மனசு சரியாய் இல்ல கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க solution vennum

ஹாய் பிரண்ட்ஸ் எல்லாரும் நல்லமா ?இத பத்தி எப்படி start பண்ணறது நு தெரியல பட் என்னால ஒருத்தருக்கு suggest பண்ண முடியல ippa நா பேச போறது என் உயிர் தோழி பத்தி நானும் அவளும் schooling la இருத்து இப்ப வரகும் பிரண்ட்ஸ் சம்மிப காலமா அவ கொஞ்சம் சரியாய் இல்ல நிறைய changes யாருகுடவும் சரியாய் பேசுறது இல்ல ரொம்ப dulla irukuka ennakum அவளக்கும் இது வரகும் எந்த ப்ரோப்ளேம்சும் வந்தது இல்ல இப்பவரை....எல்லா matterum ஷேர் பண்ணிப்போம் family பத்தி future பத்தி ஒரு நாள் கால் பண்ணி ரொம்ப alutha அவ எது வரகும் இப்படி aluthathu இல்ல என்னக்கு theriji... அவல என்னால control பண்ண முடியல என்னக்கு alukai வந்துடிச்சி என்ன பண்ணறது தெரியல சோ ebadiyo சமம்தான படுத்தி தூங்க சொன்னேன் ரெண்டு நாள் கழிச்சி இத பத்தி கேட்டேன் என்ன problem என் கிட்ட solu.... என் தோழி ரொம்பவும் நல்ல குடும்பத்தை சார்ந்தவள் அனைவரும் படித்த நல்ல வேலை என்று இருபவர்கள் சிறு வயது முதல் அவள் யாரு கூடவும் அதிகமாக பேசமாட்டாள் குறிப்பாக ஆண் நண்பர்கள் இல்லை என் சக தோழர்கள் இடம் குட தேவை இருத்தல் மட்டும் பேசுவாள் ரெண்டு நாள் களைத்து கேட்ட pothu தன ஒருவரை விரும்புவதாக தெரிவித்தல் கடத்த ஒரு வருடமாக itha பத்தி தன்னிடம் தெரிவிக்க பயமா இருத்தல் kuravillai ennaral எங்கள் பிரண்ட்ஸ் கிட்ட குட வீட்ல சம்மதம் vaangi சொல்லிகாலம்னு சொல்லலன்னு சொன்ன... நானும் அவள் சொல்லறது சரிதான் என்று கோவ படாமல் மேலும் கேட்டேன் என்னவென்று itha ஒரு வருடத்தில் அந்த நபர் என் தோழியை மிக்கவும் மனதளவி கஷ்ட படுத்தி உள்ளார் எப்ப problems வந்தாலும் இவள தன கால் பண்ணி பேசுவலமா 1மாதம் ஆனால குட அவராக பேச மட்டரம இவள் பேசினால் தன உண்டு sms இவள் late ஆகா செய்தல் குட ரொம்ப கேவலமாக இவள வருத்தும் படி எவன் குட பேசிட்டு இருத்த இப்படி தன கேப்பரமா ?எந்த ஒரு வருடத்தில் இருவரும் தன்னியக சந்தித்தது இல்ல ரெண்டு முறை சந்தித்து உள்ளனர் என் தோழி கு தனியாக சந்தித்தால் பேசுதல் இதல் எல்லாம் உடன்பாடு illa எதுவானாலும் parents விருப்பத்துடன் நடக்க வேண்டும் என்று உறுதியாக இருத்தல் 2 வாரங்களுக்கு முன்பு எது சண்டை இருவராகும் இவளும் பேசவில்லை அந்த நபரும் கண்டு கொள்ளவில்லை இவளுக்கு எப்பொழுதும் தன்னை சந்தேகத்துடன் பக்கும் நபர் தேவையா ?என்று சிந்திக்க தொடங்கி வீடல் இருத்தலும் மனம் குழப்பமாக உள்ளது என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாள் வெறுமையாக உள்ளதாக சொல்லற தனிமை மட்டும் தன தனக்கு நிம்மதியை தருவதாக சொல்லற யாரு கூடவும் சரியாய் பேசுவது இல்ல இப்படியே இருத்தல் என் தோழினில்லை என்னவாகும் என்று என்னக்கு பயமாக உள்ளது பிரண்ட்ஸ் என்னால் அவளுக்கு சரியாய் ஆலோசைனை சொல்ல முடியல pls help me frnds typing mistakes eruthal mannikavum...

சத்யா, எப்படி இருக்கீங்க?
உங்க தோழியின் நிலைமை நல்லா புரியுது, முதலில் அவங்க காதலிக்கும் பையன் காதலிக்கும் முன் எப்படி இருந்தான் ன்னு கேளுங்க, அதாவது காதலிக்கும் முன் இவங்கள இம்ப்ரெஸ் பண்றக்காக நல்ல மாதிரி இருந்து இருக்கலாம். அதன் பின் மாறி இருக்கலாம். சில பசங்க, பிடிவாதம் என்பது கூடவே பிறந்தது, சண்டைன்னு இல்ல,அவங்களே தப்பு பண்ணி இருந்தாலும் அவங்கனால இறங்கி வர முடியாது,இறங்கி வர மாட்டாங்க. இது எழுத படாத உண்மை.

இந்த மாதிரி சந்தேகம் படற பசங்கள, திருத்த முடியாது சத்யா. உங்களது தோழி அவனை விட்டு விலகுவதே சிறந்தது. இவங்க எடுக்க போற முடிவு இவங்க இனி வாழ போற வாழ்க்கை பத்தினது, இப்ப அவனை மறக்க கண்டிப்பா கஷ்ட்டமா தான் இருக்கும், பல நினைவுகள் வந்து கொல்லும், இருந்தாலும் அவன் செய்த கஷ்ட்டங்கள்,பேசிய வார்த்தைகள் மனதில் வைத்து அவனை விட்டு பிரிவதில் தப்பு இல்லை. உங்களது தோழி வீட்டில் ஒருவேளை மாப்பிள்ளை பாத்துட்டு இருக்காங்கன்னா, இப்பத்திக்கு ஸ்டாப் பண்ண சொல்லுங்க. இவங்க மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும். இந்த மாதிரி ஒரு சம்பவத்தை நினைக்காம இருக்க சொல்லுங்க.

எல்லார் கிட்டயும் பேச சொல்லுங்க, மனசுக்கு பிடித்த விஷியம் பண்ணட்டும், இது எல்லாம் சொல்ல நல்லா இருக்கும் தான், நடைமுறை படுத்த கொஞ்ச நாள் ஆகும், எவளோ நாள் ஆனாலும் பொறுமையா நிதானமா முடிவு எடுக்கட்டும்..நீங்க அவங்க கிட்ட அடிக்கடி பேசுங்க. அவங்களுக்கு எது பிடிக்கும், பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியும் இல்ல, அது மாதிரி கொஞ்ச நாள் நடந்துக்கோங்க. இந்த விஷியம் பத்தி இனிமேல் அவங்க கிட்ட பேசாதீங்க. நாமலே நியாபக படுத்தற மாதிரி ஆகி விடும்.

அவங்க தனியா இல்லாத மாதிரி பாத்துக்கோங்க, அவங்க கிட்ட சொல்லுங்க, "ஒரு நல்ல மனிதரை விட்டு அவங்க பிரியல, இவங்கள புருஞ்சுக்காத, புண்படுத்தர ஒரு மெசின் கிட்ட இருந்து விலக போறாங்க."

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் சத்யா உங்க friend ரொம்ப vex ஆகி இருகாங்க. உங்க friend கிட்ட கொஞ்சம் பக்குவமா சொல்லி அந்த payana வேண்டனு சொல்லிருங்க. இந்த மாதிரி சந்தேகம் படுற அவன் கூடா வாழ்ந்த சந்தோஷமா இருக்க முடியாது பா.

