பொட்லக்காய் பச்சடி

தேதி: August 23, 2011

பரிமாறும் அளவு: 4பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புடலங்காய்-1
பச்சை மிளகாய்-10
ஜீரகம்-2ஸ்பூன்
பூண்டு-10பல்
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
புளி -தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
கடுகு,உ.பருப்ப,க.பருப்பு-தலா ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிது
பெருங்காய தூள்


 

புடலங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாயை வதக்கி எடுத்துகொள்ளவும்

அதே வாணலியில் கட் செய்து வைத்துள்ள புடலங்காயையும் பச்சை வாசனை போகும் வரை சிம்மில் வைத்து வதக்கவும்.

காய் நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு,அதற்க்கு தேவையான புளியை சூடான காயின் உள் புதைத்து வைப்பது போல வைக்கவும்.

மிக்சியில் பச்சை மிளகாய்,ஜீரகம்,காயின் உள் வைத்திருந்த ஊறிய புளி,பூண்டு,உப்பு சேர்த்து அரைக்கவும்

அடுத்து அதனுடன் காயையும் போட்டு லேசாக ஒரு சுற்று சுற்றவும்.காய் லேசாக துருவியது போல அரைக்கவும்.

இதை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொண்டு சிறிது எண்ணெயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து பச்சடியில் ஊற்றி கிளறவும்.

பொட்லக்காய் பச்சடி ரெடி.


சூடான சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

இந்த பச்சடியில் தயிர் கலந்தும் சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சுந்தரி குறிப்பு கொடுக்க ஆரம்பிச்சா. நான் இன்னைக்கு தான் பார்க்குறேன். இனி ஹைத்ராபாத் குறிப்பு நிறைய பார்க்கலாம். புடலங்காய் பொட்லக்காய்னு சொல்லுவாங்களா சுந்தரி. மூனு குறிப்பு பேருமே வித்தியாசமா இருக்கு. வாழ்த்துக்கள்.

ஹாய் வினோஜா எப்படியிருகிங்க,வாழ்த்துக்களுக்கு நன்றிபா.புடலங்காய் தான் பொட்லக்காய் தெலுக்கில்.இந்த குறிப்புக்களை செய்து பாருங்க.

சுந்தரி,

பச்சடி நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வாழ்த்துக்களுக்கு நன்றி கவிதா.சீனியரான நீங்க வாழ்த்துவது பெருமையா இருக்கு.