8 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

என் மகனுக்கு 7மாதம் முடிந்து 8வது மாதம் ஆரம்பித்து இருக்கிரது........அவனுக்கு என்ன உணவு கொடுக்கலாம்?பருப்பு சாதம் முட்டை மஞ்சட் கரு குடுக்கிறேன் எதை கொடுத்தாலும் வாய்க்குல்லேயே வைத்து துப்பி விடுகிறான் என்ன செய்வது...???

என் மகனுக்கு 7மாதம் முடிந்து 8வது மாதம் ஆரம்பித்து இருக்கிரது........அவனுக்கு என்ன உணவு கொடுக்கலாம்?பருப்பு சாதம் முட்டை மஞ்சட் கரு குடுக்கிறேன் எதை கொடுத்தாலும் வாய்க்குல்லேயே வைத்து துப்பி விடுகிறான் என்ன செய்வது...???

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

unga pullaiku sapadu pidikalana just avana katayapaduthathega pavam chinna pulla la en paiyanukum epo 8 month tha start agapoguthu nega avanuku ceralac wheat and fruits koduthu paruga dall satham kodutha pudikalana curd rice koduga oray mare sapadua pudikathu pullaigaluku

epovay egg yellow kodukathega oru 9 and 10 month ku mela kodukalam ninaykuran na kuda kudukalam partha but othukathu nu vituta nega morning and evening cerelac koduga and orange juice solid a koduga afternoon and rice only mixi la grining pani lite salt potu koduga so oru vela mathe kodutha sapidalam illya paruga

பருப்பு சாதம்,தயிர் சாதம்,உளுந்த பருப்பு சாதம்,கராட் சூப் கொடுங்க,முட்டை மஞ்சள் கரு கொடுங்க, வெள்ளை இப்போ வேடாம்.என் மகளுக்கு 10 மாதம் ஆரம்பம்,நான் இன்னும் வெள்ளை கொடுக்கவே இல்லை.மலைவாழைப்பழ்ம் கொடுங்க,ஆப்பிளை இட்லி தட்டில் வேகவைத்து மசித்து கொடுங்க,Lion dates m இட்லி தட்டில் வேகவைத்து மசித்து கொடுக்கலாம். உங்கள் மகன் நன்றாக தவ்ழ்வானா?

ரொம்ப நன்றி இப்ப 1 வாரமா தான் நல்லா தவழ்ரான் நீங்க சொன்ன உணவுகளை ட்ரை பன்னி பாக்குரன் உங்க மக என்ன செய்றா?

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

ரொம்ப நன்றி cerelaccum saappudaraan ila

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

என் மகளுக்கு இன்றோடு 9 மாதம் முடிகிறது.அவள் வயிற்றில் தான் தவழ்கிறாள்,
ragi kanchi kodunga

ஹாய் ரிசானா

அரிசி,துவரம் பருப்பு வறுத்து அதனுடன் (cashewnut ,pista ,பாதாம் ) சேர்த்து அரைத்து ,கொஞ்சம் உப்பு போட்டு கஞ்சி போல் காய்த்து கொடுங்கள். கீரை சாதம் ,பிஸ்கட் கொடுங்கள்.எதாவது குட்டீஸ் கு பிடிக்கும் பொருள் கையில் கொடுத்து விட்டு உட்டுங்கள்..நன்றாக சாப்பிடுவார்கள்..

குழந்தைக்கு இப்போவே திட உணவு கொடுக்க வேண்டாம். ஏழு எட்டு மாதம் தானே ஆகிறது.....பத்து மாதத்திற்கு அப்புறம் ட்ரை பண்ணினால் போதும். இப்பொழுது சூப் கொடுங்கள்.ஏழு மாதம் தான் ஆகிறதனால் அவர்களுக்கு ஒருவேளை முழுங்க கடினமாக இருக்கலாம்....அதனால் இப்பொழுது சாதம் கொடுக்காமல் கஞ்சி சூப் மாதிரி கொடுத்துப் பாருங்கள். காய்கறிகளை வேகவைத்து கொடுக்கவும். பழங்கள் கொடுக்கவும். முதலில் இட்லி ட்ரை பண்ணுங்க அப்புறம் சாதம் கொடுக்கலாம். ம்சுதலில் திட உணவு ஆரம்பிக்கும் போது சிறதளவு அரிசி அதில் கால் வாசி பொட்டுக்கடலை ஒன்றிரண்டு சீரகம் மிளகு சேர்த்து பொடியாக திரித்து வைத்துக் கொண்டு....தேவைப்படும் போது ஒரு ஸ்பூன் அளவு எடுத்து கஞ்சி காய்ச்சி உப்பு போட்டு கொடுக்கவும். முதலில் சர்க்கரை பழக்காதீர்கள். ராகி கஞ்சி கூட கொடுக்கலாம். எது கொடுப்பதாக இருந்தாலும் முதலில் சிறிதளவு கொடுத்துவிட்டு ஒரு நாலு நாள் வேற எந்த புது உணவும் தரக் கூடாது. அது அவர்களுக்கு ஒன்று செய்யவில்லை என்றால் தான் வேறு உணவை ட்ரை பண்ணலாம். முதலில் ஒரு உணவை பழக்கும் போது ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் அதே உணவை பழக்கவும். எப்பொழுதுமே குழந்தையை கட்டாய படுத்தாதீங்க......பசித்தால் கண்டிப்பாக சாப்பிடுவார்கள். கட்டாயப் படுத்தினால் அவர்களுக்கு அதன் மேல் ஒரு வெறுப்பு வந்து விடும்.

குழந்தைகளின் சாப்பாடு பற்றி மன்றத்தில் எக்கச்சக்க இழைகள் இருக்கின்றது. பொறுமையாக ஒவ்வொன்றாக படித்தால் நீங்களே ஒரு புத்தகமே எழுதி விடுவீங்க....வாழ்த்துக்கள் :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரொம்ப நன்றி பா உங்க பதிலுக்கு நீங்க சொன்ன உணவுகளை ட்ரை பன்னி பாக்குரன்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

மேலும் சில பதிவுகள்