*** அரட்டை கார்னர் - இங்கே யாரும் பார்க்காதீங்க!!! ***

யாரும் இங்கே அரட்டை அடிக்காதீங்க!!! அதாவது போன அரட்டையில நான் தலைப்பில சொன்னதை யாருமே பார்க்கலன்னு நினைக்கிறேன். ஒரு வரி.... ஒரு வார்த்தை.... அரட்டையை சற்று குறைத்து பயனுள்ள விஷயம் பேசுவோம்...

# இன்றைய கல்வி முறை...
# இன்றைய பொருளாதாரம்....
# மக்களின் நிலை....

இப்படி நிறைய இருக்குல்ல!!!

இன்று மாட மாளிகை முதல் குடிசைகள் வரை டிவி இல்லாத வீடு இல்ல... அதில முக்கியமா சமையல் நிகழ்ச்சி இல்லாத டிவி சேனல் இல்ல... இப்படி இருக்க போக... அதில சமைக்கிறவங்க பயன்படுத்தும் பொருட்கள்.... கண்டிப்பாக பெரிய நகரங்களில் வாழும் சிலருக்கு தான் தெரிந்து இருக்கிறது. எல்லோருக்கும் பாமர மக்களுக்கு, அது தெரிவதில்லை.... இதை ரொம்ப ஈசியா செய்யலாம், மைக்ரோவேவ் அவனில் சமைக்கலாம் இப்படி எல்லாம் சொல்வதோடு மட்டுமில்லாமல் அவங்க பேசறதுல்ல தமிழ் வார்த்தையை தேடி... ஆகா இந்த வார்த்தை தமிழில சொல்லிட்டாங்கன்னு நாம சொல்ல வேண்டியிருக்கு!!!
இதுல தமிழை வளர்க்கிரோம்னு பேசறவங்க கூட தமிழ் பேசறதில்லை. நம் மாநிலத்தில மற்ற மாநிலத்தவர்கள் இருக்கலாம்...அவங்களுக்கு தமிழ் தெரியாது என்று காரணம் சொல்லலாம். இப்படி சில காரணம் சொல்லலாம்....ஆனால் யாரு இங்கே அதிக பட்சம். சொந்த ஊர்காரங்க தானே!!! எங்கே போகிறது தமிழ் தேசம்!!!

இங்கேயும் தான் சிலர் தமிழை சரியா எழுதாம.... கொல்றாங்க!!!

கல்வி முறையும் பொருளாதாரமும் பற்றி நீங்க என்ன செய்யலாம்னு யோசனை சொல்லுங்களேன்
எனது யோசனை இன்றைய மெக்காலே கல்வி முறை மாறனும்
ஆன்லைன் ட்ரேடிங் ஒழியனும்

மேலும் சில பதிவுகள்