சிசேரியன் பற்றிய சந்தேகம்:

அன்பு தோழிகளே,
எனக்கு வரும் புதன் அன்று சிசேரியன் செய்ய போகிறார்கள்,எனக்கு வலி வராததால் டாக்டர் சிசேரியன் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்,என்னுடைய அம்மாவிற்கு விசா கிடைக்கவில்லை,நானும் என் கணவர் மட்டும் தான் குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும்,ஹவுஸ் மெயிட் நியமித்து உள்ளோம்,ஆனால் அவர் காலை,மதியம் மட்டும் தான் சமைப்பார்,அதனுடன் வீட்டை சுத்தம் செய்வார்,நான் சிசேரியன் செய்த பிறகு இரவு மட்டும் கடினம் இல்லாமல் நின்றுகொண்டே சமைக்கலாமா?இதனால் தையல் பிரிந்துவிடுமா?என் கணவருக்கு சமைக்க தெரியாது,மேலும் வெளியில் வாங்கி சாப்பிட முடியாது,தோழிகள் ஆலோசனை கூருங்கள்,குனிந்து நிமிராமல் வேலை செய்தால் தையல் பிரியாது இல்லையா?

தோழி மஞ்சு, உங்கள் சிசேரியன் வெற்றிகரமாக முடிந்து தாயும் சேயும் நலமுடன் வர வாழ்த்துகிறேன்.

ஆபரேஷன் முடிந்து ஒரு பத்து பதினைந்து நாட்களுக்காகவது உடம்பை அலட்டாமல் பாத்துக் கொள்வது அவசியம். ஆபரேஷன் செய்து 3 மாதங்களுக்காவது வெயிட்டான பொருட்களை தூக்க கூடாது என்பார்கள். இதை நான் சொல்லவே கூடாது. ஏனென்றால் இரட்டை குழந்தைகளை சிசேரியனில் பெற்று ஒரு மாதத்தில் நார்மலான வேலைகளில் இறங்கி விட்டேன் :) குனிந்து நிமிரும் வேலைகளை குறைத்து கொள்ளுங்கள். ஆபரேஷனுக்கு பிறகு சத்தான ஆகாரங்களை கட்டாயம் உண்ண வேண்டும். ஏனென்றால் பிரசவத்தில் இழந்த ரத்த இழப்பை ஈடு கட்டவும், குழந்தைக்கு தாய்பாலுக்கான ஊட்டமும் கிடைக்க வேண்டும். மருந்து மாத்திரைகளை விடாமல் சாப்பிடுங்கள். ஒரு மாதம் வரையில் இரவு உணவையும் மதியமே வேலை செய்பவரே செய்து விட்டு போகட்டும். நீங்கள் குழந்தையை பார்த்துக் கொள்ளவே நேரம் சரியாக இருக்கும். தவிர ஆபரேஷன் செய்ததால் நீண்ட நேரம் நிற்க முடியாது. நல்ல பசி எடுக்கும். நேரம் கடத்தாமல் அந்தந்த வேளை உணவுகளை உண்ணுங்கள். சூடான பானங்கள் அருந்துவதை அறவே தவிர்த்து விடவும். இரண்டாம் மாதத்தில் இருந்து நீங்கள் உங்களின் இயல்பான வேலைகளை செய்யலாம். அங்கே வேறு யாரும் இல்லாததால் நீங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்பதால் இதை சொல்கிறேன். உங்கள் அம்மா ஊரிலிருந்து வந்த பிறகு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். கடின வேலைகளை கண்டிப்பாக செய்யக்கூடாது. அவ்வபோது ஓய்வு எடுத்துக் கொண்டு சிறுசிறு வேலைகளை பாருங்கள். அது ஒரேயடியான களைப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாழ்த்துக்கள் மஞ்சு

கல்பனாவே எல்லாமே சொல்லிட்டாங்க. அதுனால எதுவும் சொல்ல மிச்சம் இல்ல :)

உங்களுக்கு தொந்தரவு இல்லாத பட்சத்தில் நீங்க வேலை செய்யலாம். டாக்டர் கூட அடிக்கடி நடக்க சொல்லுவாங்க. அதுக்கு பதிலா சமையல் செய்வதில் பிரச்சனை இல்ல. ஆனா கடினமான பொருட்களை தூக்கும் போதோ அல்லது அடிக்கடி குனியும் போதோ காயம் உள்ளே ஆற நாள் எடுக்க வாய்ப்புண்டு. ஒரு மாதம் மட்டும் பல்ல கடிச்சுட்டு ரெஸ்ட் எடுங்க (இத விட்டா வேற எப்ப சான்ஸ் கிடைக்கும்?)

