யூரினரி இன்பக்சன்

தோழிகளே எனக்கு யூரினரி இன்பக்சன் ஆகி ஒரு வாரம் ஆகுது எனக்கு வலி தாங்க முடியாமல் மருத்துவர் கிட்ட போனேன் அவங்க நெறைய தண்ணீர் குடிக்க சொன்னாங்க.

தண்ணீர் குடித்து பத்து நிமிடதுக்கொரு முறை பாத்ரூம் போகும் படி ஆகுது என்ன செய்யறது தயவு செய்து சொல்லுங்க என்ன செய்யலாம் என்று .

குளிர்ச்சியான உணவு எடுத்துக்கணும் என்றால் எப்படி பட்ட உணவு எடுத்துக்கலாம்.தண்ணீர் குடுப்பதால் என்ன பயன்.

இந்தமாதிரி இன்பக்சன் ஏன் வரும் என்று சொல்லுங்கள் இனி வாழ்கையில் இப்படி ஒரு வலி வேண்டாம் ரொம்ப கச்ட்டபட்டுவிட்டேன் தோழிகளே உதவுங்கள்.

lakshmi மருத்துவர் உங்களுக்கு antibiotic தந்திருப்பார்கள் என நினைக்கின்றேன்.கட்டாயமாக ஒவ்வொருத்தரும் குறைந்தது ஆறு கிளாஸ் தண்ணிராவது ஒரு நாளைக்கு பருகவேண்டும்,இல்லையெனில் சிறுநீரகத்தில் சுருக்கம் ஏற்பட்டு இது ஒரு வகையான கிருமிதொற்றுக்கு உள்ளாகின்றது,
இதனாலேயே இந்தமாதிரி இன்பக்சன் ஏற்படுகின்றது.
இதற்கு CRANBERRY JUICE மிகவும் சிறந்தது.இது சிறுநீரகத்தை நன்றாக சுத்தப்படுத்தும்.

எனக்காக பதில் தந்தமைக்கு மிக்க நன்றிகள் சுபா மருத்துவர் மருந்து கொடுத்தார்கள் ஆனால் இன்னும் எனக்கு சரி ஆகவில்லை அதன் காரணம் தான் என்ன வென்று தெரியாமல் இங்கே வந்து கேட்டேன்.urine போகின்ற இடத்தின் மேலே கட்டிபோல உள்ளது இது ஏன் எப்படி என தெரியல ஆனால் என் கணவர் இதற்க்கு சூட்டினால் வந்து இருக்கும் அதான் என்று சொல்கிறார்.வலி குறையவே இல்லை.தண்ணீர் குடித்துகொண்டேதான் இருக்கேன் சுபா :( எனக்கு என் நிலைமை எனக்கே பரிதாபமாக உள்ளது.என்னால் நடக்க கூட முடியவில்லை.

CRANBERRY JUICE எங்கே கிடைக்கும் வேற ஏதும் juce குடிக்கலாமா?ஒரு வாரமாக அவதி படுகிறேன்.help me

விஜயா,சூட்டுனால் தான் உடம்பில் கட்டிகள் உண்டாகும்.தினமும் தலைக்கு நன்றாக குளியுங்கள்.பின் ஒரு மணிக்கு ஒரு தடவை தண்ணிர்,மோர் எடுத்துக்கொள்ள்லாம். பெஸ்ட் கேன்பர்ரி ஜூஸ் தாங்க.எல்லா கடைகளிலும் கிடைக்கும்.சூட்டு அயிட்டம் எதுவும் சாப்பிடாதிங்க.எனக்கு யூரின் போகும் போது லேசா பெயின் தெரிஞ்சா கேன்பர்ரி ஜூஸ் எடுத்துப்பேன் .தண்ணிர் தாராளமா குடிங்க
manoranjitha.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

ஹாய் vijaya... உண்மையிலேயே ரொம்ப தர்ம சங்கடமான பிரச்சனைதான். நான் காலேஜ் படிக்கும் போது எனக்கும் யூரினரி இன்ஃபக்ஷன் வந்து மிகவும் சிரமப்பட்டுவிட்டேன். அப்போ அடிக்கடி சுடுதண்ணீர் வைத்து வெதுவெதுப்பான சூட்டில் யூரின் போகும் இடத்தை நன்கு கழுவ வேண்டும். ஏனென்றால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலியை சற்று குறைக்கும். எக்காரணம் கொண்டும் அடிக்கடி சிறுநீர் வருமே என்ற எண்ணத்தில் குடிக்கும் தண்ணீரின் அளவை குறைத்துவிடாதீங்க. குளிர்ச்சியான உணவுகள்: முலாம் பழம் ஜீஸ், சாத்துக்குடி ஜீஸ், ஐஸ் மோர்+வெந்தையம் போன்றவைகளை ட்ரை செஇது பாருங்கள். இளநீர் சாப்பிடுங்க. நான் யூரினரி இன்பக்ஷன்ல அவதி பட்டப்ப ஹாஸ்ட்டலில் இருந்ததால் என்னால் வெறும் தண்ணீர் மட்டுமே குடிக்க முடிந்தது. எனக்கு 3 நாளில் சரியாச்சு. உங்களுக்கு எத்தனை நாளாக இருக்கிறது...? டாக்டர் ஆன்டிபயாட்டிக் மருந்து கொடுத்திருக்காங்களா?

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

தோழியே மருத்துவர் உங்களுக்கு mg குறைந்தளவிலான மாத்திரைகளை தந்திருக்கிறார்போல் தெரிகிறது,ஆனால் உங்களின் நோயின் தாக்கம் அதிகளவு இருக்கின்றது,இந்த மாத்திரைகள் 3.4 எடுத்தவுடனேயே வலி உடனடியாக குறைந்துவிடும்,தொடர்ந்தும் நீங்கள் இப்படியாக இருந்தால் நிச்சயம் மறுபடியும் மருத்துவரை போய் பார்க்கவும்,வெளிநாடுகளில் அதிகளவில் இந்த ஜுஸ் கிடைக்கின்றது,உங்கும் கிடைப்பதாக தோழி ஒருவர் கூறியுள்ளார்,பெரிய supermarket களில் try பண்ணி பாருங்க,

இல்லாவிட்டால் அதிகளவிலான தண்ணீரில் லெமன் பார்லி கலந்து பருகவும்.தண்ணீரை விட சிறந்த மருந்து எதுவும் இதற்கு கிடையாது,கட்டாயமாக மருத்துவர் தரும் எல்லா மாத்திரைகளையும் எடுத்துமுடிக்கவேண்டும்{complete course}நிச்சயம் நீங்கள் விரைவில் குணமாவீர்கள்,இதற்காக கவலைப்பட வேண்டாம் தோழியே............

தோழிகளே எனக்கு ரொம்ப உடம்பு முடியாமல் போய் இப்போதான் சுகமானேன் எனக்கு பதில் கொடுத்து ஆறுதல் கொடுத்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி

ஹாய் தோழிஸ் என் தம்பி கு ஒரு வாரமா feverஇருக்கு,யுரின் காலை இல் மட்டும் மஞ்சளா போகுது,வேரு எதுவும் தொந்தரவு இல்லை, 3 dr கிட்ட போயாட்சு, manjal kamalai illai,fever test இல் எதுவும் இல்லை,எனக்கு மிகுந்த பயமாக உள்ளது,feverவிட்டு விட்டு வருது பா,உடம்புல ஒவ்வொரு இடமா சுடுதாம்,please help me.

இன்பெக்ஷன் இருக்குதான்னு பாருங்க. பிவேர் இருப்பதால் டாக்டரிடம் காண்பிங்க.

"எல்லாம் நன்மைக்கே"

dr kitta poyatchupa,netru mattum than pokala,oru varama daily hospital than,fever ethuvumae illankiranga,ana fever adikuthu,avanukku overa viyarvai pokum,athu nalla irukkuma

pathil podunga yaratchum please

மேலும் சில பதிவுகள்