தாய்பால் சுரப்பதை நிறுத்த

என் குழந்தைக்கு 10 மாதம் ஆகின்றது. தாய் பால் கொடுப்பதை நிறுத்த உள்ளேன். பால் சுரப்பதை எப்படி நிறுத்துவது. வீட்டு வைத்தியம் சொல்லவும். தாய்பாலுக்கு பதிலாக இரவில் என்ன உணவு கொடுக்கலாம். வேறு பால் கொடுத்தால் குடிக்கமாட்டேன் என்கின்றாள்.

வணக்கம் சீதா,
நான் ஒன்று சொல்லட்டுமா?இப்போது எதற்காக தாய்ப்பாலை நிறுத்தவேண்டும்? குழந்தைக்கு இயற்கை கொடுத்த முழுதும் சத்தான ஆகாரம் தாய்ப்பால் மட்டும்தான்......அவர்கள் குடிக்கும்வரையோ அல்லது குறைந்தது ஒன்றரை இரண்டு வருடம் வரையிலோ கொடுக்க வேண்டும்........
இப்போது பத்து மாதம் என்பதால் குழந்தைக்கு தாய்ப்பால் மற்றும் சிறிது திட ஆகாரங்கள் கொடுக்கலாமே......... இது என் கருத்துப்பா.........

மல்லிக பூவை மாரில் கட்டிக்கொண்டால் பால்சுரப்பு நிற்கும் என்பார்கள்...ஆனால் நமது டாக்டரிடம் கேட்டால் ...அவர் மாத்திரை கொடுப்பார்...ஆனால் இன்னும் ஆறுமாதம் போகட்டும்மே...என் நண்பி....ஏன் இந்த அவசரம்.....

இப்ப நிறுத்துவது நல்லது தான்... 1 வயதுக்கு மேல் நிறுத்துவது கஷ்டம். இப்போ ஒரு நாளைக்கு எத்தனை முறை கொடுக்கறீங்க? அதை அப்படியே பாதியா குறைங்க... அதாவது ஒரு நாளைக்கு 3 முறை கொடுத்துகிட்டு இருந்தா 2 முறையா குறைங்க, கொஞ்ச நாளில் அது பழகினதும் 1 முறையா குறைங்க. முக்கியமா இரவில் தூங்கும்போது கொடுப்பதை நிறுத்துங்க. னீங்க கொடுப்பதை குறைத்தாலே பால் சுரப்பது குறையும். இன்னும் 1 மாதத்தில் பாலே கிடைக்காது, தானாக பசிக்கு நீங்க கொடுக்கலன்னா எதாவது உணவுக்கு பழகிடுவாங்க. வேறு எதுவும் வீட்டு வைத்தியம் வேண்டாம். நான் என் மகனுக்கு 1 1/2 வயது வரை கொடுத்து விட்டு நிருத்த முடியாமல் ரொம்ப சிரமப்படேன். அதான்ல் 1 வயதுக்கு முன் நிருத்தி விடுவது நல்லது. நான் டாக்டர்ஸ் நிருத்த சொல்லியும் கேட்காமல் கொடுத்தேன்... டாக்டர்ஸ் 1 வய்து ஆகும்போதே நிருத்திடுங்க, இல்லன்னா மற்ர உணவு எடுக்க மாட்டாங்கன்னு சொன்னாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னக்கும் ஆசை தான். ஆனால் என் மகள் பால் குடிப்பதை நினைத்து கொண்டு சரியாக சாப்பிட மாட்டேன் என்கிறாள். இரவு முழுவதும் பால் குடித்துகொண்டே இருக்க வேண்டும் என்கிறால். பாலை நிறுத்தினாள் தான் ஒழுங்காக சாபிடுவாள் என்ட்று கோருகின்ட்ரனெர். நன்றி தொழிகலெஅ.

