கலாட்டா கிச்சன் சீசன் 2 பகுதி 4

இது கிச்சன் கலாட்டா சீசன் 2 - பகுதி 4
ஹாய் அறுசுவை தோழிகளே கலாட்டா கிச்சன் சீசன் 2 ஆரம்பித்து நல்ல முறையில் நடந்து 3 பகுதிகளை கடந்துவிட்டது அதை அப்படியே நாம தொடர்ந்து இன்னும் நல்ல முறையில் தொடர வேண்டும் அதற்கு உங்கள் எல்லோருடைய ஆதரவையும் எதிர்பார்த்து தான் ஆரம்பம் செய்கிறோம் நிச்சயம் வந்து கலந்துக் கொள்வீர்கள் தானே.
இந்த வாரம் நாம் சமைக்க போகும் குறிப்புகள், சில மாற்றங்களுடன் கூட்டாஞ்சோறு பகுதியில் இணையாதவர்களுடைய குறிப்புகளை செய்ய போகிறோம். அதாவது 10 மற்றும் அதற்கு அதிகமான குறிப்புகள் கொடுத்தவர்களை, கொடுத்துக் கொண்டு இருப்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இப்படி மாற்றி அமைத்திருக்கிறேன். அதன் அடிப்படையில் இந்த வாரம் செய்யவிருக்கும் குறிப்புகள் திருமதி. ராதா ஹரி, திருமதி. நாகாராம், திருமதி. இமா, திருமதி. சங்கரி வசந்த், மற்றும் திருமதி. ஹசீனா ஆகியோருடையது. அவர்களுடைய குறிப்புகள் இடம் பெற்றிருக்கும் நோட் நம்பரை இங்கே பதிவு செய்கிறேன் அதை அட்ரஸ் பாரில் கொடுத்து அவர்களுடைய பக்கத்தை எடுத்து குறிப்புகளை பார்த்து தங்களுக்கு விருப்பமான குறிப்புகளை செய்து பார்த்து விட்டு வந்து கணக்கு சொல்லுங்கள் தோழிகளே.
http://www.arusuvai.com/tamil/expert/14655 - இமா
http://www.arusuvai.com/tamil/expert/23437 - ராதா ஹரி
http://www.arusuvai.com/tamil/expert/23035 - சங்கரி வசந்த்
http://www.arusuvai.com/tamil/expert/28990 - நாகா ராம்
http://www.arusuvai.com/tamil/expert/25653 - லூலூ(ஹசீனா)

முடிந்தால் நீங்கள் செய்யும் குறிப்புகளை ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுத்து அறுசுவைஅட்மின் @ ஜிமெயில்.காம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். தங்கள் குறிப்பு விளக்கப்படங்களுடன் வரும் நம்ம அறுசுவையில்.
இந்த வாரம் ஆரம்பிக்க கொஞ்சம் தாமதமாகிவிட்டது எல்லோரும் இங்கு வந்து பார்த்து அதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடு செய்துக் கொண்டு இந்த வார கலாட்டா கிச்சன் சீசன் 2 பகுதி நான்கை சிறப்பாக நடத்தி தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
வாங்க வாங்க எல்லாரும் சேர்ந்து சமைத்து அசத்தலாம், புது புது குறிப்புகள் கற்றுக் கொண்ட மாதிரியும் இருக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கு எப்போ பார்த்தாலும் ஒரே போல சமைத்து அழுத்து போகாமல் புதுமையான வித்தியாசமான குறிப்புகளை செய்து கொடுத்து பாராட்டுக்களை தட்டி செல்லுங்க. முடிந்த அளவு செய்து சொல்லலாம் அது ஒரு குறிப்பாக இருந்தாலும் இரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.
ரெடி ஸ்டெடி ஜூட்

வணக்கம்..என்னடா திங்கட்கிழமை ஆயிடுச்சே இன்னும் நம்ம கலாட்டா கிச்சன் காணுமேன்னு பார்த்தேன்..கரெக்டா ஆரம்பிச்சுட்டீங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..நானும் முடிஞ்சளவு கொஞ்சமா சப்போர்ட் பண்ரேன்பா..

இதுவும் கடந்துப் போகும்.

ரொம்ப நன்றி அஸ்வினி உங்க ஆதரவுக்கு. நிச்சயம் உங்களால் முடிந்ததை செய்து பார்த்துட்டு வந்து சொல்லிடுங்கப்பா.