madhu

உங்க suggestion ku ரொம்ப நன்றி என் தோழி பொறுத்த வரகும் childhood la இருந்து mrg la விருப்பம் இல்லாம இருத்தவ அவளுக்கு சர்வீஸ் பண்ணதன் ஆசை mrg பண்ண செல்பிஷ்நேச்ஸ் வந்துடும்...சோ வேண்டாம் நு சொல்லுவா இது அவளுக்கு 1st lov சொல்ல பொன்னால் பேசி 2monthalaye மனசுல இருக்கற feelingsa share பண்ணிகிட்டாங்க beginningala என் தோழி அவங்க வீட்ட think பண்ணி வேண்டாம் nu சொன்ன பொது அந்த பையன் ரொம்ப கஷ்டப்படத sonna அந்த பையன் கிட்ட அவளுக்கு பிடிக்காத விசியம் அவன் அவல சந்தேகபடுறது than மத்தபடி அந்த பையன் character நல்ல தன இருக்கு அதுனால than நா அவன் எவள fight பண்ணலும் sari sari nu adjust பண்ணி போறதா சொன்ன எப்போ என் frnd வீட்ல அவளுக்கு varan lam பாக்கள அவல பொறுத்த வரகும் oru love, oruthara think பண்ண அவர than mrg பண்ணனும் கடைசி வரகும் மாறக்கூடாது இல்லடி mrg பண்ணிக்க வேண்டாம் nu முடிவுல இருக்கா இது வரகும் en thozhai ku proposals வந்து இருக்கு பட் அவளுக்கு அதுல lam உன்னடன்பாடு illa lov lam poi nu இருந்தவ இப்போ அவளுக்கு வந்தத அவளால நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல அவளுக்கு அவங்க parents ரொம்ப முக்கியம் அவங்கள அசிங்கபடுதற நோக்கம் அவளுக்கு கொஞ்சம் kuda illa அவங்க வீட்லயும் சரி relations layum சரி அவள் தன செல்லம் அவ எதுலம் think பண்ணிதான் decide பண்ணுவ but எந்த விசியத்துல அவல எதுக்கும் வர முடியல அவ நம்ப வேண்டாம் nu சொல்லிட அது நம்ப அந்த பையன் cheat பண்ணற மாதிரில நு கேக்கற naa enna answer panna pa?

நல்லா அனலைஸ் பண்ண முடியுமா பாருங்க இல்லனா சுகந்தி சொன்ன மாதிரி ///அவங்க தனியா இல்லாத மாதிரி பாத்துக்கோங்க, அவங்க கிட்ட சொல்லுங்க, "ஒரு நல்ல மனிதரை விட்டு அவங்க பிரியல, இவங்கள புருஞ்சுக்காத, புண்படுத்தர ஒரு மெசின் கிட்ட இருந்து விலக போறாங்க."/// இதுதா பதில்...

KEEP SMILING ALWAYS :-)

உங்க தோழியின் மனநிலை புரிகிறது. காதல் வரும்போது நமக்கு அவர்கள் குற்றங்கள் தெரிவதில்லை... கொஞ்ச நாள் பழகினா தான் அதில் இருக்கும் கஷ்டமும் வேதனையும் தெரியும். அப்படி தான் அவங்களுக்கும் லேட்டா புரியுது. இப்ப உங்க தோழிக்கு விலகி இருப்பதில் வருத்தம் இல்லை... நம்மை நம்பி காதலித்தவரை ஏமாற்றியதாகிவிடுமோ என்றே வருந்துகிறார். தேவையில்லாத கவலை!!! என் மனசுக்கு தெரிஞ்சது இது தான்:

1. காதலிப்பவர்கள் தெரிஞ்சோ தெரியாமலோ கூட தான் காதலிப்பவரை நோகடிக்க கூடாது.

2. பொஸஸிவ்னஸ் காரணமோ இல்லை நம்ம மேல் உண்மையாவே சந்தேகப்படும் சுபாவமோ... சந்தேகம்னு ஒரு குணம் இருந்தா அது வாழ்க்கைக்கு உதவாது.

3. திருமணம் என்ற பந்தத்தில் இணைய புரிதல் மட்டும் போதாது... நம்பிக்கை என்ற அஸ்திவாரம் வேண்டும். தன் துணையை பற்றி பிறர் அவதூறாக பேசினால் கூட அசையாத நம்பிக்கை வேண்டும்.

4. எப்போது இவருடன் நம் வாழ்க்கை நன்றாக இருக்குமா என்ற சந்தேகம் வந்துவிட்டதோ... இனி அவரோடு வாழ்க்கை சிறப்பது சிரமமே.

5. பார்ப்போம் என்று விட்டு கொடுத்து வாழ்வது சில மாதங்கள் வேண்டுமானால் சாத்தியம்... வாழ்க்கை முழுக்க இப்படியே போக முடியாது. காதலிக்கும் போதே இத்தனை சந்தேகம், இத்தனை சண்டை என்றால்... திருமணத்துக்கு பின்??!!!

உங்க தோழியின் காதலர் அந்த நொடி சந்தேகத்தோடு கேள்வி கேட்டு காயப்படுத்தினாலும் பின் அதை தவறென்று உணரவில்லை... அதனால் தான் மாதங்கள் ஆனாலும் உங்கள் தோழியே கால் செய்து பேச வேண்டி உள்ளது. அவர் அவர் செய்யும் தவறை உணர்வதாக தெரியவில்லை. தான் கேட்பது, உங்கள் தோழியை காயப்படுத்துவதையும் சரி என்றே நினைப்பதாக தெரிகிறது. இப்படி சந்தேகப்படுவது பொஸஸிவ்னஸ் என்று எடுத்துக்கொண்டால் திருமணத்துக்கு பின்னும் இது அதிகமாகவே செய்யும். வீட்டில் மனைவியை தனியாக விடக்கூட சந்தேகம் வரலாம்... வேலைக்கு அனுப்ப சந்தேகம் வரலாம்... தனியே எங்காவது போய் வந்தால் சந்தேகம் வரலாம்.... இது வாழ்க்கைக்கு உதவுமா???

நாம் அவரை ஏமாற்றுவதாகிவிடும் என்று இன்று அவரை மணமுடித்தால் உங்கள் தோழி வாழ்க்கையில் ஏமாற வேண்டியதாகும். பெண் என்பவள் யாருக்காகவோ தியாகம் செய்ய வேண்டியது தன் வாழ்க்கையை அல்ல... அது பிற்காலத்தில் அவளை மட்டுமல்ல அவள் குடும்பத்தையும் சேர்த்தே பாதிக்கும். என்னை பொறுத்தவரை உங்கள் தோழிக்கு அவர் ஏற்றவர் அல்ல... விலகிவிட்டால் வாழ்க்கையில் நிம்மதி இருக்கும். விலக வருந்த வேண்டிய அவசியம் இல்லை.... நம்மை நேசிப்பவரை தான் நாம் காயப்படுத்த கூடாது.... காயப்படுத்துபவரை விட்டு விலகுவதில் தவறில்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு தோழி.... உங்கள் தோழியை நீங்கள் தான் இதில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். காதலில் மட்டும் அல்ல வாழ்க்கையிலும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைக்க வேண்டும் அது இல்லை என்றால் வாழ்க்கை நரகம் ஆகிவிடும்.... நம் தோழிகள் கூரியது போல் அந்த காதலில் இருந்து விலகுவதே நல்லது. இல்லையேல் அவள் வாழ்க்கை மட்டும் அல்ல அவள் பெற்றோர் நிம்மதியும் போய் விடும்.முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம்....

விவேகானந்தரின் வரிகள்...........

"நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்"

அன்புடன்
லதா....

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

neenga ellarum evala caringa answer pannathuku romba nandri naa avaloda gulityness pogarathukaka try pannitu eruken but avanga eppo pesama iruthalum pirichidalam nu ennum antha paiyan sollala naana sonna?antha paiyan ku virupam eruthum naa than sariya purijikama solitatha nenachikara unga kitta discuss pannatha pathi sollaren avalai mathiri ponnu kidaka avaruku athistam illana namba enna panna mudiyum????pala murai entha mudivuku vanthum kuda etho onnru thannai thadupatha karuthi en tozhai pala murai pesi ullala aana entha murai than aval sinthika aarampithu ullal so let me try my best ethai pattri vera doubts eruthalum unga kitta share pannikaren kandipaka answer pannanum frnds

நீங்க தமிழ்ல டைப் பன்னுங்க அப்பதா எல்லார்க்கும் நல்லா புரியும்..........
உங்க தோழிக்கு மொதல்ல வருத்தமா தா இருக்கும் ஆனா கால போக்கில் சரி ஆயிடும்.. உங்க தோழியின் வயது என்ன? தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன் தப்பா எடுத்துக்க வேண்டாம். இன்னும் அனுபவம் வாய்ந்த தோழிகள் வயதுக்கு ஏத்த மாதிறி அறிவுரை தருவாங்க அதனால தா.....
அன்புடன்
லதா....

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

en thozhai vayathu 22yrs pa next time tamil la type pannaren dis time excuse me fnrd

en thozhai vayathu 22yrs pa next time tamil la type pannaren dis time excuse me fnrd

மேலும் சில பதிவுகள்