
தேதி: June 17, 2006
பரிமாறும் அளவு: 4 members
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 25 நிமிடங்கள்
மொத்த நேரம்: 35 நிமிடங்கள்
இந்த சிறப்பு பகுதியின் முதல் குறிப்பு என்பதால் ஒரு இனிப்புடன் ஆரம்பிக்கலாம். இன்று அனைத்து இல்லத்து விசேஷங்களிலும் காலை உணவில் தவறாது இடம் பெறும் இனிப்பு இது. மன்னர் அசோகர் மிகவும் விரும்பிச் சாப்பிட்ட உணவு என்பதால் அவரது பெயரையே இதற்கு வைத்து விட்டனர் என்று கப்ஸா விட ஆசையாக இருக்கின்றது. பெயர்க்காரணம் தெரியாவிடினும், பிரசித்திக்கான காரணம் தெரியும். அல்வா போல் இது விரைவில் திகட்டி விடுவதில்லை. நாக்கில் ஒட்டிக் கொண்டு சிரமப்படுத்துவதும் இல்லை. எளிதாய் கரைந்து விடும். செய்வது மிகவும் எளிது. அல்வா கிண்ட கொஞ்சம் அனுபவம் தேவை. இதற்கு அது அவசியமில்லை. முயன்று பாருங்கள். நீங்களும் உணர்வீர்கள்.
சம்பா கோதுமை மாவு - ஒரு கப்
முந்திரி - 10
நெய் - கால் கப்
சீனி - 3 கப்
கிராம்பு - 4
ஏலக்காய் - 5
டால்டா (வனஸ்பதி) - ஒன்றரை கப்
பால் - கால் லிட்டர்










பொதுவாக அசோகாவில் பாசிப்பருப்பினை சேர்ப்பார்கள். இது பாசிப்பருப்பு இல்லாமல் செய்யப்படும் சுலப முறை அசோகா. சுமார் 15 நிமிடங்களில் செய்து முடித்துவிடக்கூடிய இந்த அசோகாவினை, நான்கு அல்லது ஐந்து நபர்கள் திருப்தியாக சாப்பிடலாம்.
Comments
சபாஷ்
இதை..இதை... இதை.... இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.. கலக்கிட்டீங்க தலைவா..
Good work
I believe, arusuvai.com is the first indian site to provide step by step, illustrated recipes. Good work. Keep it up. It is very useful for me.
பாபு அண்ணனுக்கு
பாபு அண்ணனுக்கு,
யாரும் சமைக்கலாம் பகுதி அட்டகாசம்! இதுவரை நான் பார்த்த சமையல் தளங்களிலேயே மிக சுவாரஸ்யமான ஒரு சமையல் தளம் உங்களுடையது! இந்த "யாரும் சமைக்கலாம்" தான் இதற்கு மேலும் அழகூட்டுகிறது.மிக்க நன்றி! உங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்!
Very interesting
Very interesting and useful section. Can you publish Chicken Briyani recipe with photos? Thanks in advance.
நன்றிகள்
சகோதரி அஸ்மா அவர்களுக்கும், வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்தப் பகுதி சிறப்பாய் அமைய அரும்பாடுபட்டு கொண்டிருக்கும் என்னுடைய குழுவினருக்குதான் அனைத்துப் பாராட்டுகளும் செல்லும்.
மோகன் அவர்களுக்கு, நீங்கள் கேட்ட சிக்கன் பிரியாணி எங்களது பட்டியலில் உள்ளது. குறிப்புகள் தினமும் ஒன்றாக, வரிசையாய் வருமாறு ப்ரொகிராம் செய்யப்பட்டுள்ளது. சிக்கன் பிரியாணி விரைவில் வரும்.
அசோகா
இதை மைதா மாவில் செய்யலாமா