3 வது மாத கர்ப்பம் Bleeding அவசரம்.

சகோதரிகளுக்கு வணக்கம்.
என் மனைவிக்கு இது 9வது வார கர்ப்பம் (இரண்டாவது குழந்தை,முதல் குழந்தை சிசேரியன்) லேசான ப்ளீடிங் ஆனது, டாக்டரிடம் சென்றோம், அவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு, எதுவம் பிரச்சினை இல்லை, குழந்தை நன்றாக உள்ளது. என்று கூறி போலிக் அசிட் மற்றும் விட்டமின் டேபிலேட் குடுத்து உள்ளனர். ஏன் இதுபோல் ப்ளீடிங் பிரச்சனை வருகின்றது? நான் மிகவும் பயந்துவிட்டேன், யாரேனும் விளக்கம் கொடுங்கள் தோழிகளே.

பயம் வேண்டாம்... சில பெண்களுக்கு இது போல் ஆகும். குழந்தை நல்லா இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டாங்க தானே... சாப்பாட்டில் கவனம் தேவை. உடல் சூடை அதிகமாக்கும் எதுவும் எடுத்துக்க வேண்டாம்னு சொல்லுங்க. ஆரோக்கியமா பிள்ளை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் சொந்தகாரபொண்ணுக்கு இதுமாதிரி ஆகி, அவங்க நல்லபடியாக குழந்தை பெற்றெடுத்தாங்க. கவலைவேண்டாம். நல்லா ரெஸ்ட் எடுக்கணும். கனமான பொருளை தூக்ககூடாது.

சிலருக்கு குழி நிரம்பி வரும் பயம் வேண்டாம்

சிலருக்கு மூன்று மாதம் வரை ப்ளீடிங் இருக்கும். இதற்கு நீங்கள் பயம் கொள்ள தேவை இல்லை.
brownish கலர் எனில் நோ ப்ரோப்லேம். பிங்க் , reddish என்றல் கவனம் எடுங்கள்.
உங்கள் மனைவிக்கு implantation ப்ளீடிங் தான் என நினைக்கிறன். கரு நன்கு தங்கும் போது இது நிகழும். அனால் கருவை பாதிக்காது.

பதில் அளித்த சகோதரிகளுக்கு நன்றி, நீங்கள் கூறிய அறிவுரைகளை பின்பற்றசொல்கிறேன்.
Rabiathul Basariya அவர்களே குழி நிரம்பி வரும் என்றால் என்ன?
எங்களின் முதல் குழந்தை (14 month baby) இன்னும் தாய் பால் மறக்கவில்லை, எப்போது நிறுத்த வேண்டும்? எவ்வாறு மறக்கடிப்பது?

some ladies wil get bleeding until delivery if they r so weak. dont worry she will be ok, with gud food n rest.i fed my first kid until delivery. but the doctor asked me to stop earlier as it may cause pain n abdomen and it will fasten the delivery.but nothing harm but she have to eat very healthy food for 3.but as she s weak its better to stop feeding.

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

தாய்பால் மறக்க வைப்பது தான் சரி... இந்த நேரத்தில் தாய்ப்பால் கொடுத்தால் அது முதல் குழந்தையின் வயிற்றுக்கு ஒத்துவராது. குழந்தைக்கும் வயிற்று வலி ஏற்படுத்தும். 14 மாதம் ஆகிட்டுதே... சாப்பிட கொடுங்க, இரவில் நல்லா ஃபார்முலா மில்க் வயிறு நிரைய கொடுத்து உங்க கூட தூங்க வெச்சுக்கங்க. மனைவியிடம் விடாதீங்க ஒரு 1 வாரத்துக்கு. தானாகவே பால் மறந்து போகும். குழந்தை பசி என அழும் முன் வயிற்றுக்கு உணவும், மில்கும் கொடுக்க பழகுங்க... தானா தாயை தேடாமல் விட்டுடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி சகோதரி,
எங்கள் குழந்தை பீடிங் பாட்டிலில் குடிப்பதேல்லை, பாலாடை யில் தான் குடிப்பட்டுகிறோம். மற்ற படி என்னுடைய பிரேக் டைமில் நான் அவ்வப்போது இட்லி, தோசை, சாதம், ஊட்டுகிறேன். (என் மனைவி ஊட்டுவதற்கு கஷ்டப்படுகிறாள்)

ஃபீடிங் பாட்டில் பிடிக்கலன்னா சிப்பர் டைப் ட்ரை பண்ணுங்க. எதையுமே ஒரு முறை கொடுத்து மிட்யலன்னு விடாதீங்க... அவங்க விரும்பி குடிக்கும் எதையாவது அதில் ஊற்றி கொடுத்து பழகுங்க, அப்பறம் எதை கொடுத்தாலும் குடிப்பாங்க. தண்ணி நல்லா குடிப்பாங்கன்னா தண்ணியை ஃபீடிங் பாட்டில் அல்லது சிப்பரில் கொடுங்க. அதில் குடிக்க பழகிய பின் பால் ஊற்றி கொடுங்க. திட உணவு இந்த வயதில் அவசியம்... விடாம கொடுங்க. அவங்களுக்கு இப்போ உட்கார்ந்து ஊட்ட சிரமமா தான் இருக்கும்.. கொஞ்ச நாள் நீங்க தான் பார்த்துக்கனும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்கு எந்த கேள்வி கேட்டாலும் சலிக்காமல் வந்து அருமையாகவும் உபயோகமாகவும், ஆறுதலாகவும் பதில் அளித்தமைக்கு வனிதா சகோதரிக்கு எனது நன்றிகள்.
நீங்கள் கூறியபடி ஃபீடிங் பாட்டிலில் தண்ணீர் மட்டும் குடிக்கிறான், 6 மதமாக முயற்சிக்கிறோம் பால் மட்டும் குடிப்பதில்லை

மேலும் சில பதிவுகள்