அம்மாவுக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...

நாளை (18.08.11) என் அம்மாவிற்கு நடக்க இருக்கும் இருதய அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து, அம்மா நலமுடன் வீடு திரும்ப அனைவரும் பிரார்த்திக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். எப்போதுமே கூட்டு பிரார்த்தனைக்கு பலன் அதிகம். கிட்டதட்ட ஒன்றரை மாதமாக நாங்கள் ஏஞ்ஜியோகிராம் பார்க்க, வேறு மருத்துவரைப் பார்க்கவென அலைந்து கொண்டிருந்தோம். நிறைய ரிஸ்க் என்று தெரிந்தும், வேறு வழியின்றி அறுவை சிகிச்சைக்கு சம்மதித்திருக்கிறோம். அதனால் கடவுளிடம் ஒப்படைத்து விட்டு, உங்களின் பிரார்த்தனைகளையும் வேண்டுகிறேன்.

அம்மாவுக்காக பிராத்தனை செய்யுங்கள், ப்ளீஸ்!

அன்புடன்,
செல்வி.

செல்வி ஆன்டி ரொம்ப நாளைக்கு பிறகு வந்து இருக்கீங்க... ஆனா இப்படி ஒரு செய்தி சொல்லியிருகீங்க... கவலைபடாதீங்க எல்லாம் நல்ல படியாக நடந்து உங்க அம்மா நலமுடன் திரும்புவாங்க... அறுசுவையில் அனைவரும் கடவுளிடம் பிராத்திக்கிறோம்.

அம்மா நன்றாக குணமடைந்து வீட்டுக்கு வர என் பிரார்த்தனைகள். கடவுள் நல்லவங்களை புடம் போட்டு பார்ப்பான்.....ஆனால் கைவிட மாட்டான்.....இது என் அம்மா எனக்கு எப்பவுமே சொல்லும் ஒன்று. கண்டிப்பாக எங்கள் அனைவரின் பிரார்த்தனை உண்டு. நீங்க தப்பாக நினைக்கவில்லை என்றால் ஊனு சொல்லுகிறேன்.....வீட்டில் நாளை அறுவை சிகிச்சை நடக்கும் நேரத்தில் பூஜை அறையில் விளக்கை ஏற்றி வைத்து பிரத்தனை செய்துக் கொண்டே இருங்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

திருமதி.செல்வி அவர்களின் அம்மா நல்ல முறையில் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்......

கவலைபடாதீங்க அக்கா
அம்மாக்கு நல்லபடியா சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்ப என்னாலும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். கடவுள் துணையிருப்பார்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அம்மாவின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து நல்ல சுக பெலத்துடன் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்.

அம்மாவின் சிகிச்சை நல்லபடியாக முடிந்து நல்ல ஆரோக்கியத்தோடு அவர்கள் இல்லம்திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் செந்தமிழ் செல்வி,

கவலை படாதீங்க. கண்டிப்பா அம்மா நல்லபடியா வீட்டுக்கு வருவாங்க.

நான் கண்டிப்பா கடவுள் கிட்ட வேண்டிகிறேன்.

Please don't feel about anything pa.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

செல்விம்மா... கவலை படாதீங்க... எல்லாம் வல்ல இறைவனின் கருணையில் அம்மாவுக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை நடக்கும்... நல்லபடியாக குணமாகி வருவாங்க... நானும் வேண்டிக்கறேன்...

வித்யா பிரவீன்குமார்... :)

கவலைப்படதிங்க அக்கா. அம்மாவிற்கு நல்லபடிய ஆப்ரேஷன் முடிந்து விட்டிற்கு வருவார்கள்.கடவுளிடம் பிரத்தனை செய்கிறேன். கந்த சஷ்டி சொல்லுங்க கண்டிப்பாக சரியாகி விடும்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

மேலும் சில பதிவுகள்