LKG,UKG -பாடங்கள் என்ன என்ன என்பதை பற்றி சொல்லுங்கள் please.

என்னுடைய மகனுக்கு 3 வயது 7 மாதங்கள் ஆகின்றது.நாங்கள் இப்பொழுது அமெரிக்காவில் இருப்பதால் இந்தியாவில் LKG,UKG குழந்தைகளுக்கு SCHOOL-ல் என்ன என்ன எழுத, படிக்க சொல்லி தருகிறார்கள் என்று யாரேனும் எனக்கு சொல்ல முடியுமா? PLEASE. இங்கு 5 வயது வரையிலும் PRE SCHOOL-ல் எதுவும் சொல்லி தர மாட்டார்கள்.
நான் அவனுக்கு என்ன என்ன RHYMES,STORIES,SHAPES,NUMBERS,SPEELINGS,WRITTINGS......எல்லாம் சொல்லி தர வேண்டும் என்று யாரேனும் எனக்கு விளக்கமாக பதில் சொல்ல முடியுமா?PLEASE. ஏனெனில் நாங்கள் இன்னும் 1 அல்லது 2 வருடங்களில் இந்தியா வந்து விடலாம் என்று நினைக்கிறோம்.அதனால் என்னுடைய குழந்தை அங்கே வந்து படிக்க கஷ்டப் படக்கூடாது என்று நான் நினைக்கின்றேன்.அதனால் தான் கேட்கிறேன். PLEASE HELP ME.

உமா... நீங்க USA - ல ப்ரிஸ்கூல் அனுப்பலாம், கண்டிப்பாக நிறைய சொல்லித்தருவாங்க. அப்படி ஒன்னும் சொல்லிக்கொடுக்காம இருப்பதில்லை. இந்தியாவில என்னவெல்லாம் குழந்தைங்க KG - ல படிபாங்களோ அதெல்லாம் கவர் ஆகிடும்.நீங்களே சொல்லியிருக்கிற எல்லாத்தையும் ஷேப்ஸ், ரைம்ஸ்... வீட்டுல சொல்லிகொடுக்கலாம். வீட்டுலே நீங்க எல்லாத்தையும் சொல்லிகொடுக்க தனியா நேரம் ஒதுக்கணும். ஆனால் நல்ல ஆங்கிலம் மற்றும் சில ஒழுங்கு முறைகளை இங்கே பள்ளி செல்லும் குழந்தைகள் தானே கற்றுக்கொள்கிறார்கள்.
நீங்க எந்த ஊரில் இருக்கீங்க? அங்கே என்ன செலவு ஆகும் ப்ரிஸ்கூலுக்கு என்று பார்த்து வாரத்தில் மூன்று அல்லது இரண்டு நாளோ அல்லது சில மணி நேரங்களோ மட்டும் கூட அனுப்பலாம்

யாருங்க சொன்னாங்க இங்குள்ள பள்ளியில் ஒண்ணுமே சொல்லி கொடுக்க மாட்டங்கன்னு :(

என் மகளுக்கும் ஏறக்குறைய உங்க பையனின் வயசு தான். நான் அவளை பள்ளிக்கு அனுப்புகிறேன். அங்கே அவள் ஸ்மால் மற்றும் காபிட்டல் லெட்டர்ஸ் நம்பர்ஸ் எழுதுறா.....நிறைய வரையறா, ரைம்ஸ் சொல்லுவா, எல்லா ஷேப்ஸ் மற்றும் கலர் அவளுக்கு தெரியும். போனிக்ஸ் தெரியும்.

எங்கேயும் ஸ்கூலில் மட்டுமே சொல்லிக்கொடுக்கணும் என்று இருந்து விடக் கூடாது. நான் வீட்டில் அவளுக்கு நிறைய சொல்லி கொடுப்பேன். நான் வீட்டில் அவள் பள்ளிக்கு செல்லும் முன்னரே போனிக்ஸ் சொல்லிக் கொடுத்தேன். மற்றும் நிறைய ரைம்ஸ் சொல்லி கொடுத்தேன். நீங்கள் பள்ளிக்கு தான் அனுப்பனும் என்று இல்லை. வீட்டிலே நீங்கள் நிறைய சொல்லி கொடுக்கலாம். நான் மேலே கூறியதை முதில் சொல்லி கொடுங்கள். இங்கு முதலில் ஸ்மால் லெட்டர்ஸ் தான் எழுத வைப்பார்கள். லெட்டர்ஸ் நன்றாக எழுத ஆரம்பித்த பின்னர் த்ரீ லெட்டர் வேர்ட்ஸ் எழுத வைக்க வேண்டும். அதுவும் அவர்களுக்கு நன்றாக போனிக்ஸ் தெரிந்த பின்னர் தான். அப்படியே நம்பர்ஸ் எழுத சொல்லிக் கொடுங்கள். நம்பர்ஸ் நன்றாக எழுதிய பின்னர் one, two, three....அப்படி எழுத சொல்லிக் கொடுங்கள்.

