அமெரிக்காவில் உள்ள அறுசுவை தோழிகள் நலமா.

..
இன்று மதியம் 2 மணியளவில் அமெரிக்காவில் ( நேரப்படி நள்ளிரவு சுமார் 12 மணி) நில நடுக்கம் ஏற்பட்டது.... நான் இருக்கும் இடத்தில் லேசான நில அதிர்வினை முதல் முறையாக உணர்ந்து ரொம்ப பயந்துட்டேன்... நம் தோழிகள் அனைவரும் நல்லார்கீங்கள?????

அன்புடன் அபி

நலம்.
வழக்கமா இங்கே தான் வரும்... இப்போ அங்கேயா!!! எனக்கு இதுவரை தெரியாது.

அமெரிக்காவில் நில நடுக்கம் என்று இப்பொழுது தான் தெரியும் மனது பதறி விட்டது அறுசுவை தோழிகள் அனைவரும் எப்படி இருக்கீங்க எந்த பிரச்சனையும் இல்லை தானே . 5.8 என்று சொன்னார்கள் இதே நிலை இங்கும் வந்தது அதனால் தான் பயமாக உள்ளது இறைவன் அருளால் எந்த மக்களுக்கும் எந்த பாதிப்பும் வராமல் இருக்க வேண்டுகிறேன்.

அன்புடன் கதீஜா.

pops

நீங்க எங்க இருக்கீங்க... வழக்கமா ஒங்க ஏரியா ல வருமா!!!!

--

அன்புடன் அபி

seyedkatheeja

நான் இன்னைக்கு தான் உங்கட்ட பேசுறேன் பா.. நீங்க நலமா... என் கணவர் சொன்னார், ஜப்பான் ல அடிக்கடி நிலநடுக்கம் வருமாம்ல... அப்படியா

அன்புடன் அபி

அபி என்னப்பா நில நடுக்கமா? நீங்க எப்படி இருக்கீங்க இந்த மாதிரி நேரதுல பார்த்துபா கவனமா இருங்க இதை கேட்டதும் மனசுக்குள் ஒரு கவலை உடம்பு எப்படி பா இருக்கு எதும் கவலை படாம இருங்க எல்லாத்துக்கும் இறைவன் இருக்கான் நான் ப்ரார்த்திக்கிறேன்

merzana

நான் நலம் பா... நேத்து தான் நான் ரொம்ப பயந்த்டேன்... எனக்கு நிலநடுக்கம் இதுதானாநு உணர்ந்து வீட்ட விட்டு வெளில வர்றதுக்கே கொஞ்ச நேரம் ஆய்டுச்சு... பயத்துல!!!! இப்ப ஒன்னும் பிரச்சன இல்ல... தங்கள் பிரார்த்தனை மிக்க நன்றி பா... குட்டிஸ் நலமா????

அன்புடன் அபி

தோழிகள் எப்படி இருக்கீங்க?நேத்து நில நடுக்கம் ரொம்ப பயந்துட்டோம்ப்பா.பயங்கர சத்தம், வீடே ஆடுவதுபோல் இருந்தது.சிறிது நேரத்திற்கு ஒன்றுமே புரியவில்லை.பிறகு புரிந்ததும் பயம் அதிகமாயிற்று.ஆனால், ஆண்டவனருளால் எல்லாரும் நலம்.

கலிப்போர்னியாவில் அடிக்கடி வரும். கடந்த மாதம் தான் இங்க பிலடெல்பியா வந்தோம், கையோட நிலநடுக்கத்தையும் கூடி வந்தோம் போல, இங்க பிலடெல்பியா மாகாணத்தில் நிலநடுக்கம் இதற்கு முன்னால் வந்தது இல்லை போல. அபி எப்போழுதும் சிறிது எச்சரிக்கையாவே இருங்க. நீங்க எங்கே இருக்கீங்க?

hi priyakrish
நீங்க USல எங்க இருக்கீங்க... உங்க வீட்டுல பொருட்கள் எல்லாம் கீழ விழுந்துச்சா??????

அன்புடன் அபி

hi vidhya
நான் NC ல இருக்கேன் பா... இதுக்கு முன்னாடி இங்க இப்டி வந்ததே இல்லையாம்... எனக்கு நில அதிருவை உணர்வதற்கே கொஞ்ச நேரம் ஆய்டுச்சு...!!!!!!!!!!!!!!!!!!!
--

அன்புடன் அபி

மேலும் சில பதிவுகள்