பட்டிமன்றம் - 48,இன்றைக்கு மனிதாபிமானம் வளர்ந்து வருகிறதா? தேய்ந்து வருகிறதா?

வணக்கம் தோழிகளே,
பட்டிமன்றத்தின் தலைப்பு "இன்றைக்கு மனிதாபிமானம் வளர்ந்து வருகிறதா? தேய்ந்து வருகிறதா?",இத்தலைப்பைக் கொடுத்த தோழி ஆயிஸ்ரீ அவர்களுக்கு நன்றிகள் பல......
இன்றைய அவசர உலகில் அவரவர் வேலைகளை மட்டுமே கவனிக்கும் சூழ்நிலை இருக்கின்றது.இதற்கிடையில் நமது மனிதாபிமானம் எந்தளவு உள்ளது என்பது விவாதித்து தெரிந்து கொள்ள வேண்டியதாகிவிட்டது....
தோழிகள் தங்கள் அணியை தேர்வு செய்துவிட்டு வாதங்களுடன் வாருங்கள்..........

1. பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.
2. பெயர் சொல்லி அழைப்பதோ,கட்சி,மதம் சார்பாக பேசுவதோ கூடாது.
3. கடுமையான வார்த்தை பிரயோகங்களோ,தாக்கிப்பேசுவதோ கூடாது.

வணக்கம்... நல்ல ஒரு தலைப்பை தந்த ஆயிஸ்ரீக்கு நன்றிகள் பல. நேரத்தோடு பல வேலைகளுக்கு நடுவே பட்டியை துவங்கிய நடுவருக்கு வாழ்த்துக்கள், நன்றி.

மனிதாபிமானம் தேய்ந்து வருகிறது - என்பதே என் வாதம். நாளை வருகிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல தலைப்பு ரேணுகா. மனிதாபிமானம் கூடிக்கொண்டே வருகிறது பக்கம் பேச முடிவெடுத்துள்ளேன்..........
நேரம் இருக்கும் போது பதிவிடுகிறேன்

பட்டி நல்ல முறையில் நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இன்னைக்கு மனிதாபிமானம் செத்துபோச்சு அப்படின்னு பேச நிறைய பேர் வருவாங்க நடுவரே.. ஏன்னா அவங்க சிந்தனை குருகிய வட்டத்துக்குள்ளையே சுத்திட்டு இருக்கும். கொஞ்சம் அந்த வட்டத்த விட்டு வெளிய வந்து பாக்க சொல்லுங்க. நல்லா சமுதாயத்த உற்று நோக்க சொல்லுங்க. முந்தைய காலத்துக்கும் இன்றைய காலத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் ஆகியிருக்குன்னு? பொருளாதரத்துல மட்டும் இல்ல, மக்களின் மனிதாபிமானத்துலையும் இன்றைய மக்கள் முன்னிலையில் தான் இருக்காங்க.

சதி இன்னைக்கு இருக்கா நடுவரே?
பெண்சிசு கொலை இருக்கா?
இதெல்லாம் சமூக சீர்த்திருத்தம்னு தயவு செய்து முலாம் பூச நெனைக்காதீங்க. இன்னைக்கு இதெல்லாம் ஒழிய காரணம் மக்களின் மனதில் மனிதாபிமானம் சாகாமல் வளர்ந்திருப்பதே....... அது மட்டுமே...

ஆக இன்னும் சமுதாயத்தில் மனிதாபிமானம் வளர்ந்துக்கொண்டு தான் நடுவரே இருக்கு..........

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாருங்கள் வனி மற்றும் அமீனா .....உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்........
இரு அணிகளுக்கும் தலைமையாளர்கள் வந்தாகிவிட்டது,அணித்தோழிகள் சீக்கிரம் வரவேண்டும்........

பாராட்டுக்கள் நடுவரே சிறந்ததொரு தலைப்பை தேர்ந்தெடுத்து சரியான சமயத்தில் பட்டியை ஆரம்பித்துள்ளீர்கள்.;-)

எனக்கு ரொம்ப நாளா இந்த தலைப்பு மேலதான் கண்ணு.. சரியான சந்தர்ப்பம் கிடைக்காமயே போயிருச்சு;(

இதுக்காக உங்ககிட்ட தனியா சண்டைபோடறேன்;-) இப்ப பட்டியில தோழிகள்கிட்ட சண்டைபோட தயாராகுறேன்;)) தற்பொழுது நேரம் கிடைக்கும்போது என் வாதத்தை பதிவிடுகிறேன் நடுவர் அவர்களே.

ஆமி சமத்தா வந்துட்டீங்க;) இருங்க இருங்க நானும் சீக்கிரமா வரேன்;))

Don't Worry Be Happy.

