எத்தனை ஜென்மம்

தோழிகளே எனக்கும் நீண்ட நாட்களாக ஒரு ஆசை தனி இழை ஆரம்பித்து உங்களுடன் உரையாடவேண்டும்,ஆனால் நீங்கள் பேசுவீர்களோ தெரியாது என்ற எண்ணத்தில் அந்த நினைப்பை கைவிட்டுவிடுவேன்,இருந்தாலும் ஒரு நம்பிக்கையோடு இந்த சுவாரஸ்யமான இழையை ஆரம்பிக்கின்றேன்.
திருமண வாழ்க்கை என்பது ஒரு நேரான பாதையில் சந்தோஷமாக பயணிப்பதுதான் என்பது எல்லோருடைய எண்ணமும் ஆனால் அதில் வளைவான, கரடு முரடான சில பாதைகளையும் வெற்றிகரமாக கடக்க வேண்டும் என்பதனை நாம் நினைக்க தவறிவிடுகிறோம்.
ஏன் நீங்கள் இவ்வளவு நிறைய பேசுகிறீர்கள் என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது,சரி விடயத்திற்கு வருகின்றேன், அதாவது
1)எல்லாப் பெண்களுக்கும் அவரவர் கணவரே எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவரை கணவராக வரவேண்டும் என விருப்பம் இருக்கும்,உங்கள் கணவரை உங்களுக்கு மீண்டும் மீண்டும் வாழ்க்கைத்துணையாக வர நீங்கள் நினைப்பது ஏன்?
2)உங்களவர் உங்களுக்காக எந்த விடயத்தில் மாறவேண்டும்?அல்லது அவருக்காக நீங்கள் எதனை மாற்றிக்கொள்ள வேண்டும்?(கோபம்,உனது,எனது உறவுக்காரர் என பிரித்து பேசுவது,வேலை டென்ஷனை வீட்டில் காட்டுவது,எதுவாயினும்)அல்லது நீங்கள் எதிர்பார்த்தபடி இப்போது அதனை மாற்றிக்கொண்டீர்களா?எப்படி?
3)உங்களவரிடம் உங்களுக்கு இதுவரையிலும் பிடிக்காத குணம் என்ன?
4)எந்தெந்த வகையில் உங்கள் கணவர் உங்களுக்கு உதவி புரிகிறார்?(சமைப்பது,வீடு சுத்தம் செய்வது,ஏனைய உதவிகள்)
என்ன தோழிகளே உங்கள் உறவின் வானமளவு பாசத்தினை அளக்க ரெடியா?......

ஹாய் சுபா,
நலமா ? நானும் என் குடும்பமும் நலம்.

நல்ல தலைப்பு. தாராளமாக உரையாடலாம்.

1 என் கணவர் நன் எத்தனை ஜென்மம் பெண்ணாக பிறக்கிறேனோ அத்தனை முறையும் அவரே என் வாழ்க்கை துணையாக வேண்டும். காரணம் அவர் என் மேல் வைத்திருக்கும் அன்பு. எங்களது காதல் திருமணம்.

2 நான் தான் அவருக்காக கோவத்தை விடவேண்டும். பிறகு நான் எதற்கு எடுத்தாலும் கவலை படுவேன் அது அவருக்கு பிடிக்காது அதையும் விடவேண்டும். அவர் என் மேல் எப்பொதும் அன்பாக இருந்தால் போதும்.

3 நான் கவலை படுவேன் என்று அவர் கஷ்டங்களை என்னிடம் மறைப்பது எனக்கு பிடிக்காத ஒன்று