வீட்டில் நிறைய புத்தகங்கள் படித்து காட்டுங்கள். அவர்களுக்கு கலரிங் புக் வாங்கி கொடுங்கள். எழுத்துக் கூட்டி படிக்க வைக்கலாம். அடிக்கடி லைப்ரரி கூட்டிட்டு போங்க. இந்தியாவிற்கு திரும்ப போகவதாக இருந்தால் அங்குள்ள ஸ்கூலில் உள்ள சிலபஸ் வாங்கி இங்கே நீங்க வீட்டிலே சொல்லி கொடுக்கலாம். இல்லைஎன்றால் அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கம், கட்டுப்பாடு வர நீங்கள் பள்ளிக்கும் அனுப்பலாம். ஆனால் நீங்கள் இங்கே நெட்டில் தேடினால் நிறைய பாடங்கள் மற்றும் வொர்க் ஷீட்ஸ் இருக்கும். அதை வைத்தும் சொல்லி கொடுக்கலாம்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

உமா,

நீங்க என்னங்க இப்படி சொல்லிடீங்க? என் மகளுக்கு இரண்டரை வயது தான் ஆகுது.playschool ஒரு வருடமா போறாங்க .rhymes ,shapes ,கலர்ஸ்,days ,months ,numbers ,alphabets என்று நிறைய சொல்வாங்க.இங்கே உள்ள preschool curiculum கொஞ்சம் child pschycology based சிஸ்டம் அதனாலே உங்களுக்கு அப்படி தெரியலாம்.கரெக்டா சரியான தீம் கொண்டு பாடம் நடத்தும் playschool பல இங்கே இருக்கு.கொஞ்சம் தேடி பாருங்க.

ஸ்கூல் மட்டுமே போதாதுங்க நாமும் வீட்டில் நிறைய சொல்லி கொடுக்கணும்.உங்க பிள்ளைக்கு எந்த மாதிரி சொல்லி கொடுத்த பிடிக்குது என்று identify பண்ணுங்க,சில பிள்ளைகள் audio learners ஆக இருப்பாங்க அவங்களுக்கு கேட்டு படிக்க பிடிக்கும் சில பசங்க வீடியோ learners ஆக இருப்பாங்க அவங்களுக்கு visual கிட்ஸ் use பண்ணுங்க. நிறைய படித்து காட்டுங்க.நீங்களும் அவங்க கூட சேர்ந்து படிங்க.இங்கே கிட்ட தட்ட எல்லா இடங்களிலும் நூலகம் இருக்கும்.அங்கே ஸ்டோரி டைம்,learning டைம்,சாங் டைம் போன்று நிறைய திட்டம் இருக்கும் அங்கே கூட்டி போங்க.

நிறைய workshop நடத்துவாங்க.உங்களுக்கே நிறைய ஐடியா கிடைக்கும்,நானும் நிறைய தேடி தேடி தான் சொல்லி கொடுக்குறேன்.எழுத வைக்க இப்போ தான் ஆரம்பித்து இருக்கோம்.
இதை பற்றி அறுசுவையிலே நிறைய லிங்கில் பேசியிருக்காங்க
ஒரே நாளில் திணிக்க பார்க்காதீங்க.
இங்கே syllabus முதலில் slow போலே தெரியும் அப்புறம் சரியா பிடிக்கிறாங்க
math ஸ்கில் வளர kumaon போன்று பல பிரைவேட் classes கூட இருக்கு
கூகிள் பண்ணுங்க நிறைய கிடைக்கும்
ஆல் தி பெஸ்ட்

என்றும் அன்புடன்,
கவிதா

எனக்கு உடனே பதில் தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. நாங்கள் ப்ரிஸ்கூல் அனுப்புகிறோம்.நாங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் அனுப்புகிறோம் .நான் தாங்க வீட்டில் எல்லாம் சொல்லி தருகிறேன்.நாங்கள் califonia -வில் இருக்கிறோம்.இங்கே மாதம் 350 டாலர்-ங்க(மூன்று நாட்கள் ) .school -ல் கேட்டால் நாங்கள் சாப்பிட வைப்பதும்,விளையாட வைப்பதும் தான் செய்வோம் என்று சொல்கிறார்கள்.என்னுடைய குழந்தையிடம் கேட்டால் car ,truck,எல்லாம் விளையாடினேன் என்று மட்டும் தான் தினமும் சொல்கிறான்.அவனுக்கு நான் தான் sleeping lines,standing lines, sloping lines,curves,and shapes,colors,எல்லாம் சொல்லி தந்தேன்.capital letters A to k வரை,numbers 1 to 7 வரை எழுத சொல்லி தந்தேன்.He knows 6 or 7 nursery rhymes . .

