ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்...

அறுசுவை தோழிகளே, எல்லோரும் நலமா??
நீண்ண்ண்ட இடைவேளைக்கு பிறகு, இன்னிக்கு தான் நான் அறுசுவையில் பதிவிடறேன்... சரி, ஒரு இன்ட்ரெஸ்டிங்கான இழை தொடங்களாம்னு தான் வந்தேன்(இது இன்ட்ரெஸ்டிங்கா இருக்கா இல்ல மொக்கயா இருக்கானு நீங்க தான் சொல்லணும்).

உங்க கணவர் உங்களுக்கு call பண்ணா உங்க மொபைல்-ல என்ன ரிங் டோன் கேக்கும், அதே மாதிரி உங்க கணவர், உங்க நம்பருக்கு அவரு மொபைல்-ல என்ன டோன் செட் பண்ணி இருக்காருன்னு சும்மா ஜாலியா வந்து சொல்லுங்க...

சரண்யா இப்படி நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்து இருக்கறதுனாலே சட்டெனு அடையாளம் தெரியமாட்டுது. அடிகடி வந்து ஒரு அட்டனென்ஸ் கொடுங்க. உங்க ரிங் டோன பத்தி முதலில் சொல்லுங்க. அடுத்து தோழிகள் வருவாங்க.

ஹாய் சரண்யா. இடைவெளிக்கு பிறகு வந்தாலும் சூப்பரான ஒரு தலைப்போட தான் வந்திருக்கீங்க. உங்களோட எல்லா தலைப்புகளுமே ரொம்ப ஜாலியா ஸ்வாரஸ்யமா தான் போய் இருக்கு இதுவும் அப்படிதான். எங்க நம்ம தோழிகள் யாரையும் காணும் பதிவு போட.

ஹை என் ஹுச்பன்ட்கு வச்சு இருக்கர ரிங்டொனெ சிரு தொடுதலிலெஹ் சின்ன சின்னதாய் சிரகுகள்

ONLY CLOSE FRIENDS CAN EASILY IDENTIFY SME LITTLE LIES IN UR SMILE & SME MRE TRUTH IN UR TEARS NVR MISS THEM IN UR LIFE

@வினோஜா - திடுதிப்புன்னு என்னனமோ வேளை வந்துருச்சுங்க, அதான் அறுசுவை-ல தல காட்ட முடில, இனிமே கண்டிப்ப அடிகடி பதிவிட முயற்சி பண்றேன்...

@யாழினி - Thanks யாழினி, நீங்க சொன்னது வஞ்ச புகழ்ச்சி அணி இல்லதான? :P

தோழிகளா, நானே ஆரம்பிச்சு வைக்கிறேன் ,ஆனா என் பின்னாடி எல்லாரும் வந்து பதிவிடனும், சரியா?

என் அத்தான் கால் பண்ணா, என் மொபைல்-ல, "காக்க காக்க" படத்துல வர்ற "கலாபக்காதலா..." டோன் கேக்கும்... அத்தான் எனக்கு என்ன டோன் செட் பண்ணி இருக்காங்கன்னு கேக்காதீங்க :( ... iPhone default டோன் "டிங் டிங் டிங் டிங் டிங்" தான் யாரு கூப்டாலும் அடிக்கும்... நானும் iPhone-ல டோன் மாத்தறதுக்கு எவ்ளோ ட்ரை பண்ணேன், ஒன்னும் வேளைக்கு ஆகல... :P

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

ஹாய் சரன்யா.... ரொம்ப நாள் கழித்து வந்து இழை ஆரம்பித்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். திருமணமான புதிதில் என் கணவர் அழைத்தால் "அன்பே என் அன்பே உன் முகம் பார்க்க" என்ற ரிங் டோனும் ,தற்போது சர்வம் படத்தில் வரும்"காற்றுக்குள்ளே வரும் வாசம் போல எனக்குள் நீ" என்ற பாடலும் வைத்திருக்கேன். என்னவர் ரொம்ப வருஷமா நோக்கியா ரிங் டோன் தான் வைத்திருந்தார். இப்பதான் ஞானோதயம் வந்து கோ படத்தில் வரும்"அமளி துமளி" பாடலை என் பெயருக்கு செட் செய்திருக்கார். நல்ல இம்ப்ரூவ்மென்ட் ல............

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

வணக்கம் சரன்யா,
நல்ல இழை,சும்மா சொல்லலைப்பா இருவரிடையே உள்ள அன்பை இனிமையாக நினைக்க ஐந்து நிமிடங்கள் ஒதுக்கமுடியும்.......
என் கணவர் எனக்கு போன் பண்ணும்போது வரும் பாடல்(ரிங்டோன்)
"நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமைதனிமையே........"
தொலைவில் இருக்கும்போதுதானே தனைமையை அனுபவித்து போன் பண்ணி பேசத்தூண்டுகின்றது.......அதுதான் இந்தப்பாடல்.......
நான் போன் செய்தாலும் இதையே பாடுமாருதான் அவரும் செட்பண்ணியிருக்கார்...........இது முதலில் எனக்குத் தெரியாது..........கொஞ்ச காலம் சென்ற பின்னர்தான் தெரியும்..........
நினைவுகூற வாய்ப்பளித்ததற்கு நன்றி சரன்யா........

ஹாய் , நான் ஸ்ரீதேவி செந்தில்.நல்ல தலைப்பு,பார்த்தவுடன் பதில் போடாமல் போவதற்கு மனம் வரல.நான் வைத்திருக்கும் ரிங்டோன் "மாங்கல்யம் தந்துனா ஹேனா மமஜீவன ஹேதுனாம்...அலைபாயுதே படத்துல ஷாலினுக்கும் மாதவனுக்கும் மேரேஜ் நடக்கும் போது வருமே அந்த theme song தான்"
என்னவரின் ரிங்டோன் "பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்...சத்தம் போடாதே படத்திலிருந்து"

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

ஹாய் சரண்யா எப்படியிருகிங்க உங்க கிட்ட பேசி ரொம்ப நாளாச்சி.கணவன் மனைவி ரொமாண்ஸ் பத்தி இவ்வளவு சுவாரஸ்யமா யார் பேசுரான்னு பாத்தா அட நம்ம சரண்யா தான்.எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க நம்ம சரண்யா.என் கணவரின் ரிங் டோன் மதராசி பட்டணம் படதில் வரும் பூக்கள் பூக்கும் தருணம் பாடல்.என்னோட ரிங் டோன் உன்னை தானே தஞ்சம் என நம்பி வந்தேன் மானே

@ப்ரியாஅரசு,ரேணுகா,ஸ்ரீதேவி,சுந்தரி - உங்கள் அனைவரின் பதிவிற்கும் நன்றி... சும்மா சொல்லக்கூடாது, எல்லாரும் பயங்கர ரொமான்டிக்கா தான் ரிங் டோன் வச்சுருக்கீங்க... இப்படி ரிங் டோன் செட் பண்றது எல்லாம் ரொம்ப சின்ன விசயம்தான், ஆனா அதுலயும் நம்ம அன்யோன்யத்த வெளிபடுத்தலாம்... கரெக்ட் தான?

அப்புறம், நம்ம மற்ற தோழிகள் எல்லாம் எப்போ வந்து பதிவு போட போறீங்க???

சீக்கிரம் வாங்கப்பா... :)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

இன்னும் நிறைய பேர் வந்து இங்க பதிவிடவே இல்லையே, ஓடிவாங்க பார்க்கலாம், நான் சொல்ல இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆகும்.

மேலும் சில பதிவுகள்