நண்டுமசாலா

தேதி: August 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

நண்டு-1 கிலோ
பட்டை-1
ஏலக்காய்-2
கிராம்பு-3
பிரிஞ்சி-1
பச்சை மிளகாய்-2
கறிவேப்பிலை-ஒரு கொத்து
வெங்காயம்-ஒரு கப்
தக்காளி- 4
இஞ்சி பூண்டு விழுது-4 ஸ்பூன்
சீரகத்தூள்-அரைஸ்பூன்
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்-கால்ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய்-2 மேசைகரண்டி
தேங்காய் பால்- ஒரு கப்


 

எண்ணெயில் பட்டை,ஏலக்காய்,கிராம்பு,பிரிஞ்சி சேர்த்து முருக விடவும்

அத்துடன் பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக்கவும்

பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும்

அத்துடன் தூள் வகைகளை சேர்க்கவும்

பின் தக்காளி சேர்த்து எண்ணெயில் இருந்து மசாலா பிரிந்ததும் நண்டு மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.

கடைசியில் தேங்காய் பால் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும்


காரத்தை தேவைக்கேற்ப கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். சாம்பார்,அல்லது ரசத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்