பயத்தம் உருண்டை (பயத்த லாடு)

தேதி: August 24, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

பயத்தம் பருப்பு - 1/2 கப்
ஜீனி - 1/2 கப்
நெய் - 1/4 கப்
முந்திரி - 15
ஏலக்காய் - 1


 

முந்திரியை நெய்விட்டு வறுக்கவும்.
அதே வாணலியில் பயத்தம் பருப்பை வறுக்கவும்.
வறுத்த பயத்தம் பருப்பை (தண்ணீர் இல்லாமல்) மாவாக அரைக்கவும்.
அதேபோல் ஏலக்காய் சேர்த்து ஜீனியையும் பொடியாக்கவும்.
நெய்யை சுடவைத்து பயத்த மாவு, அரைத்த ஜீனி, ஏலக்காயை, வறுத்த முந்திரி கலவையுடன் சேர்க்கவும்.
சூடாகவே மாவை உருட்டி உருண்டை பிடிக்கவும்.
சுவையான பயத்த உருண்டை (பயத்த லாடு) தயார்


மேலும் சில குறிப்புகள்


Comments

இதே முறையில் தான் நாங்கள் எப்பொழுதும் செய்வோம். என்னவொன்று முந்திரியை கிள்ளி தான் சேர்ப்போம். இல்லையென்றால் லட்டு பிடிக்கவே வராமல் உடைந்து விடும். எங்கள் வீட்டு கோகுலாஷ்டமியில் எப்பொழுதும் இதற்க்கு இடம் உண்டு. இந்த தடவையும் செய்தாயிற்று :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பதிவிற்கு நன்றி லாவண்யா. நானும் இந்த கோகுலாஷ்டமிக்கு செய்தேன் :-)

KEEP SMILING ALWAYS :-)

சுலபமான சுவையான குறிப்பு. நன்றாக இருந்தது நாகா. பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

பதிவிற்கும் வாழ்த்துக்கும் நன்றி இமா

KEEP SMILING ALWAYS :-)