 8 months than aguthu.nan onu sonna thappa ninaikkathingana ungalukka solrean ennakku doctor sonnathu. nenga sex mudunthathum udanea enthirikkathinga our 5 minites aganum.enna ippadi pannina pregnant aga chance irrukku.apparam unga ovalation time therinchugonga ithu usefulla irrukkum.kadavla nambunga.

thanks muthu na ida dan ipa try panituiruken pa n fridgela vecha foodlam sapdakudadunu solranga adanalum ipdi aguma pa ple tel me

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

enaku abdomon vali irundute iruku ma im trying to conceive iduku karanam enava irukum ple reply me im in kunrathur inga yaravadu gyana doctors irukanga irunda sollunga ple

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு,
விரைவில் தாய்மையடைய வாழ்த்துக்கள்........
குன்றத்தூர் முருகன் கோவிலில் குழந்தை பிறந்தவிடன் அவனுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டுங்கள் நினைத்தது நடக்கும்.......:-))

மனதில் பாசிட்டிவ் எண்ணங்களை அதிகப்படுத்துங்கள்......
உங்களுக்கு ரெகுலர் பீரியடுன்னு நினைக்கிறேன்.....அப்படி இருந்தால் நீங்கள் போலிக் ஆசிட் மாத்திரை தினமும் ஒன்று(காலை அல்லது இரவு )எடுத்துக் கொள்ளுங்கள்....இது பெண்களின் கரு முட்டையை வலிமப்படுத்திக் கொடுக்கும்.கருவின் நரம்பு மண்டலத்தை நன்றாக கவனிக்கும்.
மேலும்,உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.சூடான பானங்களை தவிர்த்துவிடுங்கள்.பெப்ஸி,கோக்,7அப் போன்ற செயற்கை பானங்களையும் தவிருங்கள்.......வேலைகளை சுலபமாக்கி செய்யுங்கள்......
மாடி ஏறுவது ஈரங்குவது போன்றவற்றில் கவனமாக இருங்கள்......அவசரம் வேண்டாம்,நடப்பதில் கூட மென்மை வேண்டும்,அதிர்ந்து நடவாதீர்கள்,அலைச்சல் அதிகம் வேண்டாம்.........
இந்த செய்முறைகளுக்குப்பின் நாள் தள்ளினால் நீங்கள் உங்களவருடன் செர்வதை தற்காலிகமாக நிறுத்திவையுங்கள்,ஒருவாரம் பொருத்து யூரின் டெஸ்ட் பண்ணிப்பாருங்கள்........அதில் பாசிட்டிவ்னா எனக்கு ஸ்வீட் அனுப்புங்கள்.....ஒருவேளை அப்படி இல்லைன்னா.......,கவலையோ,சோகமோ,கோவமோ,பயமோ வேண்டாம்.ஏன்னா சிறிய கரு யூரின் டெஸ்டில் தெரிய வாய்ப்புகள் குறாஇவு.இது என் அனுபவம்....இன்னும் ஒருவாரம் பொருத்து திரும்ப டெஸ்ட் செய்யுங்கள்........இதனிடைப்பட்ட காலங்களில் கூடல் வேண்டாம்.....அப்போதும் டெஸ்டில் தெரியலை,ஆனால் நாள் தள்ளி இன்னுஇம் வரலைன்னா,தாமதிக்காமல் டாக்டரை அனுகி டிவி ஸ்கேன் எடுக்கனும்னு சொல்லி காரணம் சொல்லுங்கள்.....ஏன் டிவி ஸ்கேன்னா சிறிய கரு நார்மல் ஸ்கேனில் தெரிவது கடினம் அதனால்தான்..சரியா?
இந்த சமயங்களில் போலிக் ஆசிட் மாத்திரையை மறவாம,தவறாமல் தினமும் சாப்பிட வேண்டும்......நாள் தள்ளினலும் சாப்பிட வேண்டும்ப்பா.....
இன்னும் ஏதேனும் சந்தேகம்ன்னா கேளுங்கள் தெரிந்ததை சொல்கிறேன்.........