வாருங்கள் ஜெயா,
தங்கள் வரவு நல்வரவாகுக.......சரி எந்த அணின்னு சொல்லவே இல்லையே......

இன்றைய இயந்திரத்தனமான உலகில் மனித நேயத்தை தேடித்தான் காண வேண்டும் ? அப்போதாவது கிடைக்குமா? நடுவர் அவர்களே ஒரு கடி ஜோக் படித்தேன் அதாவது // எனது அடுத்த வீட்டுக்காரனும் அமெரிக்கா போல்தான் எனது வீட்டில் மத்தாப்பு வெடிக்க அவனிடம் அனுமதி பெறவேண்டும்// இப்படித்தான் இருக்கிறார்கள் மனிதார்கள். எங்கே பார்த்தாலும் சண்டை சச்சரவு , ஒரு அடி காணித்துண்டுக்காக வருடக் கண்க்கில் வழக்காடுகிறார்கள், நீ வைத்துக் கொள் என்ரு இவர்கள் விடுவதுமில்லை, எங்களுக்கு வேண்டாம் என்று அவர்கள் விடுவதுமில்லை. எங்கேங்க மனித நேயம்? உன்னை நான் முந்த வேண்டும் என்ற சித்தாந்தம் தான் இருக்கிறதே தவிர மற்றவர்களை ப் ப்ற்றி சிறு துளியாவது கருணை யாரிடமும் இல்லை, பிள்ளையின் படிப்பு தொட்டு கண்வனின் வேலை வரைக்கும் சுயநலம் ம்ற்றுமே இருக்கிறது.

.. மீண்டும் வருவேன் வேலைப்பளு காரண்மாக விடை பெற்கிறேன்

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

இன்றைய உலகில் எல்லாமே காசு!!! மனிதாபிமானம்... அது வெறு பேச்சளவில்!!

1. மருத்துவரிடம் போனா நமக்கு இருக்க பிரெச்சனையை போக்கி, கவலை போக்கி நம்மை குணப்படுத்தும் எண்னத்தைவிட எத்தனை டெஸ்ட் எழுதலாம், எவ்வளவு பணம் பார்க்கலாம் என்ற எண்ணமே அவங்களுக்கு அதிகமா இருக்கு. உயிறை காக்கும் புனிதமான வேலையில் இருக்கும் அங்கையே அப்படின்னா... மற்ரதெல்லாம் நான் சொல்லனுமா???

2. அட ரோட்டுல எவனாவது அடிபட்டு கெடந்தா பார்த்துட்டு பார்க்காத மாதிரி போவோம்... ஏன்னா நம்ம வேலை நேரத்துக்கு ஆகனுமே. இவங்களை பார்த்தா ஆகுமா??? மனிதாபிமானம் அதிகம் தானே???

3. நமக்கு வேலை ஆனா போதும் என்று லஞ்சம் கொடுக்கறோம்... இருக்கப்பட்ட நாம கொடுக்கறோம்... இல்லாதவன் என்ன பண்ணுவான்னு யோசிப்பதில்லை. இன்னைக்கு அண்ணா போல யாரவது தெருவுக்கு வந்து போராடினா டிவியில் பார்த்துட்டு சபாஷ் போடுவோம். ஆனா நாம வர மாட்டோம்... எதுக்கு வீண் பிரெச்சனை?? நமக்கு குடும்பம் இருக்கே... மனிதாபிமானம் அதிகம் தான் நமக்கு!!!

4. பிறந்த பெண் பிள்ளையை ஹாஸ்பிடலில் மாடியில் இருந்து வீசிய தாய்... காட்டினாங்க டிவியில். பாவம் பிறந்த சில மணி நேரத்தில் துடித்து போனது அந்த சிசு. மனிதாபிமானம் அதிகம் தான் அந்த தாய்க்கு!!!

5. பெற்றவர்களுக்கு உடல் நலமில்லை.. படுத்த படுக்கை... யார் பார்ப்பது? நமக்கு தான் ஆபீஸ் குடும்பம்னு நிறைய வேலை இருக்கே... கொண்டு போய் முதியோர் இல்லத்தில் விட்டுட்டு பணம் கட்டிக்கலாம்... முடிஞ்சா மாசம் ஒரு முறை போய் பார்த்துட்டு வரலாம். சிறு வயதில் எனக்கு அவங்க எல்லாம் செய்தாங்க, உண்மை அது அவங்க கடமை!!! இப்போ என்னால் முடியாதே. மனிதாபிமானம் இன்றைய பிள்ளைகளுக்கு அதிகம் தான்!!!