4 அனைத்திலும் எனக்கு உதவுவர். அவர் ரொம்ப நல்லவரு

ஜென்னிவினோ

Dare To Paly With Life

நானே எனது பதிவினை முதலாவதாக பதிவு செய்கின்றேன்,எனக்கு கடந்த கொஞ்ச காலமாக உடம்புக்கு முடியாமல் துன்பபட்டபோது எனது கணவரிடம் நான் போய் அம்மாவிடம் சேர்ந்து வசிக்கப்போகின்றேன் நீங்கள் யாரையாவது திருமணம் பண்ணிக்கொள்ளுங்கள் என கூறினேன்,அதற்கு எனது கணவர் இப்படி இனிமேல் பேசாதே,எப்பவும் நீ ஒருத்திதான் என் மணைவி எனக் கூறினார், இப்போது அவரின் பாசத்தினாலும் அன்பினாலும் நான் பூரண குணமடைந்துவிட்டேன்,இதற்காக மட்டுமில்லை அவரின் பல நற்குணங்களுக்காக எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னவரை எப்போதும் வாழ்க்கைத்துணையாக வரவேண்டும் என நான் நினைக்கின்றேன்.
எனது கணவருக்கு கோபம் மட்டும் மிகவும் அதிகம்.அவர் கோபப்படும்போது அவரைவிட 100 மடங்கு அதிகமாக நான் கோபப்படுவேன்,ஆனால் அடுத்த நிமிடமே என்னில் பிழையானால் மன்னிப்புக் கேட்டுவிடுவேன்,அதேமாதிரியே அவரும் நடந்துகொள்வார்,ஆனால் இப்போது இருவரும் பாதியளவுக்கு மேல் கோபத்தை குறைத்துக்கொண்டோம்
எனக்கு என்னவரில் பிடிக்காத குணம் இருவரும் கடைக்கு அல்லது சுப்பர்மார்க்கெட் போனால் அவசரப்படுத்துவது, நேரம் போகின்றது என என்னை முறைத்து பார்ப்பது,ஆனால் நான் இந்த விடயத்தில் என்னை மாற்றிக்கொள்ளும் ஐடியா ஒருபோதுமில்லை.அவரும் மாறப்போவதில்லை.
விடுமுறையில் நிற்கும்போது வீடு சுத்தம் பண்ணுவது,கடைக்கு போய் வருவது என உதவி பண்ணுவார்,ஆனால் என்னவர் சமையலில் தூள் என்ன நிறம் எனக் கேட்டால் பச்சை நிறம் எனக் கூறுவார்.
என்ன தோழிகளே எனது கதை பிடித்திருக்கிறதா?

சுபா,
நலமா?உடல்நிலை இப்போது எப்படி இருக்கின்றது?உங்கள் வீட்டில் அனைவரும் நலமா?
சரி என்னையும் என்னவரையும் பற்றி சொல்கிறேன்.......கணவர் என்றில்லை யாராக இருந்தாலும் நம்மீது கொண்டுள்ள பாசத்தை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் துணை நிற்கும்......அப்படித்தான் இந்தமூன்றரை வருட இல்லறத்தில் சில சந்தர்ப்பங்கள் என்னவருக்கு என்மீதுள்ள பாசத்தை,ஈடுபாட்டை,அன்பை,காதலை தன்னிச்சையாக வெளிப்படுத்தி உள்ளன.......அதாவது தானாடாவிட்டாலும் தன் தசையாடும்னு சொல்வாங்களே அதுபோல........
சரி அந்த சந்தர்ப்பங்கள் எவை,என் மகன் பிறந்து சில மணித்துளிகளில் எனக்கு நடுக்கம் ஏற்பட்டது,அப்போது என்னவர் என் அருகே கையைப் பிடித்திருந்தார்(அழுத்தி)நானும் என் நடுக்கத்தை கண்ட்ரோல் செய்தேன் பல்லைக்கடித்து.ஆனால் என்னையும் மீறி அரை மயக்கத்தில் வெளிப்பட்டுவிட்டது நடுக்கம்........இரவானதால் அவர் பயந்து மாடியிலிருந்து பலமுறை ஓடி நர்ஸ்களை கூப்பிட்டு வந்தார்.....நான்காம்முறை அவர்கள் வர தாமதமானதால் இவர் சத்தம் போட்டுவிட்டார்......இத்தனைக்கும் என் பக்கத்தில் என் அம்மா,பெரியம்மா,அப்பா இத்தனைபேர் இருந்தும் இந்த ரகளை......
இதை விட குழந்தை பிறப்பிர்கு ரூமிற்குள் போகும்போது நான், இருங்க வந்துடுரேன்னு சொல்லி திரும்பிப்பார்த்தா என்னவரின் விழியில் கண்ணீர்......என்னை திருமணம் செய்து 11மாதங்களிலென்னவருக்கு என்மீது இவ்வளவு பாசமிருக்கும்போது அவரை தொடர் ஜென்மங்களில் என்னவராக அடைய விரும்புவதில் ஆச்சரியமில்லைதானே.............
அடுத்து.........இரண்டாம் வருடம் நாங்கள் புதிதாக கார் வாங்கியிருந்தோம்.........இருவரும் ஒரே சமையம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம்.....இடையில் என்னவர் வேலைகாரணமாக 10நாள் வகுப்பை அட்டென் பண்ண முடியலை......பின்,நாந்தான் வீட்டிலிருந்து வெளியே ஓட்டிப்பழக எடுத்துவந்தேன்.அந்த சமையத்தில் வண்டியில் நான்மட்டும்,என்னவரும் என் மகனும் வெளியில்....ஒரு வினாடி நான் எக்ஸ்லேட்டரை அதிகமாக கொடுத்து எடுக்க வண்டி குலுங்கி நின்றது.அந்த சமையம் என்னவர் என்ன செய்தார் தெரியுமா குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு பைக்கை,சைக்கிளை பிடித்து நிறுத்துவோம்மில அதுபோல காரை தடவினார்......எங்கே பிடித்து நிறுத்துவதுன்னு பதற்றமாகி முகம் இருண்டுவிட்டது.........எனக்கு பாவமாகப்போய்விட்டதுப்பா.........மனைவிக்கு ஒன்னுன்னா தான் பதரும் கணவன் கிடைக்க இந்த ஜென்மம் மட்டுமல்ல எத்தனை ஜென்மமெடுத்தாலும் நான் கொடுத்து வைத்திருக்கனும்.....அவருடன் இருக்கும்போது நான் மிக சந்தோஷமாக இருப்பேன்.......
இப்பக்கூட என் இரண்டாம் குழந்தை வயிற்றில் மூன்றுமாதம் வாமிட் வரும்போதெல்லாம் தண்ணீருடன் என்பக்கத்தில் அவர் இருப்பார்......வீட்டை சுத்தப்படுத்துவதிலும் குழந்தையை கவனித்தல்,கூடவே என்னை கவனித்தல் என பல உதவிகள் செய்வார்.........வெளியில் யாரிடமும் தன்னை விட்டுக்கொடுக்காதவர்,கோபப்படுபவர்.......என்னிடம் மட்டும் அப்படி இல்லை.....
இப்படி நல்ல பாசமான நல்ல பண்பும் நல்ல குணமும்,நல்ல பழக்கங்களும் கொண்ட மனிதனை கணவனாக கொடுத்த்த அந்த கடவுளுக்கும்,அவரின் பெற்றோருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
சுபா நினைவுகூற வாய்ப்பளித்ததற்கு நன்றிப்பா.......

