தேதி: August 18, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மேல் மாவுக்கு:
கோதுமை மாவு
உப்பு
எண்ணெய்
நெய் (அ) பட்டர் - சுட்டு எடுக்க
ஸ்டஃப் செய்ய:
முட்டை - 2
வெங்காயம் - ஒன்று (சிறியது)
பச்சை மிளகாய் - ஒன்று
கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு
கோதுமை மாவை உப்பு, எண்ணெய் கலந்து தேவையான நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும். முட்டை வேக வைத்து ஓட்டை நீக்கவும்.

முட்டையை துருவி கொண்டு, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் உப்பு கலந்து வைக்கவும்.

கோதுமை மாவை எடுத்து சிறிதாக திரட்டி அதன் நடுவே முட்டை கலவை வைத்து மூடி மீண்டும் திரட்டவும்.

திரட்டிய பரோட்டாவை சூடான தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் ஒரு முறை திருப்பி போட்ட பின் எண்ணெய், நெய் அல்லது பட்டர் தேய்த்து நன்றாக சிவந்ததும் எடுக்கவும்.

சுவையான முட்டை பரோட்டா தயார். லஸ்ஸி, குருமா என எல்லாமே பொருந்தும்.

குழந்தைகளுக்கு செய்வதாக இருந்தால் மிளகாய்க்கு பதிலாக மிளகு தூள் சேர்க்கலாம். வெள்ளை மிளகு அல்லது சாதாரண மிளகு பயன்படுத்தலாம். சற்று வித்தியாசமாக செய்ய விரும்பினால் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய்க்கு பதிலாக மிளகாய் தூள் சேர்த்து கலவையை சிறிது பிரட்டி எடுத்து ஸ்டஃப் செய்யலாம். இன்னும் கூட முட்டை சுவை பிடிக்கும் என்றால் ஒரு முட்டையை ஒடைத்து கப்பில் ஊற்றி உப்பு கலந்து அடித்து, சப்பாத்தி சுடும் போது இரண்டு பக்கமும் மேலே ஊற்றி சுடலாம்.
Comments
வனி
வனி சுவையான முட்டை பரோட்டா செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்.முட்டை அவித்து சேர்த்தால் மஞ்சள் கரு ஸ்மெல் வராதா?
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
Vanitha
வித்யாசமான குறிப்பு வாழ்த்துக்கள்
KEEP SMILING ALWAYS :-)
வனி
வனி முட்டையை நடுவில் வைத்து தேய்க்கும் போது, வெளியே வந்து விடுமே?? நீங்க எப்படி பண்ணுனீங்க?
//திரட்டவும்// தேய்க்கவும் தான?
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
வனி
வனி குறிப்பு ஈஸியா இருக்கு. லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து அனுப்பலாமா.
வனி
சூப்பரான எளிமையான முட்டை பரோட்டா வாழ்த்துக்கள் வனி.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
Vani
Vaalthukkal vani.super parotha
வனி
கடைசியில் கார்னிஷ் செய்து இருப்பது சூப்பர். நல்ல குறிப்பு.. வாழ்த்துக்கள் ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
வனிதா
வனி உங்க குறிப்பு எல்லாமே எனக்கு புடிக்கும் இதுவும் சூப்பர்
வனிக்கா
வனிக்கா
வித்தியாசமான குறிப்பு..... முட்டைய அவிச்சு செஞ்சதில்ல.... செய்து பார்க்கிறேன்
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)
குமாரி... மிக்க நன்றி. செய்து பாருங்க, வாசம் வராது ரொம்ப நல்லா இருக்கும். :)
நாகா... மிக்க நன்றி.
சுகி... தேய்ப்பதே தான். படம் பாருங்க, வெளிய வரல தானே??? ;) நாம தான் பொடியா துருவிடுறோமே.. வரவே வராது. செய்து பாருங்க. மிக்க நன்றி.
வினோ... தாராளமா லன்ச் பாக்ஸில் வைக்கலாம்... செய்து பாருங்க. மிக்க நன்றி.
சுவர்ணா... மிக்க நன்றி. :)
ஜானு... மிக்க நன்றி :)
ரம்யா... அப்படின்னா முதல்ல இருக்குறது நல்லா இல்லையா?? ;) ஹிஹிஹீ. மிக்க நன்றி ரம்யா.
மெர்ஜானா... மிக்க நன்றி. குட்டீஸ்க்கு மிகவும் பிடிக்கும், செய்து பாருங்க.
ஆமினா... ரொம்ப நன்றி ஆமினா... செய்துட்டு சொல்லுங்க. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி அக்கா
பார்க்க அவ்ளோ சூப்பரா இருக்கு உங்க பரோட்டா அப்படி எடுத்து சாப்பிட தோணுது நேரம் கிடைக்கிறப்போ செய்து பார்துடுறேன் வாழ்த்துக்கள் அக்கா by Elaya.G
இளையா
ரொம்ப நன்றிங்க. அவசியம் செய்து பாருங்க, சுவையும் பிடிக்கும். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
முட்டை பரோட்டா
நேற்று மதியம் குழந்தைகளுக்கு இது செய்தேன். அவர்கள் சாப்பிட்டார்களோ இல்லையோ நான் நல்லாவே சாப்பிட்டேன். படங்கள் உங்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப் படும்.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
வனிதா மேடம்,
வனிதா மேடம்,
நல்ல பெலேன்ஸ்டு உணவு
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
லாவண்யா
மிக்க நன்றி. குட்டீஸ் சாப்பிடலயா??? உங்களூக்கு பிடிச்சுதா? சரி படம் அனுப்புங்க பார்க்கிறேன் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கவிதா
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
வனி சுவையான குறிப்பு சீக்கிரமே செய்துட்டு சொல்கிறேன் வாழ்த்துக்கள்
பாத்திமா
மிக்க நன்றி பாத்திமா... செய்துட்டு சொல்லுங்க :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
முட்டை பரோட்டா
அன்புள்ள வனிதா நலமா?முட்டைக்கு பதிலாக கைமா வைத்து செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.முட்டையும் வைத்து ஒரு முறை செய்து பார்கிரேன்.மிக்க நன்றி.அன்புடன் பர்வீன்
பர்வீன்
செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி பர்வீன். இதே போல் எல்லா வகையும் செய்யலாம். நான் கைமா வாங்கும் வழக்கம் இல்லை, அதனால் முயற்சித்ததில்லை... வாங்கினால் நிச்சயம் செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி பர்வீன் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா