புது அம்மாக்களுக்கு

ஹாய்,என் குழந்தைக்கு இன்று தான் 10 நாட்கள்.நான் எப்போது எண்ணை தேய்த்து குழிக்க வைக்க வேண்டும்.இது புது அம்மாக்களுக்கும் உதவும் பதில் தாருங்கள் தோழிகளே.

ஸ்னேகமுடன்
துஷி

your Question taking oil bath for u or your baby. you take oil bath 11th 0r 16 th day of your delivery date depending upon the your body conditions. ask your mom or mother inlaw what method followed your family . Now a days doctors say dont take oil bath for infants..regards.g.gomathi.

நீங்கள் குழந்தைக்கு தொப்புள் கொடி விழுந்து அந்த புண் நன்றாக ஆரிய பின்னரே தண்ணி ஊற்ற வேண்டும். அது வரையில் குழந்தையை ஒரு ஈர துணியால் துடைத்துவிட்டாலே போதுமானது. அவர்கள் எங்கே வெளியே போய் வேலை செய்து அழுக்காகிரார்கள். அதனாலே துடைத்தாலே போதுமானது. புண் ஆரிய பின்னர் நீங்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து தலைக்கு குளிக்க வைக்கலாம். தலைக்கு குளிக்க வைக்கும் போது சிறிதளவு தாய்பாலை சங்கில் எடுத்து, ஒரு சின்ன துணியில் பாதி மிளகு இரண்டு சீரகம் இரண்டு சொட்டு துளசி சாறு விட்டு முடிந்து பாலில் குளிக்கவைக்கும் முன்னர் ஊறவைத்து குளித்துவிட்டு வந்த பின்னர் குடுக்கவும். இது கொடுக்கணும் என்று கூட இல்லை. கொடுத்தாலும் கொடுக்கலாம்.

கோமதி

நீங்கள் கூறியிருக்கும் பதில் படிப்பதற்கு சற்று கடினமாக இருக்கிறது....... தமிழ் எழுத்துதவி உபயோகித்து தமிழில் பதிவிட்டால் எல்லா தோழிகளுக்கும் உபயோகமாக இருக்கும் :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாழ்த்துக்கள் துஷி.
பாப்பாக்கு எண்ணெய் குளியல் வேண்டாம்ப்பா. Johnson shampoo மட்டும் பயன்படுத்துங்கள். அது தான் பாப்பாக்கு நல்லது. நான் என் குழந்தைக்கு இது தான் பயன்படுத்துறேன்.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

துஷி, குழந்தைக்கு எண்ணெய் மாதத்திற்கு 1 தடவை மஷாஜ் செய்து குளிக்க வைங்க பா. ஏன்ன அடிக்கடி எண்ணெய் தேய்து குளிக்க வைத்தல் பெரியவங்களுக்கே சளி பிடிக்கும். நீங்க பாப்பாக்கு ஜான்சன் பேபி ஆயில் யூஸ் பண்ணுங்க பா. அது கூட மாதம் ஒரு தடவை குளிக்க வைக்க மட்டும்.வேண்டும் என்றால் உடம்புக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிக்க வைக்கலாம்.

அன்பு தோழிகளுக்கு வணக்கம்.சிரமம் பார்க்கமல் எனக்கு பதில் போட்டதற்க்கு நன்றி.என்னுடய அம்மா,மாமி எல்லொருமே நாட்ல இருக்ரதால எனக்கு உதவி செய்ய யாரும் இல்ல என் ஹஸ் மட்டும் தான் அது தான் நான் எல்லமே புதுசா உஙளிடம் கேட்கிறேன்

ஸ்னேகமுடன்
துஷி

மேலும் சில பதிவுகள்