சிறுநீர் கற்கள் வராமல் இருக்க

எனது அம்மாவிற்கு சிறுநீர் கற்கள் இரண்டாவது முறெயாக வந்து நாட்டுமருந்து சாப்பிட்டு கொண்டுள்ளார்கள்.சிறுநீர் கல் கரெய மற்றும் வராமல் மறுபடியும் இருக்க என்ன உணவு தவிர்க்கணும்?என்ன உணவு சேர்க்கணும்?
மூல நோயிற்கு என்ன உணவு ஆகாது.

சிறுநீரக கற்கள் வராமல் இருக்க கண்டிப்பாக தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் தண்ணீர் தண்ணீர் தான் இதற்க்கு முதல் மருந்து. தண்ணீர் அந்த கற்களை நமது உடலிலிருந்து வெளியேற்றிவிடும். வாழை தண்டு சாறு அல்லது அப்படியே சமைத்தும் சாப்பிடலாம். நார் சாது அதிகம் உள்ள உணவை சேர்த்துக் கொள்ளனும். தக்காளி மிளகாய் விதைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் காவேரி. எனது கணவருக்கும் சில வருடங்களாக சிறுநீரகக்கல் பிரச்சனை இருந்துவருகிறது. ஆரம்ப காலத்தில் சரியான உணவுப் பழக்கம் இல்லாதது, சரியாக தண்ணீர் குடிக்காததால் பெரும்பாலும் இந்தப் பிரச்சனை பெரிதாகிறது.

4வருடங்களுக்கு முன் கல் வெளியேறும் போது கடுமையான வலி ஏற்பட்டதால் ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்து குளுக்கோஸ் ஏற்றி ட்ரீட்மென்ட் செய்தார்கள். கடந்த 3 வருடங்களாக அடிக்கடி சிறு சிறு கற்கள் வெளியேறுவதும் அப்போதெல்லாம் கொஞ்சம் போல வலியும் இருக்கிறது.

தெரிந்த நண்பர் சொன்னார் என்பதற்காக புதிதாக ஒரு ஹோமியோபதி டாக்டரிடம் சென்ற மாதம் சென்றார். மருந்து சாப்பிட்ட 15 நாளில் சிறுநீர் சிவப்பாக வர ஆரம்பித்தது. நாங்கள் பயந்து போய் அரசுமருதுவமனையில் பணிபுரியும் டாக்டர் வைத்திருக்கும் ஹாஸ்பிடலுக்கு சென்று காண்பித்தோம்.

அவர் சில புதிய மருந்துகளை தந்து சில உணவுகளைத் தவிர்க்க கூறினார். தக்காளி, கீரை, முட்டை, பால், காபி, எலுமிச்சை, திராட்சை போன்றவைகளீண் அளவைக் குறக்கக் கூறினார்.

அவர் கூறிய பின்புதான் எங்களுக்குப் புரிந்தது வலி வருவதற்கு முதல் வாரம் டாக்டர் பட்டியலிட்ட உணவுகளை அதிகமாக சேர்த்தோம் என்பது.

தற்போது வாரத்திற்கு 3 நாள் வாழத்தண்டு சாறும், 4 நாட்கள் இளநீரும் ரெகுலராக குடிக்கிறார்.

இன்று கூட கல் வருவது போல இருக்கு என்று சொல்லிகிட்டே இருக்கார்.

மேலும் வெள்ளை பூசணிக்காயை சாறு எடுத்தோ அல்லது சமைத்தோ சாப்பிட்டாலும் கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று டாக்டர் கூறினார்பா.
ட்ரை செய்து பாருங்கள்.

சிறுநீரக பிரச்சனை குறித்து நம் அறுசுவை யில் நிறைய விவாதித்துள்ளனர். அவற்றையும் ஒரு விசிட் பண்ணுங்க தோழி.
டாக்டரின் கருத்துப்படி வரும் கல்லை எடுத்து லேபில் டெஸ்ட்டுக்கு கொடுத்தால் எந்த பொருளால் கல் உருவாகிறது என்று கண்டு பிடிக்கலாம்.

சரியான நேரத்தில் இழையை ஆரம்பிசிருக்கீங்க. நன்றி தோழி.

நம்ம அறுசுவை தோழிகளின் அட்வைஸ் என்ன என்பதை நானும் உங்களோடு சேர்ந்து எதிர் பார்க்கிறேன்.

(ஹிஹிஹி பெரிய பதிலா இருக்கேன்னு பயந்திடாதீங்க.மனசுல இருக்கிறத சொல்லிபுட்டேன். அவ்ளோதான்)
(கோவிச்சுக்காதீங்க.......... நீங்க யு.எஸ்.ஏ காவேரியா...? இல்லை உஷாகாவேரியா....?)

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

வணக்கம்
பாகற்காய் சேர்ப்பது நல்லது என்று கேள்விபட்டேன்.வாழெத்தண்டு நிரெய சேர்க்ககூடாது என்கிறார்கள்

ஹாய் காவேரி எப்படி இருகிங்க. நான் புதுசா என்ட்ரி கொடுதுர்கேன், நம்ம அரட்டை அடிக்கலாமா ................

ALWAYS BE ACTIVE. NOTHING IS IMPOSSIBLE TO DO, SO BE CONFIDENT IN YOUR LIFE.

மேலும் சில பதிவுகள்