யாழினி இன்னைக்கு நான் செய்தது ராதா ஹரியின் க்ரிஸ்பி தோசை, சன்னா மாசாலா இரண்டுமே சூப்பர். சங்கரி வசந்தின் மோர் குழம்பு, வாழைக்காய் புட்டு.

.

ஒரு வார்த்தை கவிதை "நீ"

என்ன தோழீஸ் யாரும் சமைத்து பார்க்கலையா. நித்தி,ஸ்வர், சுகி, வனி, ரேவதி, ஹர்ஷா, லாவண்யா, ஜானு, அஸ்வினி இன்னும் நிறைய தோழிகள் எல்லோரும் சீக்கிரம் சமைச்சு பார்த்து சொல்லுங்க. யாழினி கணகெடுக்க வேண்டாமா?

வினோ வாங்க வாங்க உங்க அக்கவுண்ட் ஓபன் பண்ணிட்டேன். செய்து அசத்துங்க.

தோழிகளே யாருக்குமே இதில் பங்கு பெற விருப்பம் இல்லையா, பார்த்துட்டு இருக்கவங்க வரும் போது ஒரு முறை இங்க வந்து பார்த்துட்டு ஏதேனும் சில அல்லது ஒரிரு குறிப்புகளாவது செய்து பார்த்து கருத்து சொல்லலாமே. கடந்த இரண்டு பகுதியும் ரொம்ப நல்ல முறையில் நடைபெறல இந்த முறையாவது நல்ல முறையில் நடைபெற நீங்கள் எல்லாரும் ஒத்துழைப்பு கொடுங்க.

யாழினி நானும் இருக்கேன் என்னால முடிந்த வரை குறிப்பு செய்துட்டு வந்து பதிவு போடுறேன். இந்த முறைவாவது எல்லோரும் கலந்துக்கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி வாங்க நிச்சயம் முடிந்த அளவிற்கு செய்துட்டு வந்து சொல்லுங்க.

அன்பு யாழினி,

கலாட்டா கிச்சன் நல்லதொரு முயற்சி. என்னால் சமீப காலமாக அதிகம் வர முடியாமல் போனதால், இந்த சீசனில் அதிகம் வர முடியாமல் போய் விட்டது.

இங்கே அறுசுவைக்கு வரும் தோழிகள், அனேகமாக சமையல் குறிப்புகளை விரும்பிப் பார்க்கிறவங்களாகத்தான் இருப்பாங்க. இந்தப் பகுதியில் அனைவரும் கலந்துக்கணும்னு எல்லோரையும் அழைக்கிறேன்.

நாம சாதாரணமாக ஏதாவது ஒரு குறிப்பு மட்டும் அப்பப்ப பாத்துட்டு, பிறகு மறந்துடுவோம் அல்லது அது மட்டும்தான் செய்திருப்போம். இந்தப் பகுதியில் பங்கு பெறும்போது, அந்த வாரத்தின் ஸ்டார் தோழிகளின் குறிப்புகள் அனைத்தையும் ஒரு முறை பார்க்க முடியும். அதோடு, பங்கு பெறும் மற்ற தோழிகள், தாங்கள் சமைத்ததைப் பற்றி, இங்கே பதிவிடும்போது, நமக்கும் அந்தக் குறிப்புகளை சமைத்துப் பார்க்கத் தோன்றும். எல்லாக் குறிப்புகளையும் உடனே சமைக்கவில்லை என்றாலும், விருப்பப் பட்டியலில் சேர்த்து வைக்கலாம். வீட்டில் பார்ட்டி, விருந்தினர் வருகையின் போது, வித்தியாசமான புதிய குறிப்புகளை செய்து, அசத்தலாம்.

இந்தப் பகுதியில் கலந்து கொள்ள ஆரம்பித்த பிறகுதான், நான் நிறைய குறிப்புகள் சமைத்துப் பார்க்க ஆரம்பித்தேன். இந்தப் பகுதிக்காக மிகவும் குறைந்த அளவு சமைத்தாலும் கூட, மற்ற சமயங்களில் பல குறிப்புகள் செய்திருக்கிறேன்.

புதிய தோழிகள் நிறைய பேர் வந்திருக்காங்க. எல்லோரும் இந்தப் பகுதியில் கலந்து கொண்டு, இந்தப் பகுதியை சிறப்பிப்பதுடன், புதிய குறிப்புகளை கற்றுக் கொண்டு, சமைத்து அசத்தலாம். எல்லோரையும் இந்தப் பகுதியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

யாழினி, நானும் இந்தப் பகுதியில் பங்கு கொள்கிறேன். நாளைக்கு வந்து பதிவிடுகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்