நீங்கள் சொல்வடெ சரிதான் வனிதா மேடம், நான் பகலில் பால் கொடுப்பதை நிறுத்தி விட்டேன் . இரவில் 3,4 தடவை எழுந்திருக்கிராள். வேறு எதுவும் குடிக்க மறுக்கிறாள். பால் கொடுக்காததல் பால் கட்டி கொன்டு மிகவும் வேதனையாக உள்ளது. Tஹயவு செஇது பால் சுரக்கமல் ஒரிஒலெ வழி சொல்லுங

குழந்தைக்கு எத்தனை காலம் வரையில் பால் கொடுக்க வேண்டும் என்பது பற்றி மாற்றுக் கருத்துகள் நிறையவே இருக்கு. இருந்தாலும் என் சொந்த கருத்து இரண்டு வயது வரையாவது அல்லது குறைந்தது ஒரு வயது வரையாவது கொடுக்க வேண்டும். பால் குடிப்பதை நிறுத்தினால் தான் குழந்தைகள் நன்றாக சாப்பிடுவார்கள் என்றும் இல்லை.
எப்பொழுதுமே குழந்தைக்கு தூங்கும் போதோ அல்லது தூங்க வைக்கவோ பால் கொடுக்க கூடாது. அப்படி செய்தோமே ஆனால் அவர்களுக்கு பிற்காலத்தில் பற்கள் சொத்தை ஆகலாம் அல்லது காவிட்டி பிரச்சனை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுவும் இல்லாமல் நீங்கள் குழந்தைக்கு இரவில் உறங்கும் போது பால் கொடுக்கும் போது அவர்கள் சிறிதளவு பாலை அப்படியே வாயில் வைத்திருப்பார்கள். அது நல்லதல்ல...அது தான் பல் பிரச்சனைக்கு காரணம். இரண்டாவது அப்படி இரவில் பால் குடிப்பதால் அவர்கள் வயித்துக்கு தேவையான உணவு அவர்களுக்கு கிடைத்துவிடுவதால் பகலில் சாப்பாட்டில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் நீங்கள் முதலில் இரவில் பால் கொடுப்பதை நிறுத்தினாலே எல்லாம் சரியாகிவிடும்.
இரவு உங்களின் குழந்தைக்கு தேவை உங்களின் ஸ்பரிசம், பாதுகாப்பான உணர்வு அதனால் தான் அவர்கள் உங்களை நாடுகிறார்கள். அவர்களை உங்களிடமிருந்து சற்று தள்ளி படுக்க வையுங்கள். அவர்கள் படுக்கையில் உங்களின் வாசமுள்ள சட்டையோ அல்லது எதாவது துணியை பக்கத்தில் போட்டு விடுங்கள். இரவில் அழுதால் தண்ணீரை தவிர எதுவும் கொடுக்காதீர்கள். இது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும்.
ஒரு சுலபமான வழி இருக்கிறது. அதற்க்கு நாம் மெனக்கடனும். உங்களின் குழந்தை சராசரியாக இரவில் எப்பொழுது எழுந்து பால் குடிக்கும் என்று பட்டியலிட்டு அவர்கள் எழும் முன்னரே நீங்கள் எழுந்து கொடுங்கள். முதலில் அவர்கள் ஒரு ஐந்து நிம்டம் குடித்தால் அதை மறு நாளைக்கு நான்கு என்று குறைத்துக் கொள்ளுங்கள். இரண்டு naal கழித்து அதையே மூன்று என்று அப்படியே படி படியாக குறைத்துக் கொள்ளுங்கள். முற்றிலும் நிறுத்திய பின்ன கண்டிப்பாக பாவம் பார்த்துக் கூட தரக் கூடாது. அது மறுபடியும் பழக்கமாகி விடும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

thaipal punithamanathu iyarkaiyaga vara kudiyathu thaippal oru kulanthaikku full sturnth&sakthi atthakaiya thiran kottathu thaipal

மேலும் சில பதிவுகள்