சாப்பாடாக இருந்தாலும் டீயாக இருந்தாலும் நல்லா ஆற வச்சு சாப்பிடுங்க. குளீர்ந்ததை சாப்பிடாதீக்க. முடிஞ்ச அளவு சளி பிடிகும் வாய்பு ஏற்படாமல் பார்த்துக்கோங்க. ஏன்னா இவையெல்லாம் காயத்தை விரைவில் ஆற விடாமல் தடுக்கும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

டியர் கல்பனா உங்க விளக்கமான பதிலுக்கு ரொம்ப நன்றி,ஆனால் என்னோட அம்மா வருவாங்களான்னு தெரியலை?அந்த ஹவுஸ்மெயிட் காலையில 7 மணிக்கு வந்து காலை டிபன்,மதிய உணவு 2ம் காலை 9 மணிக்குள் செய்து வைத்து விட்டு போவார்,எப்படி இரவு உணவை காலை 9 மணிக்கே அப்பொழுதே செய்ய சொல்வது?சிசேரியன் செய்தவர்கள் அரைமணி நேரம் கூட நின்று கொண்டு வேலை செய்ய கூடாதா?

டியர் அமீனா,
உங்க கிட்ட இன்னொரு சந்தேகம் கேட்க்க வேண்டும்,சிசேரியன் செய்து பஹ்ரைனில் 3 வது நாள் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்,குழந்தையை குளிப்பாட்ட ஆள் இல்லை,சிசேரியன் செய்தால் நான் நின்று கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ குழந்தையை குளிப்பாட்டலாமா?இதனால் எனக்கு தையலில் ஏதும் பிரச்சனை ஏர்படுமா?இங்கு இப்பொழுது ரம்ஜான் மாதம் என்பதால் குளிப்பாட்ட ஆட்கள் யாரும் கிடைக்கவில்லை.என்ன செய்ய வென்று புரியவில்லை

ஹாய் மஞ்சு

//சிசேரியன் செய்தவர்கள் அரைமணி நேரம் கூட நின்று கொண்டு வேலை செய்ய கூடாதா?//
அதெல்லாம் ஒன்னும் இல்ல மஞ்சு
அலட்டிக்கொள்ளாமல் வேலை செய்யலாம்... தைரியமா பாருங்க.. ஆனா கவனமா பாருங்க. அந்த உணர்வு ஆட்டோமெடிக்கா உங்களுக்கே தெரியும். எது லிமிட் என அளவுகோல் உங்களுக்கு புரியும். சோ அதுபடி வேலை செய்து,கலைப்பு ஏற்பட்டால் ரெஸ்ட் எடுத்துட்டு பண்ணுங்க

________
//நான் நின்று கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ குழந்தையை குளிப்பாட்டலாமா?இதனால் எனக்கு தையலில் ஏதும் பிரச்சனை ஏர்படுமா?//
நின்றெல்லாம் வேணாம். அது சரிபட்டும் வராது குழந்தைக்கு...
பொறுமையாக உக்கார்ந்துக்கொண்டே ஊற்றுங்கள். உதவிக்காக அன்று மட்டும் கணவரை பக்கத்தில் இருக்க சொல்லுங்க. ரொம்ப நேரம் நீரில் இருக்காத வண்ணம் எல்லாவற்றையும் தயாரா வச்சுட்டு அப்பறமா உக்காருங்க. சீக்கிரமா குளிக்க வச்சுட்டு அந்த இடத்த காலி பண்ணிடுங்க.ஏன்னா சளி பிடிக்க கூடாதில்லையா?
முக்கியமா கவனிக்க வேண்டியது என்னன்னா..... உங்க தையலில் நீர் படவே கூடாது என்பது தான். அத மட்டும் கவனத்துல வச்சுக்கோங்க.

என் மகனுக்கு பிறந்த ஒரு மாதம் வரை டவல் பாத் தான் (இந்த ஊரில் அப்படி தான்:). முடிஞ்ச வரை அடிக்கடி குளிக்க வைக்காதீங்க.

என்ன செய்யலாம் ஏது செய்யலாம்னு டென்ஷன் ஆகாதீங்க இப்போதைக்கு. எல்லாத்தையும் லூஸ்ல விடுங்க. ஆண்டவனின் அருளால் எல்லாவற்றையும் எளிமையாக கடந்துவந்துடுவீங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மஞ்சு,நலமா?
ஆரோக்கியமான,அழகான குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்..

நீங்க ஆப்ரேஷன் முடிந்து 1 வாரமாவது கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும்,அதுக்காக 1 வாரத்துக்கு பிறகு எல்லா வேலையும் செய்யலாம்னு இல்லை...என்க்கும் சிசேரியன் தான்.நான் 10 நாள் ரெஸ்ட் எடுத்தேன்,அதுக்கபுறம் நானே கொஞ்சமா நடந்து நடந்து மேலாக வேலை செய்தேன்...உங்களுக்கு காலை,மதியம் சமைக்க ஆள் இருப்பதால் கொஞ்சம் சுலபம்தான்.உங்கள் கணவரை சமைக்க காய்யெல்லாம்,வெட்டி வைக்க சொல்லிட்டு நீங்க கொஞ்ச நேரம் நின்னு எல்லாம் சமைத்துவிடலாம்.இந்த கொஞ்ச நேரம் நின்னு ச்மைப்பதால் ஒன்னும் ஆகாது,ஆனால் வெயிட் தூக்காதீங்க,குனிஞ்சு நிமிர வேண்டாம்.இல்லைனா பக்கத்துல ஒரு சேர் போட்டு உட்கார்ந்து கொண்டு உங்க கணவருக்கு சொல்லி கொடுத்து அவரை செய்ய சொல்லுங்கோ...2 பேருக்கு சமைக்க ரொம்ப நேரம் ஆகாது..நிறைய காய்,மீன் சாப்பிடுங்கோ.

கீழே உட்கார்ந்து எழுந்து குழந்தையை குளிப்பாட்ட வேண்டாம்,10 நாள் கழித்து கொஞ்சமா உட்கார்ந்து பாருங்கள்.அது வரை குழந்தையை டவல் நனைத்து துடைத்து எடுத்தாலே போதும்..முதல் கொஞ்ச நாள் நடக்கும் போது அடி வயிற்றை லோசாக பிடுத்து மெதுவாக நடக்கனும்..
வாழ்த்துக்கள்.

Kalai

அன்பு தோழிக்கு என் வாழ்த்துக்கள்.... கவலை வேண்டாம்.... இரவிற்கும் சேர்த்து குழம்பு செய்துவிட சொல்லுங்கள்... தினமும் (ஒரு 2 மாதம்) இட்லி மாவு இருக்கும் படிக்கு அறைத்து கொடுக்க சொல்லுங்கள்.... குழம்பை இரவு சூடு செய்து தோசை அல்லது இட்லி ஊற்றிக்கொள்ளுங்கள்... தையலுக்கு பயம் வேண்டாம்... இருபினும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நன்றாக சத்தான உணவு சாப்பிடவும்.... தினமும் இரவு பாலில் DATES கலந்து பருகவும்....

பதில் அளித்த அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி,குழந்தை பிறந்ததும் கண்டிப்பாக தெரிவிக்கிறேன்.

tamilil type saiya engu chella vendum

munetram, munetram, munetram

See below this page. Tamil Eluththuthavi is there

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

கீழே வலது மூலையில் தமிழ் எழுத்துதவி இருக்கிறது. அதில் பயன்படுத்தும் முறையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஜெயா

மேலும் சில பதிவுகள்