குழந்தைக்கு ஆலிவ் ஆயில் போடலாமா?

10 மாத குழந்தைக்கு ஆலிவ் ஆயில் உபயோகப்படுத்தலாமா? குழந்தை குளிப்பதற்கு 10 நிமிடம் முன் ஆலிவ் பூசி குளிக்கவைக்கிறேன். ஒரு சில இடங்களில் வேர்குரு போல வந்திருக்கிறது. இது ஆலிவ் ஆயிலால் வந்ததுதானா? ஆலிவ் குளிர்ந்த தன்மை கொண்டதா அல்லது சூடானதா? குளிர் காலத்தில் உபயோகபடுத்தலாமா? ஆலிவின் பிற உபயோகம் பற்றி கூறுங்கள்.

ஹாய் நாகா நானும் என் மகளுக்கு 5 மாததிலிருந்தே ஆலிவ் ஆயில் தடவி தான் குளிக்க வைத்தேன்.அலர்ஜி ஆலிவ் ஆயிலுக்குவராதுபா.ஆலிவ் ஆயில் தடவி நல்லா மசாஜ் பண்ணி பைத்தமாவு அ கடலைமாவு போட்டு குளிப்பாட்டினால் உடலில் உள்ள தேவை இல்லாத முடியெல்லாம் உதிர்ந்து சருமம் பளபளப்பாக இருக்கும்.தொடர்ந்து உபயோகித்து பாருங்க குரு குருப்பு அதிகமானால் நிருத்திவிடுங்க.

கருத்துக்கு நன்றி சுந்தரி.. நானும் பயறு மாவுதான் உபயோகிக்கிறேன். குளியல் மஞ்சள் தூள் கடையில் வாங்கி உபயோகிக்கிறேன் அதை தொடரவா வேண்டாமா?

சுந்தரி நீங்க வள்ளியூர்ல இருக்கீங்களா? என்னோட அத்தையும் அங்கதான் இருக்காங்க

KEEP SMILING ALWAYS :-)

நாகா நான் என் பசங்களுக்கு ஆலிவ் ஆயில் பயன் படுத்தினது இல்லை.முகத்துக்கு நான் பயன் படுத்தி இருக்கேன் .பசங்களுக்கு ஜான்சன் பேபி ஆயில் தான் பயன் படுத்தினேன்.ஆலிவ் ஆயில் பற்றி எனக்கு சரியாக தெரில டா.

குழந்தைக்கு வேர்க்குரு போல வந்து இருக்குது என்றால் பால் பாருன்னு கூட சொல்வாங்க. மாசமா இருக்கும் போது வயிற்றில் ஏற்ப்படும் சுருக்கம் மற்றும் அரிப்புக்கு ஆலிவ் ஆயில் தடவ சொல்வாங்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

எனக்கு இதை பத்தி தெரியல நாகா,எங்க வீட்டுல அக்கா குழந்தைகளுக்கு ஜான்சன் பேபி ஆயில் தான் போட்டோம், நான் என் முகத்துக்கு போட்டு இருக்கேன், எனக்கு ஒத்துகல, அதுனால பயன் படுத்தறது இல்ல. நம்ம seniors வந்து சொல்லுவாங்க.

தப்பா நினைக்காதீங்க, தலைப்பை, "குழந்தைக்கு ஆலிவ் ஆயில் போடலாமா?" இப்படி தாங்க. அப்ப தான், எல்லாருக்கும் புரியும். இல்லைனா, பெரியவங்களுக்குன்னு நினைச்சுக்குவாங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நன்றி குமாரி அக்கா :-) நானும் ஜான்சன்ஸ் வாங்கினேன் பாப்பாக்கு ஒத்துக்கல :-(

KEEP SMILING ALWAYS :-)

நன்றி சுகந்தி. தலைப்பை மாத்திட்டேன் :-)

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் நாகா என் சொந்த ஊர் வள்ளியூர்.இப்ப இருப்பது ஹைதராபாத்.நீங்க எந்த ஊரில் இருக்கீங்க.உங்க அத்தை வள்ளியூரில் எங்க இருக்காங்க.எனக்கும், உங்க பேர் தான் தெரியுமா நாக சுந்தரி

நான் மதுரைல இருக்கேன். அத்தை T.B.ரோட்ல இருக்காங்க.

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்