கடி ஜோக்ஸ் ...

ஹாய் தோழிஸ், அனைவரும் நலமா ?

லைப் ரொம்ப போர் அடிக்குது. கொஞ்சம் ஜோக் அடிப்போமா ?

விருப்பமானவர்கள் தங்கள் பதிவுகளை போடுங்களேன் பார்போம்.

யார் first ?

கவுன்ட் டோவ்ன் ஸ்டார்ட்ஸ் 1 2 3 ......

1. நாய்க்கு நாலு கால் இருக்கலாம். ஆனா அதால லோக்கல் கால் , STD கால் , ISD கால் , ஏன் மிஸ்ஸுடு கால் கூட பண்ண முடியாது!

2. கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம் .... காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம் .. ஆனா அய்யர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா ?

3. திருவள்ளுவர் 1330 குறள் எழுதிருந்தாலும் , அவரால ஒரு குரலில் தான் பேச முடியும் .

4.என்ன தான் உன் தலை சுத்தினாலும் , உன் முதுகை நீ பாக்க முடியுமா ?

5. தேள் கொட்டினா வலிக்கும் ... பாம்பு கொட்டினா வலிக்கும் .. முடி கொட்டினா வலிக்குமா ?

6. ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... இரத்த டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா ?

7. பொங்கலுக்கு கவர்மெண்டுல லீவு குடுப்பாங்க ... ஆனா இட்லி தோசைக்கு குடுப்பாங்களா?!

8. கோலமாவில் கோலம் போடலாம் . கடலைமாவில் கடலை போட முடியுமா?!

9. தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ... ஆனா ...இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வரமா?!

10. வாழமரம் தார் போடும் ! ஆனா அத வச்சி ரோடு போட முடியுமா ?

ஹாய் பூங்காற்று,

முதல் விடை சரி.

மற்றது தவறு

ஜென்னிவினோ

Dare To Paly With Life

Hai Elaya,

ம் சரியச்சொல்லிடீன்களே

ஜென்னிவினோ

Dare To Paly With Life

ஹாய் லதா,

ம் முடியல. எப்படிமா உன்னால மட்டும் இப்படி ?

போங்க கலக்கு கலக்குன்னு கலக்குறேங்க கலங்கி போய் நிற்கிறேன் நான்

ஜென்னிவினோ

Dare To Paly With Life

1) என்ன உங்க வீட்டு காப்பி ஒரே ஃப்னாயில் வாசனை அடிக்குது..
நான் தான் சொன்னேனே...என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு

2) நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவன் என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..

3) நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல... sad.gif
டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?

4) எத்தனை இட்லி?

ஒரு முறை சர்தார், நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். நண்பர் சர்தாரிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் சர்தாரிடம்,

'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?' என்று கேட்டார். அதற்க்கு சர்தார் சொன்னார், 'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார்.

உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயேதான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்..

சர்தார் அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார். தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வீட்டிற்க்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று

'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?' என்று கேட்டார்.

அதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார்.

உடனே சர்தார் கடுப்பாகி சொன்னார், 'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார்.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

ரானி : உங்க வேலைக்காரி துணி துவைக்கும் போது கூலிங் கிளாஸ் போட்டுக்கிறாளே!
வேனி : அதுவா அவ உபயோகப்படுத்தறது ஸன்லைட் சோப்பாம்.

தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.

டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க
மாயான்டி மாமா : அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?

வேலு : அந்த விமான விபத்து எப்படி நடந்தது ?
பாக்கி : யரோ ஒரு பாராசூட் வீரர் விமானம் பறந்துகிட்டு இருந்தப்ப குறுக்க நின்னு லிஃப்ட் கேட்டாராம் .. ..

காதலன் : அன்பே ,,, இந்த கடற்கரை ,,, குளிர்ந்த காற்று தனிமை இதெல்லாம் என்ன தோண்றது ?
காதலி : வாய்க்கு ருசியா சாப்பிட ஒரு சுண்டல்காரனைக்கூட காணலையேன்னு தோணுது ,,,

ஒருவர் : உங்களுக்குத் தேவை இல்லாதது ஏதாவது இருந்தால் போடுங்கள். காசு கொடுக்கிறேன்.
மற்றொருவர் : ஒரு நிமிஷம் இரு. என் மனைவியைக் கூப்பிடுகிறேன்.
அன்புடன்
லதா...

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க

விளம்பரதரர்: கூடிட்டு வங்க!! தூக்கிட்டு போங்க!!!

ஒரு குழந்தையின் டைரி:

15Jun இன்று நான் கருமுட்டையுடன் சேர்ந்தேன்..

17Jun இப்போது நான் ஒரு திசு..

30Jun "நீங்க அப்பாஆக போறீங்கனு" என் தாய் தந்தையிடம் சொல்கிறாள்.. அவர்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள்..

15Jul என் தாயின் உணவே எனது உணவு..

15Sep எனது இதயம் துடிக்கிறது..

14Oct எனக்கு வயிறு, தலை, சிறு கைகள் கால்கள் வளர்ந்துள்ளது..

13Nov இப்போ எனக்கு அல்ட்ரா ஸ்கேன் எடுத்துட்டு இருக்காங்க...
ஆ ஆஹ!! நான் ஒரு பெண்!!!

14Nov இன்று நான் இறந்துவிட்டேன்...

என் தாய் தந்தை என்னை கொன்றுவிட்டனர்.....

ஏனென்றால் நான் ஒரு பெண்...

அம்மா, மனைவி, தோழி பெணாக இருக்கலாம்....
ஆனால் குழந்தை மட்டும் பெணாக இருக்கக்கூடாதா???

இன்றும் பல இடங்களில் பெண் சிசுகள் வதைக்கப்படுகிறார்கள்..

இந்த தலைப்பின் கீழ் இதை பதிவு செய்ததிற்கு மன்னிக்கவும்.. அனைவரும் இதை படிக்க வேண்டும் என்று என்னினேன்..

பாராட்டுக்கள் வாழ்த்துகள் பா பெண் சிசு கொலை பற்றி அழகான கவிதை போல் உள்ளது இதைப்பார்த்தாவது பிறர் உணரட்டும் இப்ப இந்த நிலை அதிகம் இல்லை இருந்தாலும் முற்றிலுமாக அழிக்க என் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரொம்ப அழகா அருமையா ஒரு கவிதை....."பெண்கள் நம் நாட்டின் கண்கள்" அல்லவா...... பாராட்டுகள் எனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசை

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

மேலும் சில பதிவுகள்