ஹாய் ரேணுகா,
மாலை வணக்கம். எனக்கும் இந்த மாதம் 11 நாள் தள்ளிருக்கு. நான் ஞாயிறுகிழமை டெஸ்ட் பார்த்தேன். நெகட்டிவ் வந்துருச்சு, ரொம்ப வருத்தமாய்டு நான் இப்ப எந்த டேபிளட்டும் எடுக்கல. ஆனா இன்னும் பீரியட்ஸ் வரல ஏன் வரல தெரில ரொம்ப பயமா இருக்கு. அப்ப நான் ஹாஸ்பிடல் போய் பாக்கவா இல்ல இன்னும் ஒரு வாரம் கழிச்சு இன்னும் ஒருக்கா டெஸ்ட் பண்ணிட்டு போகவா எனக்கு கடைசியா ஜூலை 5 பீரியட்ஸ் வந்துச்சு. கால் வலிக்குற மாதிரி வயிறு வலிக்குற மாதிரிலாம் இருக்கு என்ன பண்ண தெரில யார்கிட்ட யும் சொல்ல என் வீட்டுக்காரங்களுக்கு மட்டும் தெரியும். எல்லாரும் பாப்பா எதிர் பாக்குறாங்க சொன்னா ரொம்ப ஆசை படுவாங்க அதான்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மீனு,
கண்டிப்பா நாளை காலையில் முதல் யூரியன் எடுத்து உடனே டெஸ்ட் பண்ணி பாருங்கள்........நல்ல சேதியாகத்தான் இருக்கும்.....டெஸ்ட் செய்வது முக்கியம்.அப்படி இல்லைன்னாலும் உங்களவரிடம் கூறி நாளை மாலை டாக்டரை கன்சல்ட் செய்யுங்கள்......நால் தள்ளியதற்கு என்ன காரணமென தெரிந்து கொள்ளவேண்டுமல்லவா......
நான் முன்னமே சொன்னதுபோல சிறு கரு யூரி டெஸ்டில் தெரிவது கடினமாம்.எனக்கு மூன்று முறை யூரின் டெஸ்ட் செய்தும் தெரியவில்லை,நெகட்டிவ்தான் வந்தது.....மேலும் 2வாரம் விட்டு மீண்டும் டெஸ்ட் செய்தேன் அதில் பாசிட்டிவ் வந்தது.குழப்பத்துடந்தான் நானும் என்னவரும் டாக்டரிடம் சென்றோம்.அங்கு டிவி ஸ்கேன் செய்து தாய்மையை உருதி செய்தார்கள்......
என் தோழிக்கும் இப்படித்தான் ஆனது.நன் சொன்னதை கவனித்து அவள் மீண்டும் மருத்துவரிடம் சென்று டெஸ்ட் செய்தால்.அவளுக்கும் பாஸிட்டிவ் வந்தது.....
நீங்கள் நாலை ஏன் இன்று முதலே போலிக் ஆசிட் சாப்பிடலாம் தவறில்லை.டாக்டர் பார்த்து கன்பாம் பண்ணினதும் முதல் மூன்று மாதங்களுக்கு இந்த மாத்திரைதான் தருவார்.இதைப்பற்றி சந்தேகம் வேண்டாம்.........
வாழ்த்துக்கள்........
இன்னும் ஒன்று சொல்ல மறந்து விட்டேன்.......இப்போது மருத்துவர்கள் அஜாக்கிறதையா அல்லது வேலைப்பளுவா எனத் தெரியவில்லை.....அவர்களும் யூரின் டெஸ்ட்டில் நெகட்டிவ் வந்தால் உடனே பீரியட்ஸ் வரத்தான் மாத்திரை கொடுக்கிறார்கள்.....அப்படி உங்கள் மருத்துவர் கொடுத்தால் தைரியமாக வேண்டாம் என்று சொல்லுங்கள்........
ஏனெனக் கேட்டால் இயற்கையாக வர எதிர்பார்க்கிறேன்னு கூறுங்கள்....அவர்களே போலிக் ஆசிட் தருவார்கள்..........என் தோழிகளுக்கு இப்படிதான் முதலில் நெகட்டிவ் வந்தது பின் டிவி ஸ்கேனில் குழந்தையிருப்பது உறுதியானது........ஆகவே எனக்கும் ஒரு டவுட் உள்ளதுன்னு கூறூங்கள்..........அவரிடம் பேசித்தெளிவடையுங்கள்......கண்டிப்பாக உங்களுக்கு தற்போது கரு தங்கியிருக்கும் என எனக்குத் தோன்றுகின்றதுப்பா..........
மீண்டும் வாழ்த்துக்கள்.........மீனு.........,

மேலும் சில பதிவுகள்