கறிவேப்பிலை குழம்பு

தேதி: August 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.8 (4 votes)

 

கறிவேப்பிலை - 1 கப்
பிஞ்சு கத்தரிக்காய் - 4 அல்லது பூண்டு - 20 பல்
புளி - எலுமிச்சை அளவு
வற்றல் மிளகாய் - 5
உளுந்து - 2 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
கடுகு, கடலைப்பருப்பு - தாளிக்க
நல்லெண்ணெய் - 1/4 கப்
உப்பு


 

வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய், உளுந்து, பெருங்காயத்தை வறுக்கவும்.
இவற்றுடன் கறிவேப்பிலை, புளி, உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கத்தரிக்காய் அல்லது பூண்டை நன்றாக வதக்கவும்.
இதில் அரைத்த கறிவேப்பிலையை ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்கவிடவும்.
எண்ணெய் பிரிந்து கிரேவி பதம் வந்ததும் பரிமாறவும்.


தயிர் சாதம், இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.

புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கு பால் சுரக்க பூண்டு சேர்த்து கொடுப்பார்கள். கர்ப்பிணிகள் கத்தரிக்காய், பூண்டு சேர்க்காமல் வெறும் குழம்பு சாப்பிடுவார்கள்.

கர்ப்பிணிகள், குழந்தை பெற்றவர்கள் தவிர மற்றவர்கள் இதை 3, 4 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். பிரிட்ஜில் வைத்தால் 1 வாரம் பயன்படுத்தலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நல்லதொரு குறிப்பு. எங்கள் பக்கத்தில் குழந்தை பிறந்தவர்களுக்கு கத்தரிக்காய், பூண்டும் மற்றும் கருவேப்பிலை அதிகம் தருவார்கள். நீங்கள் அதை எல்லாத்தையும் வைத்து ஒரு குறிப்பு செய்துள்ளீர்கள். இருந்தாலும் ஒரு சின்ன சந்தேகம்......கருவேப்பிலையை பச்சையாக சேர்த்து அரைப்பதால் கசக்காதா?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கண்டிப்பா கசக்காது. தைரியமா சாப்பிடுங்க :-) நல்லெண்ணெய் தாராளமா சேர்த்து இட்லிகூட சாப்பிட்டா சூப்பரா இருக்கும். அதிலும் இரவே செய்துட்டு மறுநாள் சாப்பிடனும்

KEEP SMILING ALWAYS :-)