மீன் கிரேவி (மீன் பொய்பொரியல்)

தேதி: June 16, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சதைப்பற்றான மீன் துண்டுகள் - 5
மிளகு சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பூண்டு (நசுக்கியது) - 4 ஸ்பூன்
மல்லிக்கீரை - பாதி கட்டு
இறால் க்யூப் - கால் க்யூப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டீஸ்பூன்
தண்ணீர் - 100 மில்லி


 

மீனை சுத்தம் செய்து அத்துடன் எண்ணெய், தண்ணீர் உட்பட குறிப்பில் சொன்ன அனைத்தையும் ஒரு வாணலியில் போட்டு, மூடி போட்டு லேசான தீயில் மீனை வேகவைக்க வேண்டும்.
பதமாக வெந்தவுடன், மல்லிக்கீரையை நைசாக நறுக்கி போட்டு கிரேவி வற்றிவிடாமலும், மீன் களைந்துவிடாமலும் புரட்டி இறக்கிவிட வேண்டும்.
இதை பொய் பொரியல் என்றும் சொல்வார்கள்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இறால் க்யூப் என்றால் என்ன?

இறால் க்யூப் என்றால், இறாலுடன் சில மசாலா பொருட்கள் சேர்த்து சிக்கன் க்யூப், மட்டன் க்யூப் போலவே விற்கப்படுகிறது. சில சமையல்களில் அதிலிருந்து சிறிது சேர்க்கும்போது சுவை கூடும்.