சுபா நல்ல தலைபுங்க உங்க கதை ரொம்ப நல்லா இருக்கு

ரேணு அக்கா நலமா நீங்க சொல்லுறத கேக்குறப்போ ரொம்ப ஆசையாருக்கு எப்போவுமே இந்த சந்தோசத்தோட இருக்கனுன்னு பிரார்திக்றேன் //தானாடாவிட்டாலும் தன் தசையாடும்னு சொல்வாங்களே//
இது ரொம்ப உண்மையான வரி தான் இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்க நீங்க கொடுத்து வைதுருகிங்க by Elaya.G

ஜெனி முதலில் வந்து பதிவு போட்டமைக்கு நன்றி,நான் நலம்,நீங்கள் எதற்கெடுத்தாலும் கவலைப்படுவது எனக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள்,உண்மையில் நானும் அப்படியான ஒருத்திதான்,நிச்சயம் அதனை நாங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
மற்றையது கோபம்,உண்மையில் உங்களுடைய கோபம் பொய்யானதுதான்,ஏனெனில் அன்பான கணவன் மணைவிக்குள் வரும் சண்டை, கோபமெல்லாம் அடுத்த நிமிடம் யோசித்துப்பார்த்தால் ஒன்றுமேயில்லை எனத் தோன்றும், பார்க்கலாம் அனுபவமுள்ள தோழிகள் என்ன கூறுகிறார்கள்...

நானும் எனது குடும்பமும் நலம். ரேணு உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்தான்.நீங்களும் உங்கள் அன்பான பண்பான குடும்பம் என்றென்றும் இதேபோல் இருக்கவேண்டும் என பிரார்த்திக்கின்றேன்......

