கால் மிகவும் ஒல்லியாக இருக்கு

என் பெண்ணுக்கு 9 மாதம்,அவள் கால் மிகவும் ஒல்லியாக இருக்கு,என்ன செய்வது,(கொலுசு போடும் இடம்) ஆனால் அவள் ஒல்லியாக தான் இருப்பாள்.ஏதாவது பிரச்சனையா இருக்குமா,

மகள் பிடிச்சு எழுந்து நிக்கறாங்களா??? நின்னா கவலை வேண்டாம். ஒல்லியா இருப்பது பிரெச்சனை இல்லை... காலுக்கு பலம் இருந்தா போதும். நல்ல உணவு கொடுங்க. முடிஞ்சா தினமும் தேங்காய் எண்ணெய் தேய்த்து குளிக்க வைங்க. பலம் இல்லை காலுக்குன்னு தோணுச்சுன்னா அரிசி கழுவும் நீரை கொதிக்க வைத்து வெது வெதுப்பா இருக்கும் போது குழந்தை காலில் ஊற்றி விடுங்க. கால் ஒல்லியா இருப்பதால் பிரெச்சனை என்றெல்லாம் இல்லை. பயம் வேண்டாம் தோழி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி பா, பிடித்து எழுந்து நிக்கிறாள்,வாக்கரில் நடப்பாள்,அரிசி கழுவும் நீரை கொதிக்க வைத்து வெது வெதுப்பா இருக்கும் போது குழந்தை காலில் ஊற்றி விடுவேன்.எல்லாரும் என்ன சின்னதா இருக்குனு கேக்கிறாங்க,அதான் கவலையா இருக்கு.எனக்கு சொந்ததில் கல்யாணம் அதான் பயமா இருக்கு.நல்ல உணவு தான் தாரென்.ஆனால் ஒல்லியாவே இருக்காள்.என் மகளுக்கு இன்றோடு 9 மாதம் முடிகிறது.அவள் வயிற்றில் தான் தவழ்கிறாள்,எப்போ நன்றாக தவழ்வாள்.

அப்படின்னா மகள் இன்னும் முட்டு போடலயா? கவலைபடாதீங்க பீடியாட்ரீஷன் பார்த்தீங்களா? என்ன சொன்னாங்க? சில குழந்தைகள் சில நேரம் இப்படி தான் தாமதமா எல்லாம் பண்ணுவாங்க... என் நண்பர் மகனும் லேட்டா தான் முட்டு போட்டான். நீங்க பேசுறதை கவனிக்குறாளா? சத்தங்கள் கொடுக்கறாளா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமாம் இன்னும் முட்டி போடவில்லை, பீடியாட்ரீஷன் இன்னும் பார்க்கவில்லை,நாங்க பேசுறதை கவனிக்குறாள்.நல்லா கத்துவாள்,கை தட்ட சொன்னால்,கை தட்டுவாள்.

மேலும் சில பதிவுகள்