ஒருவேளை நீங்கள் அனுப்புவது டேகேர் மாதிரியோ....???இல்லையென்றால் நீங்கள் ஒரு மாண்டெஸ்ஸரி மாதிரி பள்ளியில் சேர்த்து விடுங்கள். நீங்கள் கலிபோர்னியாவில் எங்கிருக்கீங்க.....

நீங்கள் இருக்கும் இடத்தில் உள்ள கம்முயுனிட்டி சென்டரில் விசாரித்தால் நிறைய குழந்தைகளுக்கான வகுப்புகள் இருக்கும். அங்கே குறைந்த கட்டணத்தில் படிக்க வைக்கலாம். பொதுவாக இந்த மாதிரி வகுப்புகள் சம்மரில் தான் இருக்கும் என்று நினைக்கிறேன் :(

இங்கு எழுத வைக்க முதலில் அந்த மாதிரி ஸ்லீப்பிங் லைன்ஸ் ஸ்டாண்டிங் லைன்ஸ் என்று சொல்லிகொடுப்பதில்லை. அப்படியே ட்ரெஸ் செய்ய சொல்லுவார்கள் பிறகு தனியாக எழுத வைப்பார்கள். முதலில் அவர்கள் ஸ்மால் லெட்டர்ஸ் தான் ஆரம்பிப்பார்கள்.

நீங்கள் குழந்தைக்கு செவன் காண்டினென்ட்ஸ், ஜெர்மிநேஷன், சோலார் சிஸ்டம் எதெல்லாம் சொல்லிகொடுக்கலாம். எதெல்லாம் என மகளுக்கு அவளின் பள்ளியில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். உங்களுக்கு எல்லா வைகயான எஜுகேஷனல் வீடியோசும் யு-ட்யூப்பில் இருக்கு அதை ஒரு அளவு கோளாக வைத்து சொல்லி கொடுங்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நீங்கள் சொன்ன மாதிரி இது டேகேர் இல்லை. இதுவும் school தான்.நாங்கள் brea -வில் இருக்கிறோம் .நாங்கள் கடந்த 15 மாதங்களாக 3 half day வைத்து school அனுப்புகிறோம்,சில நாட்களில் coloring,drawing செய்த பேப்பரை வீட்டிற்க்கு கொண்டு வருவான்,பெரிதாக சொல்ற மாதிரி speech -ல் எந்த முன்னேற்றமும் இல்லை.சில நாட்களில் coloring,drawing செய்த பேப்பரை வீட்டிற்க்கு கொண்டு வருவான்.அதனால் வேறு school -ல் சேர்க்க முடிவு எடுத்து விசாரித்தோம்,ஆனால் ஒரு school -ல் 4 வயது முடிந்தால் தான் எடுப்போம் என்று சொல்லி விட்டார்கள் மற்ற எல்லா school-ம் தொலைவில் உள்ளது .அதனால் வேறு வழி இன்றி அதே school -ல் சேர்த்து விட்டோம். நீங்கள் சொல்ற மாதிரி குழந்தைக்கு செவன் காண்டினென்ட்ஸ், ஜெர்மிநேஷன், சோலார் சிஸ்டம் எல்லாம் சொல்லி கொடுத்திருக்கிறார்களா.இதே மாதிரி வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் please.நானும் இதை எல்லாம் சொல்லி கொடுக்க முயற்சி செய்கிறேன்.

-

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

உமா, Brea - Orange County (Near LA) இங்கே தானே இருக்கீங்க? எங்களுக்கு பக்கம் தான்....நான் அங்கே வந்திருக்கிறேன்.... இப்போ கூட நெக்ஸ்ட் month வருவேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம். உங்க பெயர் தான் என் பெயரும்.

ஹாய், எப்படி இருக்கிங்க.
1.அ முதல் ஃ வரை, க ங ச, [வடிவங்கள்,மாதங்கள், கிழமைகள் பாடல்கள், கதைகள்], மற்றும் வார்த்தைகள்.aral\oral

2.ஆங்கிலத்தில்AtoZ,atoz, [கிழமைகள் பாடல்கள், கதைகள்,] மற்றும் வார்த்தைகள்.aral\oral

3.கணிதத்தில் எண்கள், வடிவங்கள்,வ்டுபட்ட எண்னை கண்டுபிடுத்த்ல் போன்ற்வை.
aral\oral
4.அறிவியலில் விலங்குகள்பெயர்,தாவரங்களின்பெயர்கள்,உய்ருள்ளவை உய்ர் அற்றவைஎன[living,non-living[animaland plants]
5.hidi 1to10 aral\oral
6.g.k

நன்றி n.yogapriya. நாங்க நல்லா இருக்கிறோம் .நீங்க எப்படி இருக்கீங்க?..நீங்க சொல்லி இருப்பது LKG பாடங்களா?.கணிதத்தில் எண்கள் எது வரை தெரியுமா?.தப்பா நினைக்காதீங்க aral என்றால் என்ன?.

மேலும் சில பதிவுகள்