இன்னும் பட்டியல் போடலாம்... இருங்க வரேன். இப்ப நேரம் இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாருங்கள் பூங்காற்று நீங்களும் தேய்கின்றது அணியா? இன்னும் வாதங்களுடன் வாருங்கள்.....
மனிதாபிமானம் தேய்ந்து வருகின்றதுன்னு நிறாஇய காரணங்கள் வரத்துவங்கியுள்ளன.......நமது வளர்கின்றது அணியைக் காணோமே....
வாருங்கள் சீக்கிரம்,
நீங்கள் சொல்வது உண்மையா வனி? குழந்தையை மாடியிலிருந்து வீசிட்டாங்களா?நான் பார்க்கவில்லை....

//ஆமி சமத்தா வந்துட்டீங்க;) //
எல்லாம் ரேனுக்காக தான் :) ஹி..ஹி..ஹி....
/// எனது அடுத்த வீட்டுக்காரனும் அமெரிக்கா போல்தான் எனது வீட்டில் மத்தாப்பு வெடிக்க அவனிடம் அனுமதி பெறவேண்டும்////
இதுலையும் மனிதாபிமானம் இருக்குங்க. ஒருத்தன் போடுற வெடியால ஊர்ல உள்ளவங்களாம் ஹார்ட் அட்டாக் வந்துட கூடாதே.... சின்ன குழந்தைங்க பயந்துட கூடாதே..... கர்பிணி பெண்கள் நலத்தில் குறைபாடு வந்துட கூடாதே..... இது போன்ற உயரிய எண்ணங்கள் என்னும் மனிதாபிமானத்தின் காரணமாக தான் வெடி போடுறத வேண்டாம்னு சொல்லுறாங்க.

//நீ வைத்துக் கொள் என்ரு இவர்கள் விடுவதுமில்லை, //
உங்க கிட்ட இருக்குற பத்து பவுன் நகைய அப்படியே எனக்கு தாங்கன்னு கேட்டா நீங்க கொடுப்பீங்கலா? இல்ல நடுவர் தான் கொடுப்பாரா? தன் உடைமையின் மீதான உரிமைக்கும் மனிதாபிமானத்துக்கும் சம்மந்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

முன்பெல்லாம் எங்கே சமூக சீர்த்திருத்தம் இருந்துச்சு? அனாதையா ஒரு குழந்தை குப்பை தொட்டிக்குள் கிடந்தா வருங்காலத்தில் அது பிச்சை காரனாகவோ அல்லது கொள்ளைகாரனாகவோ தான் உருவாக்கப்படும். ஆனா இப்ப ஒடனே ஒரு போன் போட்டு ஆவன செய்றாங்க. எதனால? மனிதாபிமானம் இல்லாமலா ?
எங்கோ ஒரு நாய்... அதுக்கு அடிபட்டா நமக்கென்னன்னு போறதில்லையே... தன்னால் முடியவில்லை என்றாலும் ப்ளூக்ராஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டு உயிர் காக்கப்படுதா இல்லையா?

//அட ரோட்டுல எவனாவது அடிபட்டு கெடந்தா பார்த்துட்டு பார்க்காத மாதிரி போவோம்... ///
அடிபட்டவன் நமக்கு தெரிஞ்சவனா இருப்பானோ? ஐய்யோ பாவம்னு மனசுக்குள்ள வேதன படாம யாராலும் அந்த இடத்தை விட்டு நகல முடியாது என்பதே உண்மை. சட்டங்கள் சாமானியர்களுக்கு எதிராக இருக்கும் போது மனிதாபிமானம் தடை செய்யப்பட்டு விடுகிறது. ஆனாலும் 108க்கு போன் போட்டு சொல்றாமா இல்லையா? நம்மனால நேரடியா இறங்க முடியல்லன்னாலும் நம்மனால முடிஞ்ச உதவிய செய்றோமா இல்லையா?

அன்னைக்கு இருந்த காந்தி, அண்ணா மாதிரி தான் இன்னைக்கும் சமூக தொண்டு செய்றவங்க இருக்காங்க. மனிதாபிமானம் இல்லாமலா செய்றாங்க? மவுண்ட் ரோட்ல பெரிய கட்டவுட் இருந்தா நமக்கென்ன? அத பாத்து ஒருத்தன் ஆக்‌ஷிடண்ட்ல செத்தா நமக்கென்னன்னு ட்ராபிக் ராமசாமி நெனைக்கலையே? மனிதாபிமானம் வளர்ந்ததால் தான் இன்று பல தீர்வுகளை நோக்கி நாம் பயணிக்கிறோம் நடுவர் அவர்களே....

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்