ரெடிமேட் ரங்கோலி

ரெடிமேட் ரங்கோலி

தேதி: August 13, 2011

4
Average: 3.9 (13 votes)

 

கார்ட்போர்டு அட்டை
Ohp ஷீட்
கத்தரிக்கோல்
பெவிக்கால்
க்ளாஸ் கலர்
பேப்பரிக் பெயிண்ட் - வெள்ளைநிறம்
ப்ரஷ்
பென்சில்

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
தேவையானப் பொருட்கள்
கார்ட் போர்டு அட்டையின் மீது பென்சிலால் ஸ்டார் வரைந்து கத்திரிக்கோலால் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
நட்சத்திர வடிவ அட்டை
இந்த அட்டையின் வடிவத்தை Ohp ஷீட்டில் வைத்து அதனையும் ஸ்டார் போல் நறுக்கி எடுத்துக்கொள்ளவும். கார்ட் போர்டு அட்டை முழுவதும் பெவிக்கால் தடவி Ohp ஷீட்டை ஒட்டவும். ஸ்டார் ஓரத்தில் பேப்பரிக் பெயிண்டைக் கொண்டு சிறிது தடிமனான கோடாக வரைந்து முடிக்கவும். நடுவட்டத்திற்கு வாட்டர் பாட்டில் மூடியை வைத்து வட்டம் வரைந்துக் கொள்ளவும்.
நட்சத்திர வடிவ அட்டை
ஸ்டார் உள்ளே வரைந்த வட்டத்தை சுற்றி க்ளாஸ் கலரைக் கொண்டு இடைவெளி விட்டு இலைகளும், அதன் கீழ் டைமண்ட் வடிவில் சிறு கட்டமும் வரைந்துக் கொள்ளவும். பிறகு விருப்பமான க்ளாஸ் கலரால் நிரப்பவும்.
ஸ்டார் அட்டை அலங்காரம்
ஸ்டார் உள்ளே விரும்பினால் இது போல் டிசைன் வரைந்து விடலாம்.
ஸ்டார் அட்டை அலங்காரம்
மீதமுள்ள கார்ட்போர்டு அட்டையில் டைமண்ட் ஷேப் வரைந்து 6 துண்டுகள் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். படத்தில் உள்ளது போல் ஒரத்திலும், உள்ளேயும் வெள்ளைநிற பேப்பரிக் பெயிண்டால் வரைந்து விடவும்.
டைமண்ட் ஷேப் கார்ட்போர்டு
நடுக்கட்டத்தில் மஞ்சள் நிற க்ளாஸ் கலரும், வெளிப்பக்கத்தில் நீலநிற க்ளாஸ் கலரும் கொடுக்கவும். சிறிது நேரம் இதனை காயவிடவும். இந்த ஆறு அட்டைகளை மட்டும் கொண்டு சிறு கோலமாக வடிவமைக்கலாம்.
அட்டை கோலம்
அந்த ஆறு அட்டையில் செய்யக்கூடிய இன்னும் இரண்டு சின்ன கோலங்கள் இது.
அட்டை கோலம்
ஸ்டாரும், டைமண்ட் அட்டையையும் கொண்டு இதுப்போல் சிறிய ரங்கோலியாக வடிவமைக்கலாம்.
ஸ்டார் அட்டை ரங்கோலி
மற்றொரு மாடல் ஸ்டாரை நடுவில் வைத்து அதன் இடைவெளியில் இந்த டைமண்ட் அட்டையை வைக்கவும். க்ளாஸ் கலரைக் கொண்டு செய்யக்கூடிய எளிமையான, அழகான ரங்ககோலி ரெடி. வெள்ளைநிற பேப்பரிக் பெயிண்ட் கொண்டு அவுட்லைன் கொடுப்பதால் நிஜ கோலத்தைப்போல் தோற்றமளிக்கும். ப்ளாட்டில் குடியிருப்பவர்கள், ஸ்வாமி படங்கள் முன், வீட்டு விசேஷங்களுக்கு இந்த ரெடிமேட் ரங்கோலியை பயன்படுத்தலாம்.
அட்டை ரங்கோலி

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகாக இருக்கிறது டீம். நல்ல ஐடியா. நானும் செய்து வைக்கப் போகிறேன். ஒரு முறை போட்டு வைத்தால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு போகலாம். கடைசி இரண்டு படங்களில் உள்ள கோலங்களும் அருமை. அதிலும் கடைசிக்கு மேல் படத்தில் வலப்புறம் உள்ளது மிகவும் பிடித்திருக்கிறது.

டீம், ரொம்ப அழகா இருக்கு ரங்கோலி. கலரும் வரைந்திருக்கும் முறையும் அழகு.

இமாவை இன்னும் காணோம்?

//இமாவை இன்னும் காணோம்?// ;) இதோ வந்தேன் தேன். தெரியாம 'வெளியேறு' தட்டிட்டேன். ;( பிறகு உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டுக் கொண்டே இருந்த காரணத்தால் கருத்தை டீமுக்கு வேறு விதமாக அனுப்பியாச்சு. இப்போதான் இங்கு உள்நுழைய முடிஞ்சுது.

கோலம் சூப்பர். ஐடியா ரொம்பப் பிடிச்சு இருக்கு. எனக்கு ஒரு செட் பண்ணி வைக்கப் போறேன். என் தோழிக்கு தீபாவளிக்கு அன்பளிப்பாக ஒன்று செய்து கொடுக்கலாம் என்று யோசனை இருக்கு. செய்து முடிஞ்சதும் சொல்றேன். ;)

தாங்ஸ் டீம். உங்க பதிலை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன். ;)

‍- இமா க்றிஸ்

சும்மா செம கலக்கலா இருக்கு ரங்கோலி.. ஐடியா சூப்பர்..நானும் செஞ்சு வைக்கப்போறேன்;-) தேங்க்ஸ்;-)

Don't Worry Be Happy.

ரங்கோலி ரொம்ப அழகா இருக்கு.கலர் எல்லாம் பளிச்சுனு பார்க்க அழகா இருக்கு.ஃபோட்டோக்களும் சூப்பர்.வாழ்த்துக்கள்.

சம சூப்பர் கலர் காம்பினேஷன், அழகான சுலபமான கோலம். நல்ல ஐடியா!!! வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா