செனக பப்பு பூரில்

தேதி: August 21, 2011

பரிமாறும் அளவு: 4 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

கடலை பருப்பு-1கப்
வெல்லம்-1கப்
ஏலக்காய்-2
தேங்காய் துருவியது-1கப்
தோசை மாவு-1கப்
எண்ணெய்-பொரித்தெடுக்க தேவையான அளவு


 

1.கடலை பருப்பை கழுவி சுத்தம் செய்து பின் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் 3 (அ)4 விசில் வரும் வரை விட்டு இறக்கவும்.

2.வெந்த கடலை பருப்பில் உள்ள நீரை நன்றாக வடித்து கொள்ளவும்.

3.கடலை பருப்பை மிக்சியில் துருவியது போல அரைத்து எடுத்து கொள்ளவும்.

4 அரைத்த கடலைபருப்புடன் வெல்ல தூளை கலந்து அடுப்பில்வைத்து சுருள கிளரவும்.

5.பூரணம் நன்கு சுருள வரும் போது அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

6.இந்த பூரணம் ஆறியவுடன் உருண்டை பிடித்து வைத்து கொண்டு தோசை மாவில் முக்கி காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

7.சூடான செனகபப்பு பூரில் ரெடி


தோசை மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கவேண்டும்.
மைதா மாவு சுசியத்தை விட இது நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்