en husbanda patthi solrathukku vartaiyea kidaiyathu.our ponnu eppadiyllam thannudaiya husband irrukkanumnu ninaippalo appadi ennakku kithaitha oru nalla manithar avar.nalla character agatum,palakkangal agattum, pirarugu help pantra kunam,nalla thinking ipadi ellamea udaiyavar avar.engallukku thirumanam nadanthu 2 years than aguthu.engakitta 1 paisa kuda varathatsanai vankama enna thirumanam panninar.engaludaiyathu arranged marriage than.
enagu ella vithathlaiyum freedom kuduthu irukkar.entha visaiyamanalum en viruppatha katkama saiya mattar.intha 2 varuda thiruma valkaila nan avar kuda irunthathu konja natkal than.enna avar velli nattil irunthar.
oru oru thadavaiyum avar urukku vanthuttu pogum pothu nan alarano illaiyo avar aluthuduvaru.velli natla irunthalum ithu varaikku oru nal kuda ennoda pasama irunthathea kidaiyathu.enna vellaiya irunthalun en kuda oru 5 nimidamavathu pesiduvanga.ippa enna avar kuda kudittu vanthuttanga.enga vitla ennoda ragiyamthan.ni kidaikka nan romba kuduthu vachi irukkanumnu en kitta daily oru thadavaiyavathu solliduvaru.aga moththathla avanga kidikka nan than romba kuduthu vachi irukkam.enga rendu perukkumea kobamna ennanea theriyathu.ana chinna chinna anbana kabangal engalukkula varum .en mela koba padunnu en husbandea en kitta solluvanga.enakku siripputhan varum. kittathatta nanga rendu perumea same characterthan.enga perukuda konjam samethan.I am MuthulakshmiMuthukumar.ippadi parentsku mella namma kitta care eduthukirura husband kidaicha yarthan ethanai janmam eduththalum avanga kuda irukkanumnu asai pada mattanga.avanga kuda irukkum pothu en parentssa kuda nan maranthurureanna paththukkonga.

-

ஹாய் சுபா,

நன்றி. கண்டிப்பா மாத்தணும். ம் முயற்சி பண்றேன் பார்போம்.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

நீங்க மூன்று பேரும் சொன்ன எல்லா வார்த்தைகளும் என் கணவர்க்கு பொருந்தும் பாசமானவர் பண்பானவர் எல்லார்டயும் மரியாதையா பேசுவார் கோபம் அதிகமா வராது எனக்கு அதிகமா கோபம் வந்தாலும் அவரே சமாதனம் படுத்துவர் என் கணவர் பற்றி தெரிஞ்ச எல்லாரும் என்ட்ட சொன்ன ஒரே வார்த்தை அவர் ரொம்ப நல்லவர் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் அமைதியானவர் அவங்க சொன்ன எல்லாமே சத்தியமான உண்மை இதுவரைக்கு எம்மேலயும் சரி யார்மேலயும் சரி கோவப்பட்டது கிடையாது ரொம்ப இரக்கமனசு அவர்க்கு நான் எப்பவுமே கிளம்பறதுக்கு லேட் பண்ணுவேன் என் அத்தை கத்திட்டே இருப்பாங்க அப்ப கூட கோபபடமாட்டார் அவ்வளவு பொறுமை அவர்ட்ட நான் கோபபட்டு பேசாம இருந்தா தாங்கமாட்டார் அழுதுடுவார் நான் அழுதாலும் தாங்கமாட்டார் கல்யாணம் முடிச்சி அவர் வீட்டுக்கு நான் வரும்போது என் குடும்பத்தை நினைச்சு அழுதேன் அப்ப எனக்கு அவர் நான் இருக்கேன்மா உனக்கு சொன்னார் இன்னிக்கு வரைக்கும் அவர்தான் எனக்கு எல்லாமே இன்னும் சொல்லப்போன எங்களுக்கு இன்னும் குழந்தையில்லை அவர்ட்ட ஒரு முறை எனக்கு குழந்தையில்லாம போய்டா வேற கல்யாணம் பண்ணிக்கானும் சொன்ன அதுக்கு எத்தனை ஜென்மமானலும் நீ மட்டும் தான் என் மனைவி இது சத்தியம் என சொல்லி அழுதார் அவர் அழுதத பாத்து நானும் அழுதுட்டேன் அதோட நான் அதப்பத்தி பேசறதில்ல அவ்வளோ சென்ஸிடிவ் aprik fool anniku enaku kaila adi patuduchu soli msg pane vandiya ready pani trial pathutu irundavar ms pathathum cl pani ennachi epdi achunu ena pesa vidama kelvi ketute poitar adoda last na avarta poi solrade ila avar enta poi solamatar எனக்கும் என் மாமியார்க்கும் நடுவிலே ரொம்ப கஷ்டபடுவார் இரண்டு பேரையும் விட்டுக்கொடுக்க மாட்டார் நல்ல மகன் நல்ல கணவர் நல்ல நண்பர் நல்ல மனிதர் இப்படி ஒரு கணவர் கிடைச்ச நான் உண்மையாவே ரொம்ப அதிர்ஷ்டசாலி எத்தனை ஜென்மமானலும் அவர் மட்டும் என் கணவர் என் வாழ்க்கை இத தான் நான் கடவுள்ட வேண்டிக்கிறேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்